வேலுவின் வீரம்
வேலுவின் வீரம்
இயற்கை எழில் நிறைந்த ஒரு சிறிய கிராமம். ஆநிரைகள் செல்ல பிராணிகள் பறவைகள் வயல்வெளிகள் என எத்திசையிலும் பசுமை போர்த்திய கிராமம். அங்கு சில நாட்களாக விலங்குகள் காணாமல் போய்க் கொண்டே இருந்தன. காவல்துறையில் புகார் அளித்தும் பயன் இல்லாமல் போக கிராம மக்கள் இரவு நேரத்தில் விலங்குகளை பாதுகாக்க முடிவு செய்தனர். இரவு 2 மணி அளவில் வானில் ஏதோ ஒரு ஒளிக்கீற்று தோன்றியது. அந்த ஒளிக்கீற்று ஒரு ஆட்டுக்குட்டியின் மேல் விழ அந்த ஆட்டுக்குட்டி காணாமல் போனது. இதைப் பார்த்த மக்கள் திகைத்தனர். அப்பொழுது இந்த மர்மத்தை கண்டறிய வேலு என பெயர் கொண்ட இளம்பெண் ஒரு நாய் போல் வேடமணிந்து தெருவில் நின்று கொண்டு இருந்தாள். அந்த ஒளிக்கீற்று அவளை தூக்கி சென்றது. சற்று நேரம் கழித்து தான் அவளுக்கு தெரிந்தது அது வேற்றுகிரகவாசிகளின் வாகனம் என்று. வேற்று கிரகத்தை பார்த்து திகைத்துப் போய் நின்றாள். இருப்பினும் நம் வேலு தன்னம்பிக்கை இழக்காமல் உள்ளே சென்று பார்த்தாள். அப்போதுதான் தெரிந்தது கடத்தி வரும் விலங்குகளை அவர்கள் உணவாக பயன்படுத்துகிறார்கள் என்று. சமையல் செய்யும் இடத்திற்கு சென்று அங்குசம் இப்ப வரை ஒரு கம்பியால் அடித்தாள் வேலு. சத்தம் கேட்டு வந்த காவலாளிகள் அவளைப் பிடித்து தலைவரிடம் கொண்டு சேர்த்தனர். அங்கு அவள் அனைத்தையும் நொறுக்கி தலைவரையும் கொன்றாள். இதைப்பார்த்த வேற்றுகிரகவாசிகள் அவள் காலடியில் விழுந்தனர். விலங்குகளை உணவாக பயன்படுத்தக்கூடாது எனவும் தன்னை தன் கிராமத்திற்கு திருப்பி அனுப்புமாறு அவர்களை எச்சரித்தாள். வேற்றுக்கிரகவாசிகளும் தன் தலைவனுக்காக தான் இத்தனை நாள் இதை செய்ததாக கூறி மன்னிப்பு கேட்டனர். பின்பு அவளை அந்த கிராமத்தில் கொண்டு சேர்த்தனர். வேலுவின் வீரத்தை பார்த்து கிராம மக்கள் அவளை பாராட்டினார்கள்.
