Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

வீணை பாடகி

வீணை பாடகி

1 min
266


வேத வல்லி வீணை வாசிப்பில் அவளுக்கு நிகர் அவள் தான்.எந்த பாடலும் ஒரு முறை கேட்டு விட்டால் அடுத்த நொடி அந்த பாட்டு அவளது

வீணையில் இசைக்க பட்டு விடும்.

நல்ல அழகியும் கூட.அப்பா ஒரு அரசாங்க வேலை செய்து வருகிறார்.வசதி குறைவும் இல்லை கூடவும் இல்லை.ஒரே பெண்.அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை

தன்னுடைய வித்தையை பல பேருக்கு சொல்லி கொடுக்க அவளுக்கு விருப்பம்.அதற்காக மேடையில் இசைப்பது இல்லை.அவள் கச்சேரி கேட்க அவள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும்.

அவளுடைய திறமையை அறிந்த அந்த ஊர் செல்வந்தர் அவளை மணம் முடிக்க எண்ணி,அவளுடைய தந்தையை கேட்க,மகளின் விருப்ப படி தான் என்று சொல்லி விட்டார்.

ஒரு நாள் செல்வந்தர் கச்சேரி கேட்கும் சாக்கில் அவள் வீட்டிற்கு வந்து,கச்சேரி முடிந்த பிறகு தன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்ல,அதற்கு அவள் திருப்பி,நீங்கள் என் வீணை இசையை விரும்புகிறீர்களா இல்லை என் உடலை விரும்புகிறீர்களா என்று கேட்டாள்.

இப்படியே இருந்தால் பல பேருக்கு என் இசையை கேட்டு ரசிக்க முடியும்.உங்களை திருமணம் செய்து கொண்டால் நீங்கள் மறஉம் தான் ரசிக்க முடியும்.பல பேர் என் இசையை ரசிக்க விரும்புகிறேன்.

என் திறமையை தனி ஒருவருக்கு விற்க முடியாது மன்னிக்கவும் என்று கூறி விட்டாள்.

அந்த செல்வந்தர் வெட்கி தலை 

குனிய வெளியில் சென்றார்.

இசை கடவுள் மாதிரி எல்லோருக்கும்

பொதுவாக இருப்பது.அதை தான் மட்டும் சொந்தம் கொண்டாட முயல்வது முட்டாள்தனம்., என்று புரிந்து,அவள் விருப்ப படி ஒரு இசை பள்ளியை நிறுவி கொடுத்து

பல மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract