வாழ்க இந்தியா! வெல்க பாரதம்!
வாழ்க இந்தியா! வெல்க பாரதம்!
டிசம்பர் 29, 2019
இந்தியனாகப் பெருமைப் பட்ட தருணம்!
‘சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?’ - நம் நாட்டுக்கு மிக மிக பொருத்தமான பாடல் இது. இதை பல வித சூழல்களில் இந்தியர் ஆகிய நாம் நிரூபித்தும் இருக்கிறோம்.
எதேச்சையாக சமூக வலைதளத்தில் இன்று ஒரு கருத்தைக் கேட்டேன். நம் இந்தியாவின் பெருமை என்னை கர்வம் கொள்ள வைத்தது. உலகில் இருக்கும் பல நாடுகள் தோன்றி எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்று பார்க்கும் போது நம் இந்தியாவின் வயது அளவிடற்கறியது. எத்தனையோ நாகரிகங்கள் உலகில் தோன்றி இருந்தாலும் நம் இந்திய நாகரீகம் என்றென்றும் மெருகேறிக் கொண்டு வருவது. மொகாலயர், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் என எத்தனையோ பேர் வந்து சென்றும் இன்றும் சிறந்த தன்மைகளுடன் விளங்குவது நம் இந்தியா. நம் ராணுவ வீர்ர்களும்,
இந்திய விவசாயியும் இரு கண்களென இருந்து நம்மைக் காக்கும் பேறு பெற்ற இந்தியர் நாம்.
2008ல் மும்பை பயங்கர வாதத் தாக்குதலை களத்தில் இறங்கி சந்தித்து இந்தியாவின் வீரத்தையும் ஆற்றலையும் நிலை நிறுத்திய நம் ராணுவ வீர்ர்கள், சிலர் இன்னுயிர் ஈந்து, பலப்பல உயிர்களைக் காத்து இன்றும் நம் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கின்றனர். அந்த இந்தியர்கள் நாம் என்பது எவ்வளவு பெரிய பெருமை.
சில மாதங்களுக்கு முன்னால் நம் விமானப் படை வீர இந்தியர் அபினந்தன் வர்த்தமான் ஆற்றிய வீரச் செயலை யாராவது மறந்திருக்க முடியுமா! அவருடைய விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சுடப்பட்டு அவர் சிறை பிடிக்கப்பட்டாலும் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் வீராமாய் நின்று. கௌரவத்துடன் மீட்கப்பட்டு நாடு திரும்பிய அவர் நம் நாட்டவர். நம் இந்தியர் என்பதில் நமக்குத்தான் எவ்வளவு பெருமை.
வாழ்க இந்தியா! வெல்க பாரதம்!