விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
அந்த ரெகார்ட் நோட்டை முடிச்சுட்டு நீ வீட்டிற்குப் போகலாம் நித்யா என்றார் வேதியியல் ஆசிரியர் குரு. சார்! ரிசல்ட் சரியாக வரவில்லை! அதனால் மறுநாள் வந்து செய்து தருகிறேன். வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொம்மைகள் செய்யப் போகவேண்டும். பாடம் முக்கியமா! பிள்ளையார் பொம்மைகள் முக்கியமா? என்றார் குரு. ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள் நித்யா. ஏன் பேசாமல் நிற்கிறாய் நித்யா? ரெகார்ட்நோட் கொடுக்கவில்லை என்றால் மதிப்பெண் எப்படி தருவது? எனக் கேட்டபடி பரிசோதனைக்கூடத்தின் கதவுகளைப் பூட்டத் தொடங்கினார். நித்யா பயந்து நின்றாள். சார்! நீங்க வேறே ஏதோ தப்பா பண்ண நினைக்கிறார்போலத் தெரிகிறது. ஊரைக்கூட்டி சத்தம் போடுவேன் என மிரட்டத் தொடங்கினாள். சிரித்தபடி குரு உன்னைமாதிரி மாணவர்களை ஆசிரியர்கள் நிறைய பார்த்தாச்சு! என் வீட்டில் குடும்பம்னு ஒன்று இருக்கு! அவர்களுக்கு நான் சாப்பாடு போடணும். எனக்கு மணியாகிறது என்பதற்காகத்தான் கதவுகளைப் பூட்டினேனே தவிர நீ நினைப்பது போல அல்ல! நீ படித்தால் உனக்கு நல்லது. நான் எதற்கு உனக்கு வகுப்பறை நேரம் தவிர மீதி நேரம் கற்றுத் தரவேண்டும். உங்களது குடும்பம் ஏழைக்குடும்பம்மாதிரி எனது குடும்பமும் அப்படித்தான். நீ பொம்மை தயாரிக்க லீவு கேட்கிறாய். நான் பூ கட்டி வியாபாரம் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவவன். தோட்டத்தில் பழங்களையும் சேகரித்து விற்பனை செய்யப் புறப்படவேண்டும். நீ மதிப்பெண் வேண்டும் என்றால் லீவு முடிந்ததும் மறுநாள் வந்து ரெகார்ட்நோட் எழுது.....பிராக்டிகல் செய்யாமல் மதிப்பெண் தரமாட்டேன். பக்கத்து ஊரு பள்ளியில் சும்மா நோட்டைப் பார்த்து எழுதச் சொல்லி மதிப்பெண் போடுகிறார்கள். நீங்கள் மட்டும் இப்படி செய்தால் எப்படி? உனக்கு வந்திருப்பது லெட் நைட்ரேட். அதை நீ மனப்பாடமாகப் படித்திருப்பாய்? அதை எழுத என்ன தயக்கம்? மறுநாள் வேறு தந்து எழுத வைப்பீர்கள் என்றாள் . ஆமாம்! அதுதான் கல்வி. சும்மா நீ நினைத்தபடி காப்பியடித்து மதிப்பெண் வாங்கி பணியிடத்தில் என்ன செய்வாய்? எங்க அம்மா பணிக்கெலலாம் அனுப்ப மாட்டார்கள். சும்மா என் பிள்ளை நல்ல மார்க் எடுத்தால் போதும் என்று சொல்வார்கள். பெண்கோழி கூவி விடியவா போகுது! என்பார்கள் சார்! நான் இந்த பாடம் படிச்சுட்டு அதையே லீவு முடிஞ்சு எழுதட்டுமா சார்?
உனது அம்மா திருமணம் செய்து வைப்பார்கள், அதனால் கல்வி இது போதும் என்றால் எதற்காக இந்த வகுப்பிற்கு வந்தாய்? உங்களுக்கு பணம் வேண்டுமென்றால் அம்மாவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன். எனக்கு லோக்கலில் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் சார்! இந்த வகுப்பு முடிந்தவுடன் திருமணம். அரசு வேலையும் அவர் பார்த்து வைத்திருக்கிறார். அவர் என்ன வேலையில் இருக்கிறார்? பெரிய கட்சியில் இருக்கிறார் சார்! அதுக்குத்தான் ங்க அம்மா படிக்க வைச்சாங்க! வாழ்க்கைக்கு இது போதும்னு அம்மா சொன்னாங்க! பிள்ளையார் விற்று வரும் பணத்தில் பெரிய படிப்பா சார் படிக்க முடியும்...ஏதோ வேலை கிடைக்கிறது... அதுக்காககத்தான் படிக்கிறேன். எங்களைமாதிரி ஏழைகளுக்கு மருத்துவர் படிப்பு எட்டாத பழம்தான் சார்! அதுதான் என் பிள்ளைகளுக்காக 100 பிள்ளையார் செய்து வைக்கிறதா வேண்டியிருக்கேன் சார்! என்ன வேண்டுதல்னு நான் தெரிஞ்சுக்கலாமா நித்யா? தாய்மொழிக்கல்வியில் படிக்கும் அனைவருக்கும் அறுபது சதவிகிதம் எடுத்தால் மருத்துவப் படிப்பு இலவசமாக்கப்படவேண்டும்னு வேண்டி இருக்கேன் சார்! ஏன் அதிக மதிப்பெண் முக்கியமில்லையா? பயாலஜி எடுக்கிற மாணவர்களுக்கும், எங்களைப்போல அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சார்! அவங்க எளிமையாக மருத்துவப் படிப்பிற்கு போய்டுறாங்க! ஆனால் முழுமையாகப் படித்து வரும் எங்களால் போக முடிவதில்லை. பிராக்டிகல் அவர்களுக்கு எங்கே சார் இருக்கு! எங்க அளவுக்கு பாடங்களும் அவர்களுக்குக் கிடையாது. படிக்கிறதுக்கு ஆர்வம் இருந்தால் போதும். அது எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லைன்னு வரணும். தாய்மொழியில் பேசி வைத்தியம் பார்க்காமல் ஆங்கிலத்திலா பேசி வைத்தியம் பார்க்க முடியும்? நித்யா! உன்னால் படிக்க முடியும். நீ படி! திருமணம் இந்த வயதில் தேவை கிடையாது. நல்ல வாழ்க்கைக்கு ஆதாரம் பணம். அது கிடைக்கிறது. இலஞ்சம்தான் இப்ப இருக்கு! எங்க சார் மனம் இருக்கு...வெளியுலகமே வேண்டாம் சார்!அது போதும் சார்! என்றபடி வெளியேறிய நித்யாவை வெறித்துப் பார்த்தார் குரு.