வெளிநாட்டு வேலை
வெளிநாட்டு வேலை
வெளிநாட்டு வேலை.
ராஜாவின் கனவு வெளிநாட்டில் வேலை செய்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது.அதற்கான முயற்சியும் எடுத்து கொண்டு இருந்தான்.
இருக்கும் தன்னுடைய சிறிய வீடு,மனைவியின் நகைகள் ஆகியவை அடமானம் வைத்து கிடைத்த தொகையில்,முகவரிக்கு
செலுத்த வேண்டிய கட்டணம்,பயண கட்டணம்,வெளிநாட்டில் ஒரு மாத செலவிற்கான தொகை எல்லாம் திட்ட படி ஏற்பாடு செய்து கொண்டு,விமானத்தில் ஏறினான்.
மனைவி,பெற்றோர்,மாமனார் குடும்பம் எல்லோரும் மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணியில் சேர தேவையானதை பூர்த்தி செய்து,வேலையை ஆரம்பிக்க பத்து நாட்கள் ஓடி விட்டன.அடுத்த மாதம் எப்போது பிறக்கும்,முதல் சம்பளத்தை எப்போது வாங்குவோம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தான்.
அன்று வேலை முடிந்து,சக ஊழியர்கள் கூட சேர்ந்து இருப்பிடம் சென்று உணவு அருந்தி விட்டு,தொலைகாட்சி பார்க்கும் போது,அவன் தலையில்,அவன் தலையில் மட்டும் அல்ல,அவன் கூட சேர்ந்த இன்னும் பத்து பேருக்கு அது ஒரு பேரிடி.
ஆமாம்,நாளை முதல் கொரோனா பரவல் காரணம் எல்லா தொழில் கூடங்கள் விடுமுறை,மீண்டும் திறப்பது சந்தேகம் என்று.
நாளை முதல் வேலை இல்லை,கையில் காசு இன்னும் இரண்டு நாளுக்கு தான் வரும். ஊர் திரும்ப விமானம் இல்லை.அவனும் பட்டினி,குடும்பமும் பட்டினி.
சம்பாதிக்க ஆசை பட்டு வெளிநாடு வந்தது தவறா,மீண்டும் குடும்பத்தை பார்ப்போமா,தாய் நாடு திரும்ப முடியுமா,என்றெல்லாம் யோசித்து
பிரமை பிடித்து உட்கார்ந்து விட்டான்.
என்ன தவறு செய்தேன்,கடவுள் இப்படி சோதிக்கிரார்.குடும்பத்தை மகிழ்ச்சியாக வைக்க நினைத்து மோசம் போய் விட்டேனே.
அவனுடைய கூக்குரல் கடவுளுக்கு கூட கேட்க முடியவில்லை.காரணம் அவருடைய செய்கைகளை கொரோனா எனும் கொடிய நோய் முடக்கி விட்டது.
