Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.
Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.

saravanan Periannan

Abstract Drama Action


4.5  

saravanan Periannan

Abstract Drama Action


உபாத்தியாயர் அத்தியாயம் 2

உபாத்தியாயர் அத்தியாயம் 2

5 mins 343 5 mins 343

இக்கதையை படிக்கும் முன் உபாத்தியாயர் அத்தியாயம் 1 படிக்கவும்.

இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.

போனின் எதிர்முனையில் இருந்த வடிவேலனின் அடியாள் அண்ணே அந்த ராஜையும் அவன் பொண்ணையும் போட போனப்போ அந்த பொண்ணோட டியூஷன் வாத்தி குறுக்க வந்துட்டான் அண்ணே.

ஏதோ அடிக்க போறான் அப்படினு பார்த்தா அடி வாங்கிட்டு ஓடி போயிட்டான்.

அடுத்த ஏரியாவில் இருக்க நம்ம பசங்க அந்த காரை பார்த்தாங்களாம் துரத்திட்டு போயிருக்காங்க.

வடிவேலன் அவனிடம் டேய் அந்த வாத்திய நீ ஆளுங்களோட போய் கவனி என‌ அழைப்பை கட் செய்கிறான்.


வளவன் ரத்தம் முகத்தில் ரத்தம் வழிய போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓடினான்.

இன்ஸ்பெக்டர் ஷ்யாம் அப்பொழுது தான் வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த கான்ஸ்டபிலுக்கு பேட்ரொல் சென்ற போலீசார் அங்கு கிடந்த ரவுடிகளின் பிணங்களை பற்றி அந்த ஸ்டெஷனுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வளவன் அந்த ஸ்டெஷனுக்குள் நுழைந்தான் ஸார்,ஸார் என சொல்லிய படி பின்பு தன் போனை எடுத்து சரண்யாவுக்கு அழைப்பு விடுத்தான்.

சரண்யா தன் தந்தையுடன் போலீஸ் கமிஷ்னர் ஆபீஸில் இருப்பதாக கூறினாள்.

பின்பு அழைப்பை கட் செய்து கான்ஸ்டபளிடம் நடந்ததை கூறினான்.


கான்ஸ்டபிள் ஸ்டேஷனில் இருந்த முதல் உதவி டப்பாவை எடுத்து வளவனுக்கு காயத்தில் டெட்டால் வைத்து விட்டு பின் பென்டேஜ் போட்டு விட்டு இன்ஸ்பெக்டர் ஷயாம்க்கு போன் செய்து அழைக்கிறார்.

ஷ்யாம் ஸ்டெஷன் வந்து ஸ்டெட்மண்ட் வாங்கி விட்டு வளவனை திருப்பி அனுப்புகிறார்.

வளவன் சரண்யா மற்றும் அவள் தந்தை ராஜ் உடன் கிளம்பி வேறு ஊருக்கு புறப்பட்டான்.

வடிவேலன் தன் பைக்கில் மதிவதனி இருக்கும் பள்ளிக்கு வந்து மதிவதனியை கூப்பிடும் படி அட்டேன்டர் இடம் சொல்ல மதிவதனி அங்கு வந்தாள்.


என்னங்க இவ்வளவு தூரம் வடிவேலன் என சொல்ல வடிவேலன் நம்ம கல்யாண பத்திரிக்கையை காட்ட தான் என் சொல்லி அவளிடம் காட்ட அவள் சிரித்தாள்.

வடிவேலன் மொபைலுக்கு கால் வந்ததது.அவன் ஒரு நிமிஷம் மதி என சொல்லி அங்கிருந்து நகர்ந்து வந்தான்.

அண்ணே நீங்க சொன்ன படி அந்த வாத்தியை பத்தி விசாரிச்சோம்.

பெயர் வளவன் ,முன்னாடி காலேஜ் புரோவசர் இப்ப டியூஷன் வாத்தி அப்பறம் அவன் போட்டோ கிடைச்சுது அண்ணே என சொல்கிறான்.


அத அனுப்பு என் சொல்லி விட்டு அழைப்பை கட் செய்தான்.

வாட்ஸ் ஆப்பில் வந்த அந்த போட்டோவை பார்த்ததும் வடிவேலனின் முகத்தில் சிரிப்பு வந்தது.

சரண்யா தாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வர்ம கலை தெரிந்த ஒரு ஆசானை அழைத்து வந்தாள்.

அந்த ஆசானிடம் வளவனும் சரண்யாவும் சண்டை பயிற்சி எடுக்க ஆரம்பிக்கின்றனர்‌.

ஆசான் வளவனை பார்த்து உன் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க நீ நிறைய உழைக்கனும்.

அப்பறம் இன்னொன்றையும் நியாபகம் வைச்சுக்கோ,

சண்டையில் எதிரி எப்பவும் அடி வாங்க மாட்டான்.


திருப்பி நம்மள அடிப்பான்.

அந்த அடியையும் தாங்கி நீ அவனை எப்படி திரும்ப அடிக்க போறேங்கிற என்பதுதான் சண்டையின் சூட்சுமம்.

வளவன் இரவு பகல் பாராமல் பயிற்சி எடுக்கிறான்.

அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வு மட்டும் எடுக்கிறான்.

சரண்யாவும் சளைக்காமல் பயிற்சி எடுக்கின்றாள்.

வளவன் உணவு கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றுகிறான்.

இரண்டு மாதங்கள் கழித்து

வளவன் மொபைலுக்கு அழைப்பு வர அதை எடுத்தவுடன்‌

என்ன வாத்தியாரே எப்படி இருக்கீங்க என‌ சொல்லி ஒருவன் சிரிக்க 

அடே புரோவஸர் வடிவேலன் எப்படி இருக்க என சிரிக்க 

எனக்கு கல்யாணம் வளவா நீ கண்டிப்பா வரணும் என சொல்கிறான்.

சரி வரேன் டா என வளவன் சொல்ல,

பத்திரிக்கை வாட்ஸ் ஆப்பில் வரும் என வடிவேலன் சிரித்தபடி அழைப்பை துண்டித்து முகத்தில் கோபம் கொப்பளிக்க முஷ்டியை இறுக்காமாக்குகிறான்.


கல்யாணம் மதியின் ஊரான கருப்பூரில் நடக்க அங்கு வளவன் சரண்யா மட்டும் ராஜ் உடன் செல்கிறான்.

திருமணத்தில் மதிவதனியை ‌மண கோலத்தில் பார்த்து வளவன் சிரித்து விட்டு தீடீரென மண்டபத்தில் ஒரு மூலைக்கு செல்கிறான்.

மதிவதனி அது யார் தெரியுமா என வடிவேலனிடம் கேட்க என் நண்பன் என சொல்லி பின் நின்ற அடியாளிடம் தம்பி நண்பன் சுற்றத்தோட வந்துருக்கான் அவனை கவனி என சூசகமாக சொல்ல அந்த அடியாள் கூட்டத்தில் இருந்த மத்த அடியார்களுக்கு சைகை காட்ட அனைவரும் வளவன் இருக்கும் திசை நோக்கி சென்றனர்.


வளவனை பின் தொடர்ந்து சென்று சரண்யாவும், ராஜும் தங்கள் பின்னால் ஒரு ரவுடி கூட்டம் வந்ததை திரும்பி பார்த்து உணர்கின்றனர்‌.

வளவன் அந்த கூட்டத்தையும் சரண்யா மற்றும் அவள் தந்தை ராஜ்ஜையும் தனக்கு முன்னால் இருந்த ஒரு‌ சிறிய அறைக்குள் சாத்திவிட்டு வெளியே தாள் இடுகிறான்.

அங்கு சமையலுக்கு வைத்திருந்த தடிமனான நீளமான கரண்டி ஒன்றை எடுத்தான்.

தனக்கு பின்னால் யாரும் வந்த தாக்க கூடாது என‌ சொல்லி அந்த அறையின் கதவு மீது தலையை சாய்த்து நின்றான்.


அடியாள்கள் வளவன் ஏற்கனவே அடி வாங்கி ஓடியதை எண்ணி சிரித்தபடி அவனை நோக்கி செல்கின்றனர்.

வளவன் சிரித்தபடி கரண்டியை இறுக பிடித்தப்படி அதை தூக்கி அடியாள்களை தாக்க ஆரம்பித்தான்.

அடியாள்கள் அடி வாங்கி விட்டு பயத்தில் அங்கு இருந்து ஓடினர்.

வளவன் வடிவேனிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்ப ,வடிவேலன் மனதில் கோபம் கொப்பளித்தது.

சிறிது நாட்கள் தன் தந்தை உடம்பு சரியில்லாமல் இருப்பதால் தனது வீட்டுக்கு வளவன் செல்ல யோசிக்கிறான்.

அதுவரை பாதுகாப்பாக இவர்களை பார்த்துக்கொள்ள யாரிடம் சொல்வது என யோசித்து இன்ஸ்பெக்டர் ஷயாமிடம் சொல்கிறான்.

சொல்லிவிட்டு ஊருக்கு சென்று அப்பாவின் உடல்நிலை பற்றி தெரிந்துகொண்டு தூரமாக நின்று அவரை பார்த்துவிட்டு திரும்புகிறான்.


சரண்யா மற்றும் அவள் தந்தை ராஜ் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தால் அங்கு ஷயாம் கட்டு போட்டு அமர்ந்திருக்க வளவன் சரண்யாவும் அவங்க அப்பாவும் எங்க சார் என் ஷாயமிடம் கேட்க வடிவேலனை பிடிக்க பிளான் போட்டு அவனை இங்கு வரவழைக்க அவன் அடியாள்களிடம் சரண்யா மற்றும் ராஜ் இருக்கும் இடத்தை பற்றி லீக் செய்தேன்.ஆனால் எல்லாம் நினைச்ச மாதிரி நடக்கல என சொல்ல வளவன் ஷயாமின் சட்டையை பிடித்து உங்களுக்கு அவனை பிடிக்க இவங்க உயிரை தான் பனையம் வைப்பிங்களா என சொல்ல வளவன் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.


டேய் வாத்தி ,சரண்யா மற்றும் ராஜ்ஜை உயிரோடு வேணும்னா ராஜோட முக்கியமா சைன் பண்ண லெண்ட் டாக்குமெண்டஸ் எல்லாம் நீ இருக்குற இடத்தில் இருந்து என் இடத்துக்கு கொண்டு வா.

நீ வர வழியிலே என் ஆள் ஒருத்தன் வெயிட் பண்ணுவான்.

அவன் உன்னை நான் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு வருவான்.


இந்த அழைப்பு நீ வர வரைக்கும் ஆன்லேயே இருக்கனும்.


அப்பறம்‌ உன் மொபைல்ல லௌகேஷன் ஆஃப் பண்ணிரு மற்றும் உன்‌ காரில் ஜீ.பி.எஸ் அப்பறம் உன்னை யாராவது பாலோ பண்ணா இங்க இருக்குற உன் தீடீர் சொந்தங்கள கொன்னுடுவேன்.

வளவன் வெளியே நின்று தன் நாய் புல்லட்டை பார்த்தான் பின்பு புதிதாக வாங்கி வைத்திருந்த ஒரு பெயின்டை பார்த்தான்.

பின்பு நிறைய தண்ணீர் குடித்து விட்டு காரை எடுத்தான்.

போகும் வழியில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழித்தான்.

பிறகு அந்த இடிந்த பழைய‌ பள்ளியை அடைந்தான்.


உள்ளே நுழைந்தவுடன் பள்ளி மேடையில் அமர்ந்திருந்த வடிவேலனை பார்த்து அதிர்ச்சி ஆகிறான்.

டேய் வடிவேலா நீதான் அந்த முகம் தெரியாத ரவுடியா என கேட்க 

வடிவேலன் தன் அடியாளை அனுப்பி அந்த டாக்குமென்டுகளை வாங்கி கொண்டு தன் அடியாள்களை அவனை போட்டு அடிக்கும் படியும் ,ஒருவேளை வளவன் திருப்பி அடித்தால் சரண்யா மற்றும் அவள் தந்தை ராஜின் குரவலையை நறுக்கி விடுவதாகவும் சொன்னான் வடிவேலன்.

ஒரு அடியாள் மட்டும் வளவனை அடிக்க வர வடிவேலன் அதை பார்த்து விட்டு 

என்னங்கடா இங்க என்ன‌ ரேஷன் கடையிலே சாமான் வாங்க வந்த மாதிரி எல்லாம் ஒவ்வொருத்தர வந்து அடிக்கிரீங்க ஒற்றுமையா ஒன்னா சேர்ந்து அடிங்கடா என வடிவேலன் சொல்ல 

வளவனை எல்லாம் ஒன்றாக சேர்ந்து தாக்குகின்றனர்.


வளவன் ரத்தம் வழிய தரையில் மயக்கம் அடைகிறன்‌.

டாக்குமென்டுகளை எடுத்து கொண்டு சரண்யாவின் கைகளையும் கட்டி இழுத்து கொண்டு போனான் வடிவேலன்.


பின்பு திரும்பி தன் அடியாள்களை பார்த்து வளவன் பிழைக்க மாட்டான்,அவனை குத்தி கொல்ல வேண்டாம்‌

நண்பனை கொன்ன பாவம் எனக்கு வேண்டாம்.

அதனால அவனை இங்கேயே போட்டுட்டு ராஜ்ஜை யூஸ் பண்ணி நீங்க போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சு போயிருங்க.

சொல்லி கொண்டே சரண்யாவை இழுத்து கொண்டு வெளியே வரும் வளவன் புல்லட் நாயை பார்த்து அதிர்ச்சி ஆகிறான்.


பின்னால் போலீஸ் படையே நிற்க வடிவேலனுக்கு வெர்க்கிறது.

வளவன் தன் நாய் புல்லட்டை போலீஸ் நாய் பயிற்சிககு அனுப்பி இருந்தான்.

அதனால் தன் காரில் புது பெயிண்ட் ஊற்றினான்.

அதை மொப்பம் பிடித்து வரும் தன் நாய் அந்த வழிதான் என்பதை உறுதிப்படுத்த போகும் வழியில் சில இடங்களில் சிறுநீர் கழித்தான்.

புல்லட் நாயின் கழுத்தில் உள்ள பெல்ட்டில் ஜீ.பி.எஸ் கருவியை பொருத்தினான் வளவன். 

வடிவேலன் குழம்பிய சிறிது நேரத்தில் சரண்யா வடிவேலன் கையில் பிடித்திருந்த கத்தியை தனது காலால் உதைத்து கீழே விழ வைத்து பின்பு அவனது முட்டியில் ஓங்கி உதைத்தாள்.

பின்பு அந்த கத்தியை வடிவேலன் எடுக்க முடியாதபடி தூரமாக தனது காலால் தள்ளினாள்.

கீழே விழுந்த வடிவேலனின் தொடையை கடிக்கும் படி புல்லட்டை சரண்யா கமெண்ட் பண்ண தாவி வந்து வடிவேலனின் தொடையை கடித்தது.

வடிவேலனை கைது செய்த போலீஸ் பின்பு புகை குண்டுகளை அந்த இடிந்த பள்ளியின் உள்ளே வீசி பின்பு உள்ளே சென்று வளவனையும் ராஜ்ஜையும் மீட்டு அதோடு உள்ளே இருந்த ரவுடிகளையும் கைது செய்தனர்.

சரண்யா,ராஜ்,வளவன் மூவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் வளவன் தனக்கு வந்த ஒரு கடிதத்தை பிரித்து படித்து கொண்டிருந்தான்.

வளவன் அந்த கடிதத்தை படித்த பின் என்னை ஒரு பொண்ணு இவ்வளவு நாள் லவ் பண்ணி இப்ப நான் உங்களை காதலிக்கிறேன் என லெட்டர் அனுப்பியிருக்காளே.

"மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னை தேடியே 

மேகமாய் வந்து போகிறேன் 

வெண்ணிலா உன்னை தேடியே

யாரிடம் தூது சொல்வது 

என்று நான் உன்னை சேர்வது 

என் அன்பே ஏ ஏ என் அன்பே ஏ ஏ"

என துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் தளபதி விஜய் பாடலை பாடியபடி அந்த பெண்ணின் பெயரை லெட்டரின் கடைசியில் பார்த்தான்.


"ஒருவனின் மீது அன்பை காட்டுங்கள்,தேவையான நேரத்தில் கண்டியுங்கள் அவன் தவறு செய்தால்,கண்டிப்பும் அன்பின் வெளிப்பாடு தான்.

ஆனால் வெறுப்பை மட்டுமே ஒருவர் மீது காட்டாதீர்கள்.

காரணமின்றி ஒருவரை வெறுக்காதீர்கள் ஏனெனில் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நபரை தாங்கள் ஒதுக்கவும் வாய்ப்பு உண்டு‌."

உபாத்தியாயர் கதை இனிதே நிறைவுற்றது.

சுபம்.
Rate this content
Log in

More tamil story from saravanan Periannan

Similar tamil story from Abstract