வெல்ல முடியாது
வெல்ல முடியாது
கார்த்தி படிக்கும் கல்லூரியில் தான் கீர்த்தியும் படித்து வந்தாள்.
கீர்த்தி நன்றாக படிப்பவள்.மட்டுமல்ல கல்லூரியில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும்,விளையாட்டு உள்பட முதலிடத்தில் கீர்த்தி இருப்பாள்.அது அவளுடைய ஆர்வத்தையும்,பயிற்சியில் உள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியது.
ஒரு ஆண்டு விழாவில் மாணவன்
மாணவி களுக்கு இடையே போட்டி
நடத்தினார்கள்.அதில் பேச்சு, பாட்டு,நடனம்,வழக்காடு மன்றம்,மற்றும் பல விளையாட்டுகளும் போட்டியில்
மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்கள்,
அவர்களுக்கு வெற்றி கோப்பை.
கார்த்தி மாணவர் அணிக்கு தலைவன்.கீர்த்தி மாணவிகள் அணிக்கு தலைவி.
இரு அணிகள் சமமாக புள்ளிகள் எடுத்து வந்தன.யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற நிலை.
ஒரு கட்டத்தில் போட்டி நடத்தியவர்கள் வெற்றியாளர் யார் என்று முடிவு செய்வதில் திணறி கொண்டு இருந்தனர்.
கீர்த்தி மிகவும் டென்ஷன் ஆகி விட்டாள்.அவளுக்கு வாழ்வா, சாவா என்கிற நிலை.இதற்கு மேல் போட்டி நடத்த,எந்த விளை யாட்டும் இல்லை.
எந்த பட்டிமன்ற தலைப்பும் இல்லை.
ஏதாவது ஒரு அணி விட்டுக்கொடுக்க வேண்டும்.
கீர்த்தி விட்டுக்கொடுப்பதாக கூற,
அவள் போடும் பிச்சை எனக்கு வேண்டாம் என்று கார்த்தி மறுத்து விட்டான்.
கல்லூரி நிர்வாகம்,ஒரு அணிக்கு தான் கோப்பையை கொடுக்க முடியும்,யார் விட்டு கொடுப்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்
இரண்டு நாட்கள் அவகாசம் என்று கூறி விட்டனர்.
அன்று இரவு வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.கார்த்தியும் கீர்த்தியும் எதிரும் புதிருமாக அமர்ந்து எதுவும் பேசாமல் சாப்பிட்டு கொண்டு இருக்க,அம்மா அப்பாவை பார்த்து,என்னங்க இவங்க பிரச்சனையை தீர்த்து v
வையுங்க என்று சொல்ல,அப்பாவும்,கார்த்தியை பார்த்து,உன் தங்கை தான் விட்டு கொடுக்க சம்மதம் சொல்லி விட்டாள்,அப்புறம் என்ன, ஒத்து கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல.அது எப்படி அப்பா முடியும் என்று பதில் கேள்வி கேட்க,
கீர்த்தி,அதற்கு அப்பாவை பார்த்து சொன்னாள்,
அப்பா,அவன் விட்டுக்கொடுத்து நான் ஜெயித்து விட்டால் எல்லோரும் என்னை பிடிவாதம் பிடித்தவள் என்று பேசுவார்கள்.
அது என் எதிர்காலத்தை பாதிக்கும்.நாளைக்கு என் திருமணத்தின் போது இதை பற்றி மாப்பிள்ளை
வீட்டார் அறிய நேர்ந்தால்,என்னை பிடிவாதம்
பிடித்தவள்,இல்லற வாழ்க்கை யிலும் பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் தோன்றும்.
எப்படி இருந்தாலும்,பெண் பார்க்க வரும் போது
இந்த அருமை பெருமைகளை நாமே சொல்லி மாட்டிக்கொள்வோம்.என் கூட படிக்கும் ஒரு மாணவன் கூட என்னை திருமணம் செய்து கொள்ள விருப்ப படலாம்.அப்போது என்னுடைய வெற்றியை ஒரு பிடிவாதம் என்று கூட நினைக்கலாம்.அதனால் அண்ணனே வெற்றி பெற்றதாக இருக்கட்டும் என்று கூற அப்பாவும் யோசித்து விட்டு,கீர்த்தி சொல்வது சரி தான்,அவள் முடிவிற்கு விட்டு விடுவோம் என்று கார்த்தியை பார்த்து கூற,அவனும் சம்மதித்தான்.
அடுத்த நாள் கல்லூரி நிர்வாகம் ஆண்கள் அணியை வெற்றி அணியாக அறிவித்தது.
