விசித்திர விளக்கு
விசித்திர விளக்கு
நிலா தன்னுடைய தாத்தா வீட்டில் தங்கி கொண்டு பக்கத்து
நகரத்தில் வேலைக்கு போய் கொண்டு இருந்தாள்.
அந்த வீடு பெரிய வீடு.ஒரு நாள் விடுமுறை நாளில் சாய்ந்து உட்கார நாற்காலி கிடைக்குமா என்று ஒரு அறையில் கிடந்த பொருள்களின் நடுவே தேடி கொண்டு இருக்க,ஒரு அழகான வெண்கல விளககு
இருந்தது.அதை தொட்ட உடன்
பிரகாசமான வெளிச்சம் தெரிய
அதை வெளியே எடுத்து வந்து சுத்தம் செய்த தன் அறையில் கொண்டு வைத்தாள்.
மறுபடியும் அதை அழுத்தமாக பிடிக்க,ஒரு குரல் என்ன வேண்டும் என்று கேட்டது.உடனே அவளுக்கு அலிபாபா வின் அற்புத விளக்கு
ஞாபகம் வர எனக்கு துணைக்கு
ஒரு தோழி வேண்டும் என்று சொல்ல உடனே ஒரு அழகான
பெண் அங்கு வந்து நின்றாள்.
மேலும் அந்த விளக்கு,இந்த பெண் உன் கண் களுக்கு மட்டும் தெரிவாள்,அவளுடன் பேசலாம் விளையாடலாம்,உதவியும் கேட்கலாம்.தினமும் ஒரு முறை இந்த விளக்கை தொட்டு பார்க்க
வேண்டும் தவறினால் மறைந்து விடுவாள் என்று சொல்லி விட,
தினமும் அந்த விளக்கை தொட
அந்த பெண்ணும் தோன்றி நிலாவுடன் நேரத்தை இனிமையாக போக்கி கொண்டு இருந்தாள்.
