வானிலை
வானிலை
வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது.எந்த நிமிடமும் மழை வரலாம் என்று கூறி கொண்டு குடையை எடுத்து கொண்டு விவசாய நிலத்தை நோக்கி நடந்தான் மூர்த்தி.
முன்பு பருவம் தவறாமல் மழை பெய்ய விவசாயம் செழிப்பாக இருந்தது.ஆனால் இப்போது மழை காலத்தில் வெயில்,குளிர் காலத்தில் வெப்பம் என்று காலநிலை மாற,விவசாயம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்க,எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கவலையுடன் தன் நிலத்தை நோக்கி நடந்தான்.
வீட்டில் பெய்த மழை விவசாய நிலம் இருக்கும் பகுதியில் இல்லை.
இப்போது இது தான் பருவ மழயின் வரலாறு.
