வீடு
வீடு
ரஞ்சன் அந்து ஊருக்கு புதிதாக மாற்றல் ஆகி வந்து இருந்தான்.அவனுக்கு வங்கியில் வேலை.இன்னும் திருமணம் ஆகவில்லை.வீடு பார்த்து அம்மாவை கூட்டி வரும் வரை,ஒரு பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தான்.
அந்த செலவை வங்கி அவனுக்கு திருப்பி கொடுத்து விடும்.
வங்கியில் வேலை செய்யும் சக அதிகாரியிடம் ஒரு வீடு பார்க்க சொல்லி இருந்தான்.அவரும் அந்த ஊருக்கு புதுசு தான்.இருந்தாலும் அவருடைய தொடர்பை பயன் படுத்தி ஒரு வீட்டை கண்டு பிடித்து சொல்ல,அவருடன் சென்று அந்த வீட்டை பார்த்தான் ரஞ்சன்.அவனுக்கு பிடித்து இருந்தது.அவனுடைய காரை நிறுத்தி வீட்டில் இடம் இருந்தது.அதுவே அவனுக்கு பெரிய சந்தோசம்.
அம்மா சகோதரியின் பிரசவத்தை முடித்து விட்டு மூன்று மாதம் பொறுத்து வருவதாக சொல்லி விட்டார்கள்.அதனால் அந்த வீட்டில் மூன்று மாதம் அவன் மட்டும் வசிப்பதாக முடிவு செய்து கொண்டு
வீட்டிற்க்கு முன் பணம் கொடுத்து விட்டான்.
ஒரு விடுமுறை நாளில் சாமான்களை வரவழைத்து
வீட்டில் வசிக்க தொடங்கினான்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை அதிசியமாக பார்த்தனர்.
ஒரு முறை பால் வாங்க பக்கத்து அண்ணாச்சி கடைக்கு செல்ல,அவனோ போயும் போயும் இந்த வீடு தான் கிடைத்ததா என்று கேட்க,ஏன் என்ன காரணம் என்று கேட்க,அந்த வீட்டில் பேய் நடமாடுகிறது என்று கூற,ரஞ்சன் எனக்கு பயமில்லை என்று கூறினாலும்,அம்மா. நான் இல்லாத போது தனியாக இருக்க முடியுமா என்று கவலை பட ஆரம்பித்தான்.
வீட்டில் மாடியும் இருந்தது.தரை தளம்,சமையல்,வரவேற்பு அறைகள் மட்டுமே,படுக்கை அறை மாடியில் இருந்தது.
பால்கனியை ஒட்டி ஒரு மரகிளை,அது அடுத்து வீட்டில் இருக்கும் வெப்ப மர கிளை பால்கனியில்
ஒட்டி உறவாடி கொண்டு இருந்தது.இனி ஒரு கிளை பக்கத்து வீட்டு மொட்டை மாடியை தொட்டு கொண்டு இருந்தது.
சுருக்கமாக சொன்னால் மரத்தில் ஏறி பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று விட முடியும்.
இரண்டு மூன்று நாள் ஒரு பிரச்சனையும் இல்லை.
அன்று வெள்ளிக்கிழமை,அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை.அதனால் தொலைகாட்சியில் ஒரு சினிமா பார்த்து விட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு மணிக்கு படிக்க வந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி.பால்கனியில்,இரண்டு உருவம், வாயில் இருந்து புகை வர, தீபிழம்பு தூரத்தில் இருந்து பார்க்க பயமாக இருந்தது.நல்ல வேளை ஜன்னலுக்கு திரை இருந்ததால் இவனை யாரும் பார்க்க முடியாது.இவன் வந்து விளக்கை போட அந்த உருவங்கள் சத்தமில்லாமல் அங்கு இருந்து வெளியேறியது.கருப்பு நிறத்தில் இறங்கி உருவம் மரக்கிளை வழியாக அடுத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்றது.
இவனுக்கு தூக்கம் கண்ணை அழுத்த,எதையும் சட்டை செய்யாமல் படுத்து உறங்கி விட காலையில் ஆறு மணிக்கு,கர் கர் என்ற சத்தம் அவன் உறக்கத்தை கலைத்தது.அரைகுறையாக கண்ணை விழித்து என்ன சத்தம் என்று பார்க்கப், அரை இருட்டில் பால்கனியில் ஏதோ வெளிச்சம் தெரிய,கதவை திறந்து,பார்க்க ஒரு செல்ஃபோன் கிடக்க அதில் இருந்து அலாரம் ஒலித்து கொண்டு இருந்தது.
அதை எடுத்து,அலாரத்தை அணைக்க,ஒரு பெண் வெட்கத்தில் கண்ணை மூடி சிரித்து கொண்டு இருப்பது போல முகப்பு படம் இருந்தது.கூடவே ஒரு காலியான பீர் பாட்டில்,இரண்டு சிகரெட் துண்டுகள் கிடக்க,அவனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது.
தண்ணி போட இந்த பால்கனி வசதியாக இருக்க,யாராவது வந்து பார்த்தால் பேய் இருப்பதை போல செய்து வைத்து இருந்தார்கள்.
இதற்கு முன்னால் குடியிருந்த குடும்பம் பால்கனி கதவை திறக்கவில்லை.திருட்டு பயத்தால்,அதை திறக்காமல் இருந்து இருக்கிறார்கள்.அதனால் பக்கத்து வீட்டில் இருந்து பயமில்லாமல் இங்கு வந்து தண்ணி போட்டு கொண்டு இருந்தார்கள் போல.
ரஞ்சன் விடிந்ததும் அந்த போனில் இருக்கும் இனி நம்பருக்கு கூப்பிட,அதுக்குள்ள ஏண்டி ,தூங்க விட மாட்டியா என்று கேட்டு விட்டு துண்டித்து விட்டாள்.
அதைவீட்டில் வைத்து விட்டு வங்கிக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து அந்த போனை திறந்து பார்த்தால் ஒரே நம்பரில் இருந்து 25 மிஸ்டு கால்.
அந்த நம்பருக்கு திரும்ப கூப்பிட,அடுத்த முனையில் இருந்த பெண்,மரியாதையாக போனை எடுத்த இடத்தில் வைத்து விடு,இல்லாவிட்டால்,விளைவு மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க,அதற்கு முடிந்தால் நேரில் வந்து வாங்கி கொள் என்று கூறி விட்டு வைத்து விட்டான்.
இரவு பதினோரு மணிக்கு மீண்டும் அழைப்பு வர,சையாக ஒரு மணிக்கு வந்து எடுத்த கொள் என்று கூறி போனை எடுத்த இடத்தில் வைத்து விட்டு,இருட்டில் மறைந்து இருந்து கவனித்தான்..
ஒரு இளம் பெண்,மரக்கிளை வழியாக வந்து எடுக்க,இவன் ஓடி சென்று இருக கட்டி பிடித்து கொள்ள வந்த உருவம் செய்வது அறியாது திகைத்து நிற்க,ரஞ்சனால் அது ஒரு பெண் என்று மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது,முகத்தை பார்க்க முடியவில்லை.
பிடியை தளர்த்தி விட அந்த உருவம் ஓடி விட்டது.அதற்கு பிறகு அந்த பேய் தொந்தரவு இருக்கவில்லை.
ஆனால் ரஞ்சன் அந்த நம்பரை, பேய் என்று சேமித்து வைத்து கொண்டான்.
சில மாதங்கள் கடக்க,அவனுடைய அம்மாவும் அங்கு வந்து சேர,எப்படியும் மூன்று ஆண்டுகள் இங்கு தான் இருக்க போகிறோம்,இந்த ஊரில் இவனுக்கு ஒரு பெண் கிடைக்குமா என்று தேட
ஒரு தரகர் ஒரு பெண்ணின் புகை படமும்,தொடர்பு எண்ணையும் கொடுக்க,அம்மா நச்சரிப்பு தாங்காமல் அந்த நம்பரை கூப்பிட,அது பேய் என்று ஏற்கனவே சேமித்து வைத்து இருந்த அந்த நம்பருக்கு இணைப்பு செல்ல,அவளுடன் உங்களை நேரில் சந்திக்க முடியுமா,நானும் அம்மாவும் வருகிறோம் என்று கூற அவளும் வீட்டு விலாசம் கொடுக்க,இரண்டு தெரு தள்ளி இருந்த வீட்டிற்கு செல்ல,அந்த பெண்ணை நேரில் பார்க்க ஒரு அப்பாவியாக தோற்றம் அளித்தாள்.பெண் ஐடி வேலையில் இருப்பதாக கூற,எல்லோருக்கும் பிடித்து விட்டது..ஆனால் ரஞ்சன் மட்டும் தனியாக பேச வேண்டும் என்று கூற,மொட்டை மாடிக்கு செல்ல,அவளிடம் நீங்க என்ன குரங்கா என்று கேட்க,அவள் புரியாமல் விழிக்க,அவன் இருக்கும் வீட்டில் இரவு நேரத்தில் வந்தது, போனை மறந்து சென்றது,அவளை பிடித்தது என்று நடந்த சம்பவங்களை கூற உண்மை தான்,என்னுடைய தோழிக்கு தண்ணி அடிக்க கம்பனி கொடுப்பேன்,எனக்கு பழக்கம் இல்லை.அவள் தான் உங்களை மிரட்டி நான் விட்டு விட்டு வந்த போனை வாங்கி கொடுத்தாள்.
அதற்கு பிறகு அவளும் உங்கள் வீட்டு பால்கனிக்கு வரவில்லை.இது தான் உண்மை என்று சொல்ல,அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவளை அவனுக்கு மிகவும் பிடித்து போக திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டான்.
