Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

ஊட்டச் சத்து

ஊட்டச் சத்து

2 mins
277



அந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் லட்சுமி.

அவள் இளம் வயது விதவை.அவளுக்கு ஒரே பையன்.

ஐந்து வயது ஆகிறது.அவன் பிறக்கும் போது குறை பிரசவத்தில் பிறந்தவன்.அப்படி பிறந்த போது,லட்சுமிக்கு மருந்து வாங்க போன இடத்தில் நடந்த விபத்தில் கணவன் இறந்து விட்டார்.அந்து குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது.அதில் ஒரு கிணறும் இருந்தது.

பிரசவம் முடிந்து மகன் கோவிந்தனை வீட்டிற்கு எடுத்து வரும் போது,மருத்துவர் அவளிடம் கவலை பட வேண்டாம்,இருபது நாள் முன்பு பிறந்து விட்டான்.அவனுக்கு தேவையான சத்து உணவை அவன் வாலிபம் எட்டும் வரை கொடுங்கள்,இப்போதைக்கு உங்களால் எத்தனை வருடம் தாய்பால் கொடுக்க முடியுமோ அது வரை கொடுங்கள்.பையன் நல்ல 

வளர்ச்சியை பெறுவான்.இப்போது நல்ல ஆரோக்கியமாக தான் இருக்கிறான். சத்து குறையாமல் சாப்பிட்டு வந்தால் போதும்.சரி ஆகி விடுவான் என்று கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த உடன் தோட்டத்தில் நிறைய கீரை வகைகளை நட்டு,தினமும் அதில் ஒரு கீரையை சாப்பிட்டு வர,நல்ல தாய்பால் அவனுக்கு கொடுக்க முடிந்தது.

கோவிந்தன் வளர்ந்து ஐந்து வயதை அடையும் போது,அவன் தினமும் சாப்பிட ஏதுவாக,நாட்டு கோழி வளர்த்து,அதில் கிடைக்கும் முட்டையை அவனுக்கு கொடுத்து வந்தாள்.கூடவே கீரை வகைகள்,மற்றும் நாட்டு பழங்கள்

கொய்யா, மாம்பழம், வாழை பழம்,எலுமிச்சை,நெல்லிக்காய், சப்போட்டா,பப்பாளி,போன்ற பழங்களை விளைவித்து தினமும் கொடுத்து வந்தாள்.அவள் தேவைக்கு போக மீதம் உள்ள பழங்களை,அந்த ஊர் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் கொடுத்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்தாள்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்ற சொல்லுக்கு ஏற்ப,

ஊட்ட சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகள்,முட்டை,ஆட்டிறைச்சி போன்றவை தன்னுடைய தோட்டத்தில் உற்பத்தி செய்து தன் பிள்ளைக்கு மட்டும் அல்லாமல்,அந்த ஊர் பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் ஊட்ட சத்து நிறைந்த உணவு கிடைக்க ஏற்பாடு செய்தாள்.இதற்காக தன்னுடைய விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் ஒதுக்கி,விளைவித்து கொடுத்தாள்.

அதன் பலன் அவளுடைய மகன் கோவிந்தன்,இன்று நல்ல ஆரோக்கியமுள்ள வாலிபன் ஆக அந்த ஊரில் உலா வந்து கொண்டு இருக்கிறான்.

லட்சுமியை போல தாய்மார்கள் உள்ள வரை ஊட்ட சத்து குறைபாடு வராது என்று நம்புவோம்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy