உடற் பயிற்சி
உடற் பயிற்சி
ராஜா உடற் பயிற்சி நிலையம் வைத்து நடத்தி கொண்டு வருகிறான்.அன்று மாலை ஒருவர் வந்து உடம்பு இளைக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.அவர் வயதிற்கு உயரத்திற்கு சுமார் 30 கிலோ அதிகம் இருந்தார்.அவருக்கு திருமணம் செய்ய வேண்டும்,ஒரு மாதத்தில் எடையை பாதியாக குறைக்க முடியுமா என்று ஆவலுடன் கேட்டார்.
சார்,இது கட்டிடம் அல்ல,நம் விருப்பத்திற்கு இடித்து கட்ட,இது ஆண்டவன் கொடுத்த உடம்பு,பரம்பரை,உணவு பழக்கம்,சோம்பேறித்தனம் இப்படி பல காரணங்கள் உள்ளன.அது எது என்று கண்டுபிடித்து,அதற்கு உண்டான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.சுமார் ஐந்து கிலோ குறைய ஆறு மாதங்கள் பிடிக்கலாம்.கடுமையான கட்டுப்பாடு தேவை படும்.இருக்கும் உடம்பை கட்டுக்குள் வைக்க தான் இந்த பயிற்சி.ஒரு மாதத்தில் மூன்று கிலோ எடை கூட அதிகரிக்க வைக்க முடியும்.குறைக்க நீண்ட நாள் தேவை படும், என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
