saravanan Periannan

Action Crime Thriller

5.0  

saravanan Periannan

Action Crime Thriller

உபாத்தியாயர் அத்தியாயம் 1

உபாத்தியாயர் அத்தியாயம் 1

11 mins
474


இக்கதையை மாஸ்டர் திரைப்படம் பார்த்து ரசித்து அதன்பிறகு எனக்கு தோன்றிய கதையை மாஸ்டர் கதை போல் எழுதியுள்ளேன்.


எனக்கு பிடித்த விஜய் அண்ணா மாஸ்டர் படத்தில் வந்த ஜேடி போல் என் கதையில் வளவனையும்,விஜய் சேதுபதி அண்ணா மாஸ்டர் படத்தில் வந்த பவானி போல் என் கதையில் வடிவேலனையும் எழுதியுள்ளேன்.


எனக்கு திரில்லர் கதை எழுத இன்ஸ்பிரேஷனாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அண்ணாவுக்கு நன்றிகள்.


இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.


1992 கனேசபுரம்


கனேசபுரம் எனும் அந்த ஊரில் உள்ள மலைகளில் இருந்து பல ஆறுகள் உருவாகி சென்றன.


அந்த ஊரில் இருந்த சுப்பையா தன் தங்கையின் திருமணத்துக்காக கடன் வாங்கி இருந்தார்.


தங்கைக்கு 75 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்தார்.


பின்பு மாப்பிள்ளை வீட்டுக்கு ரொக்கமாக 30,000 பணம் தந்தார்.


கடனுக்கு வட்டி மேல் வட்டி கட்டி ஓய்ந்து விட்டார் சுப்பையா.


அவருடைய சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான் வட்டி குணா.


அவரது உயிரும் அநியாய வட்டிக்கு சென்று விட்டது.


அவரது மனைவிக்கு சத்துணவு திட்டத்தில் வேலை கிடைத்தது.


தன் 5 வயது மகன் வடிவேலனை எப்படியாவது படித்து நீயாவாது பொழச்சுகோ என சொல்லி சொல்லி வளர்த்தாள் அவனது அம்மா.


அடிக்கடி அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.


அந்த ஊருக்கு வரும் நல்ல மருத்துவர் அவன் தாயின் உடல்நிலையை பரிசோதித்து அவன் அம்மாவுக்கு வயிற்றில் கட்டி என்றும் மெட்ராஸில் இருக்குற பெரிய ஆஸ்பத்திரிக்கு போன காப்பாத்தலாம் என சொல்லி சில மருந்துகளை இலவசமாக கொடுத்துவிட்டு செல்கிறார்.


வடிவேலன் மீண்டும் அந்த வட்டி குணா விடம் சென்று கடன் வாங்கி அம்மாவை மெட்ராஸ் கூட்டிட்டு போனான்.


ஆனால் நோய் தீவிரம் அடைந்ததால் வடிவேலன் அம்மா உயிர் பிரிந்தது.


வடிவேலன் சொந்த ஊர் திரும்பி வராமல் வட்டி குணாவுக்கு பயந்து வேறு ஊருக்கு போய் அரசு பள்ளியில சேருகிறான்.


இதை கண்டுபிடிக்கும் வட்டி குணா வடிவேலனை பிடித்து கொண்டு போய் ஒரு‌ பெரிய ரவுடியிடம் அடியாளாக விற்று விடுகிறான்.


தினமும் அடி,உதை என வடிவேலன் ஒரு வேளை உணவு உண்டு வாழ்கிறான்.


அந்த பெரிய ரவுடியின் அனுமதியுடன் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கிறான்.


தினமும் அடி,உதை,அவமானம் என வடிவேலன் மனம் வெறுப்பை மட்டும் வாங்கி வெறுப்பை மட்டும் சேர்கிறது.அன்பு காட்டிய தாயும் இப்பொழுது அவனுக்கு இல்லை.




கல்லூரிக்கு பீஸ்க்கு காசு கேட்க பெரிய ரவுடி அவனை போய் ஒரு ரவுடியை அடித்து விட்டு வா என அடியாள்களுடன் அனுப்புகிறான்.


வடிவேலன் அந்த ரவுடியின் குடோனுக்கு போகிறான்.


பின்னே வரும் ஆட்களை நிறுத்தி விட்டு தனியா உள்ளே போகிறான்.


வடிவேலன் உள்ளே சென்று விட்டு சிறிது நேரத்தில் முகத்தில் ரத்தம் வழிய வெளியே வருகிறான்.


அவனின் அடியாள்கள் உள்ளே சென்று பார்த்தால் எல்லா ரவுடிகளும் கை,கால்கள்,தாடை உடைந்து கீழே கிடந்தனர்.


வடிவேலனை கொண்டு போய் பெரிய ரவுடி முன் நிறுத்தினார்கள்.


இந்தா நீ கேட்ட பணம்,ஆள் பாக்க நோஞ்சான்‌ மாதிரி இருந்தாலும் பின்னிட்டே வடிவேலா.


சரி அண்ணே ஆனால் என்னை நீ ஒரு அடியாளா சேர்த்துக்கோ‌ என வடிவேலன் சொன்னான்.


எலே நீ படிச்சு வேலைக்கு போவன்னு பாத்தா என்னாலே அடியாள் ஆகனும்னு சொல்ற என பெரிய ரவுடி கேட்க.


எனக்கு இது பிடிச்சிருக்கு,நான் உனக்கு செய்யுற வேலைக்கு நீ எனக்கு காசு கொடு.


சரிலே உன் இஷ்டம் என பெரிய ரவுடி சொன்னான்.




வடிவேலன் கல்லூரியில் படித்தப்படி ஒரு ரவுடியாக செயல்பட்டான்.


கல்லூரி படிப்பு முடித்த பிறகு ஒரு இருட்டான சிறிய ஐன்னலுடைய அறையில் தங்க ஆரம்பித்தான்.


அந்த ஐன்னல் வழியே உணவும்,குடிநீரும் வந்தது.


சிறிது நேரம் காலையில் வரும் வெளிச்சத்தில் கண்கள் படும் படி உட்காருகிறான்.


இரண்டு வருடங்கள் இவ்வாறே செல்கின்றன.


தன்னுடைய ரகசியங்கள் தெரிந்த வடிவேலனை கொல்ல அவன் இருக்கும் சிறிய ஐன்னல் உடைய அறைக்கு ரவுடிகளை அனுப்புகிறான்.


அந்த இரவு வடிவேலன் கையில் ரத்த கறை படிந்த படி அந்த பெரிய ரவுடியின் வீட்டுக்கு வந்தான்.


வடிவேலனை பார்க்கும் சாப்பிட்டு கொண்டிருக்கும் பெரிய ரவுடி அதிர்ச்சி ஆகிறான்.


டேய் போய் அந்த வடிவேலை போட்றா என பெரிய ரவுடி அடியாள்களுக்கு சொல்ல


வடிவேலன்‌ பெரிய ரவுடியின் அடியாள்களை‌ பார்த்து 


தம்பி கையலாம் ரத்தமா இருக்கு வந்து தண்ணீ உத்துமா என சொல்லுகிறான்.


ஒரு அடியாள் தண்ணீரை மங்கில் பிடித்து கொண்டு வந்து உற்றுகிறான்.


பெரிய ரவுடிக்கு வெர்க்கிறது.


டேய் தம்பி அந்த காத்தாடிய போடு அண்ணனுக்கு வெர்க்குது பாரு என் சொல்ல இன்னொரு அடியாள் போய் காத்தாடியை போட்டான்.


பெரிய ரவுடி பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது.


வடிவேலன் சிரித்தப்படி என் தம்பிகளா வெளிய போங்கடா என சொல்லி எந்துருச்சான்.


பெரிய ரவுடி கிட்ட பேசினான் வடிவேலன்.


ரெண்டு வருசம் ஒதுங்கி போன ஓடனே திருந்தி நம்மள காலி பண்ணுவான்னு முடிவு பண்ணி என்னை காலி பண்ண ஆளு அமுச்ச.


இந்த ரவுடிசம் நான் காசுக்காக மட்டும் பண்ணல,எனக்கு பிடிச்சிருக்கு என் கைய வைச்சு ஒருத்தன் மூஞ்சில குத்தும்போது இப்படி என‌ சொல்லி அந்த பெரிய ரவுடியை தன் கை முஷ்டியால் குத்தி மனசுக்கு இதமா இருக்கும் என்றான் வடிவேலன்.


நீ என்னை சரியா புரிஞ்சிக்கல அண்ணே என சொல்லிக் கொண்டே இரு கைகளின் முஷ்டியால் அந்த பெரிய ரவுடியை மாறி மாறி குத்தினான்.


வடிவேலன் தன் இரு கைகளிலும் ரத்தம் சொட்ட அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தான்.


ஒரு அடியாளை குப்பிட்டு நாம யாருன்னு தெரிய கூடாது.


ஆனா நம்ம பெயர் சொன்ன நம்ம நினைச்சது நடக்கனும்.


போய் ஊர் எல்லாம் சொல் வடிவேலன் பெரிய ரவுடியை போட்டான்னு.


அந்த அடியாள் மண்டையை ஆட்டிக் கொண்டு போனான்.


2016 சமுத்துவபுரம் எனும் இடத்தில்


அப்பா எனக்கு டியூஷன் போனும்,எனக்கு கிளாஸ்ல நடத்தறது புரியல என்றாள் சரண்யா.


சரி நீ உள்ள போ அப்பா உன்னை நல்ல டியூஷன்‌ மாஸ்டர் கிட்ட படிக்க ஏற்பாடு செய்றேன் என்றார் ராஜ்.


சார் வணக்கம் என்றபடி நாலு ரவுடிகள் உள்ளே வந்தனர்.


யார்‌ நீங்க என‌ ராஜ் கேட்க அந்த ரவுடிகள் நாங்கள் எல்லாம் வடிவேலன் ஆளுங்க,அண்ணே உங்க நேர்மையை பார்த்து ஒரு பரிசு குடுத்தாரு என ‌சொல்லி ஒரு டப்பாவை குடுத்தனர்.


அந்த டப்பாவை திறந்து பார்க்கும் ராஜ் அதிர்ச்சி ஆகிறார்.


ராஜோட பொண்ணு இதுக்கு முதல் நாள் போயிட்டு வந்த இடத்தோட லிஸ்ட் மற்றும் அந்த பொண்ணோட போட்டோஸ் எல்லாம் உள்ள இருந்துச்சு.


அண்ணே இப்போ உன் பொண்ணு இருக்குற போட்டோஸ் வரும் அப்பறம் உன் பொண்ணே போட்டோவ இருக்கும்.


மரியாதையா அந்த பேக்டரி பார்ட்டிக்கு நிலத்தை ரெஜிஸ்டர் பண்ணு.


அப்பறம் வரோம் சார்.


ராஜ் யோசனையில் இருந்தார்.


இதே நேரத்தில் அந்த ஊரில் இருந்த பிரியாணி கடையில் 


"ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா


கல்யாண சமையல் சாதம் 


ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா 




 கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்‌ அந்த கௌரவ பிராசாதம் இதுவே எனக்கு போதும்."


என்ற பாடல் ரேடியோவில் ஓட  


சப்பளையர் அங்கு வந்து ஒரு டேபிளை தட்டி சார் என்ன வேணும் என்று கேட்க வளவன் தூக்கத்தில் இருந்து எழுந்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.


இரண்டு பிளேட் பிரியாணி மட்டும் போதும் என்றான்.


வளவன் தன் வயிற்றை பார்த்து தொப்பை இருக்க இருக்க பெருசு ஆகிக்கிட்டே இருக்கே என சொன்னான்.


பிரியாணியை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தான்.


தான் இருக்கும் சிறிய வாடகை அறைக்கு நடக்க ஆரம்பித்தான்.


அங்கு இருக்கும் பள்ளியை தெரியாமல் பார்த்து விடுகிறான்.


அவன் மனம் தீடீரென சோகமாக மாறுகிறது.


தன் அறையை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டு அந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்கிறான்.


உங்க அண்ணே என்ன பெரிய இவனா அவன் இப்போ நான் பார்க்கனும் என்றான் ரவுடி கலியின் தம்பி.


டேய் தம்பி எமனை நீ எப்ப பார்ப்ப 


கலியின் தம்பி சாகும் போது என சொல்ல 


அதே மாதிரி தான் நீ வடிவேலனை பார்த்துதா உன்னை சாவு நெருங்கிடுச்சுனு அர்த்தம்.


இதோ வடிவேலனே வந்துட்டாரு என சொன்னான் அந்த அடியாள்.


வடிவேலன் இடது கையில் கத்தியை எந்திய படி வந்தான்.


பின்பு கலியின் தம்பி முன் அமர்ந்து வடிவேலன் என் விஷயத்தில உன் ணொன்னனையும் உன்னையும் தலையிடாதீங்கனு எத்தனை தடவை சொல்றது.


நீங்க கேட்கல இப்போ பாரு உங்க ணொண்ணே உன்னை நினைச்சு அழுது அழுது,என்னை கொல்ல நினைச்சு ரத்த அழுத்தம் ஏறி ஏறி பாவம்‌ என சொல்லி கத்தியை வடிவேலன் பார்க்க கலியின் தம்பி வெர்வையில் நனைந்தான்.


அடுத்த நாள் கலி தன் தம்பியின் உயிரற்ற உடலை கண்டு அழுதான்.


உன்னை விடமாட்டேன்‌ வடிவேலன் என கத்தினான் கலியன்.


தனது அறையில் படுத்திருந்த வளவன் பாட ஆரம்பித்தான் 


"பொறுப்பில் இருக்கிறவன்


 சிலர் மீது மட்டும் 


விருப்பு வெறுப்பு கொண்டால் 


யாருக்கு நன்மை.


தன்னால் நடந்த தவறை சரி


 செய்ய இயலாத அந்த


 பொறுப்பில் இருக்கிறவனுக்கு 


இனியும் உண்டோ பெருமை."


கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து செல்லும் வளவன் கதவை திறந்து பார்க்க அந்த பிரியாணி கடையில் சப்ளையராக வேலை செய்யும் சுப்புவின் மகன் பிரியாணி பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான்.


அண்ணே இந்தா அப்பா குடுத்தாரு.


சரி டா என சோகமான குரலில் வளவன் சொல்லி கதவை மூட போக அந்த பையன் அண்ணே எனக்கு பள்ளியில் நடத்துற சில பாடங்கள் புரியல,நானும் என் அப்பா கிட்ட கேட்டேன்‌ டூயூஷன் போகட்டுமானு கேட்டேன்.


அவர் நம்ம தெருவில் டியூஷன் இல்ல,பக்கத்து தெருவில் டியூஷனுக்கு காசு ஜாஸ்தி டா அப்படினு சொல்லிட்டாரு.


நீ காலேஜில் வேலை பார்த்தியாமே.


எனக்கு டியூஷன் எடுக்குறியா என அந்த பையன்‌ கேட்க. வளவன் சரி உன் பெயர் என்னனு கேட்டான்.


அந்த பையன் ஹரி என்றான்.


ஓகே ஹரி ,ரெண்டு நாள் கழிச்சு இங்க வா என்றான் வளவன்.


போயிட்டு வரேன் அண்ணே என்று சொல்லி சென்றான் ஹரி.


அடுத்த நாள்,வளவன் கார்ப்பேன்டர் ஒருவரை பார்த்து பளக் போர்ட் செய்ய அளவு குடுத்து விட்டு ஸ்டேஷ்னரி ஷாப்பில் சாக் பீஸ்கள் மற்றும் டஸ்டர் வாங்க சென்றான்.


அந்த ஸ்டேஷ்னரி ஷாப்பில் அவன் சாக் பீஸ்கள் மற்றும் டஸ்டர் வாங்கி கொண்டிருக்கும் போது சார் என்னும் குரல் கேட்டது.


வளவன் திரும்பி பார்த்தால் ஒரு பெண் இயல்பாக எந்த வித மேக் அப் இன்றி சுடிதார் போட்டு நின்று தன்னை கூப்பிட்டு நின்று கொண்டு இருப்பதை பார்க்கிறான்.


நான் மதிவதனி இங்க ஒரு பள்ளியில டீச்சர் வேலை பார்க்கிறான்,ஹரி எனக்கு தெரிஞ்ச பையன் தான் உங்களை பத்தி சொன்னான்,எங்க பள்ளியில் ஒரு டீச்சர் பசங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க இருந்தாங்க இப்ப அவங்க வேலைய விட்டு போய்ட்டாங்க.


நீங்க கொஞ்சம் அந்த கிளாஸ் ஹெண்டில் பண்ண முடியுமா.


வளவன் சரி மதிவதனி நான் ஹெண்டில் பண்றேன்.


மதிவதனி என்ன சார் டக்குனு பேர் சொல்லிட்டீங்க என கேட்க வளவன் சிரித்தப்படி நமக்கு பிடிச்சவங்களை சார்,மேடம் அப்படி எல்லாம் கூப்பிடாம உரிமையோடு அவங்க பெயரை சொல்லனும் அப்படினு எனக்கு தோணும்.


ஓஹோ அப்ப உங்க டீச்சர்,அப்பா,அம்மா எல்லாத்தையும் பெயர் சொல்லி கூப்பிடுவிங்களா என மதிவதனி கேட்க.


வளவன் சிரித்தப்படி உங்களை பார்த்த உடனே என் மனசு டேய் வளவா எவ்வளவு அழகுடா இந்த பொண்ணுனு தான் சொல்லுச்சு.


மதிவதனி தப்பா எடுத்துக்காதீங்க,அழகா இருந்தா எதையுமே மனசார பாராட்டனும்‌‌ என‌ வளவன் சொன்னான்.


ஒகே சார்,நாளைக்கு காலைல ஹெச்.எம் மேடத்தை வந்து பாருங்க என சொல்லி மதிவதனி அங்கு இருந்து ஸுகுட்டியில் சென்றாள்.


அடுத்த நாள்,அந்த பள்ளிக்கு செல்லும் வளவன் தன் சர்டிபிகேட்ஸ் உடன் ஹெச்.எம் அறைக்கு வெளியே காத்திருந்து பின்பு ஹெச்.எம் மேடம் வளவனுக்கு அந்த ஸ்பெஷல் கிளாஸில் வேலை செய்யவதற்கான ஆர்டர் கொடுக்கப்படுகிறது.


சுப்புக்கு போன் செய்து தனக்கு வேலை கிடைத்துருப்பதை கூறி உன் பையனை சாயிங்காலம் 7 மணிக்கு வர சொல்லு பா டியூஷனுக்கு என சொல்லி போனை வைக்கிறான் வளவன்.


வேலை கிடைச்ச சந்தோஷத்துல வளவன் பிரியாணி கடைக்கு சென்று தனக்கு பிரியாணியும் தன் நண்பனுக்கு மட்டன் சாப்ஸ் வாங்கி சென்றான்.


தன் அறைக்கு சென்று ஏய் புல்லட் என கூப்பிட்டான்.


அவன் நாய் புல்லட் வந்தது.


அதற்கு மட்டன் சாப்ஸ் இவரை பிரித்து வைத்து அதன் பக்கத்தில் அமர்ந்து தன் பிரியாணியை உண்ண ஆரம்பித்தான்.


அந்த இரவு ,வடிவேலுனுடைய இடத்தில் அவன் தன் அடியாள்களுக்கு விருந்து ஏற்பாடு செய்தான்.


ரேடியோவில் நவராத்திரி படம் பாடல்


" இரவினில் ஆட்டம் 


பகலினில் தூக்கம்


 இது தான் எங்கள் உலகம்


 எங்கள் உலகம்  


பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன 


உனக்கும் தெரியாது 


இறந்த பின்னாலே நடப்பது என்ன


 எனக்கும் புரியாது 


இருப்பது சில நாள் அனுபவிப்போமா 


எது தான் குறைந்து விடும் 


எது தான் குறைந்து விடும் "


எனும் பாடல் ஒலிக்க 


அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க ஒரு அடியாள் மட்டும் வடிவேலன் அண்ணே உன் மனசு யாருக்கு வரும் எங்க எல்லாத்துக்கும் பிரியாணி வாங்கி குடுத்துட்டு நீ மட்டும் இடியாப்பம்,இட்லி சாப்பிடுறியே என அழுதான்.


டேய் தம்பி இங்க வா இட்லி,இடியாப்பம் இன்னொரு பொட்டலம் இருக்கு வந்து அண்ணண் கூட உக்காந்து சாப்பிடு என்றான் வடிவேலன்.


இல்லை அண்ணே பரவால என்றான் அந்த அடியாள்.


அப்பறம் எதுக்குடா இந்த வெத்து பேச்சு சாப்பிட்டு போய் தூங்குடா.




வடிவேலன் அடுப்பில் வெறும் பாலை காய்ச்சி டம்ளரில் ஊற்றி நாட்டுச்சக்கரை போட்டு ஆத்தி குடுத்து விட்டு எல்லா அடியாள்களையும் கூப்பிட்டான்.


கலியின் ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு அவனையும் அவன் ஆளுங்களையும் கவனமா பாருங்க.


நேரம் வரும் போது அவனையும் பார்த்துக்குவோம் என்றான்.


சரண்யா தன் வீட்டில் சமையல் செய்யும் தேவியிடம் தன் டியூஷன் தேவை பற்றி சொல்கிறாள்.


தேவி தன் மகளின் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கும் வளவன் டியூஷனும் எடுப்பதாகவும் அவர் ஒரு நல்ல ஆசிரியர் என கூறுகிறாள்.


சரண்யா இதை தன் அப்பாவிடம் சொல்ல அவங்க அப்பா ராஜிடம் இதை சொல்ல அவர் நான் விசாரிக்கிறேன் என சொல்லி அந்த இடத்துக்கு செல்கிறார்.


வளவன் சாயிங்காலம் டியூஷனில் கிளாஸ் முடித்துவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ஹரியின் அப்பா சுப்பு தயங்கி தயங்கி சார் இந்தாங்க டியூஷன் பிஸ் என்று பணத்தை நீட்டினார்.


வளவன் தயங்கிய சுப்புவின் கையை பிடித்து அண்ணே இந்த 500 ரூபாயில நான் உங்க திருப்திக்காக 50 ரூபாய் வாங்கிக்கிறேன்.


நான் பள்ளியில் சம்பளம் வாங்குவேன்.என் செலவுக்கு அந்த பணம் போதும்.


நான் இலவசமா தான் சொல்லி தரணும் ஆனாலும் நான் கொஞ்சம் பணத்தாசை பிடிப்பவன் அதுனால 50 ரூபாய் எடுத்துக்கிட்டேன் ஓகே வா என்று வளவன் சிரித்தான்.


சுப்பு வளவனை கட்டி பிடித்தான்.


இதை கண்டு ராஜ் நெகிழ்ச்சி அடைகிறார்.


ஆனால் ராஜ் தன் மகளுடைய உயிர் பற்றிய கவலை தொற்றிக் கொள்கிறது.


பின்பு போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டர் ஷாயமிடம் வடிவேலன் மற்றும் அவன் ஆட்களின் மிரட்டல் பற்றியும் கூறினார்.


ஷ்யாம் ஒரு கம்பளைன்ட் வாங்கி கொண்டு உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் நிச்சயம் ஒன்றும் ஆகாது என சொல்லி அனுப்புகிறான்.


ராஜ் வெளியே வர ஒரு ரவுடி அவரைப் பார்த்து சார் என்ன வடிவேலன் மிரட்டினானா கவலைப்படாதிங்க கலியன் அண்ணன்‌ கிட்ட வாங்க அந்த வடிவேலன் உங்களை நெருங்க கூட முடியாது.


காசு எவ்வளவு என‌ ராஜ் கேட்க,சார் அதெல்லாம் வேணாம் என சொல்லி கலியனிடம் கூட்டி போய் வடிவேலனின் மிரட்டல் பத்தி ராஜை சொல்ல வைக்கிறான் ‌அந்த ரவுடி.


கலி‌ அதை கேட்டு விட்டு சார் அந்த வடிவேலன் நிழல் கூட உங்க பொண்ணு மேலயும் உங்க மேலேயும் படாது.


ராஜ் தைரியமாக அங்கிருந்து செல்கிறான்.


வளவன் தன் அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தான்.


இரவு தூக்க கலக்கத்தில் கதவை சரியாக தாள் போடாமல் தூங்கி விட்டான் வளவன்.


ஹரி உள்ள வந்து அண்ணே எந்திரிக்க அண்ணே அக்கா வந்துருக்காங்க.


என்னது தொலைஞ்சு போன உங்க அக்கா கிடைச்சதில்ரொம்ப சந்தோஷம்‌.


இந்த அண்ணனுக்கு பிரியாணி பார்சல் வாங்கி குடுடா.


அண்ணே நான் எங்க அப்பாவுக்கு ஒரே புள்ள வந்துருக்கது மதிவதனி அக்கா.


அப்படியே ஐயோ வீடு சுத்தம் பண்ணலையே நான் வேற இன்னும் குளிக்கல அவங்க சாப்பிட ஒன்னும் இல்லையே நீ ஓடி போய் புரோட்டாவும் கொத்துக்கறி குழம்பும் வாங்கிட்டு வா.


அப்பறம் நான் உனக்கு அண்ணே நா,அவங்க உனக்கு அந்நி டா.


சோ நீ மதிவதனி அக்கா அப்படினு கூப்பிடாதே மதிவதனி அந்நி அப்படினு கூப்பிடு ஓகே வா


மதிவதனி கதவுக்கு அருகில் நின்று இதை அனைத்தையும் பார்ப்பதை கண்ட வளவன் தன் கண்களை மூடி சே என்றான்.


மதிவதனி சார் உங்க கூட பேசனும் வெளிய வாங்க ஹரி தம்பி வீட்டு பாத்துக்கோ.


மதிவதனியும் வளவனும் காலாற நடந்து சென்றனர்.


மதிவதனி வளவனிடம் சார் ஒரு பொண்ணை இம்ப்ரஸ் பண்றதுனா அவளை பாத்து பாடுவது,கவிதை எழுதுறது ,பன்ச் டயலாக் பேசுறது இல்லை.


அவளுக்கும் மனசு இருக்கு தயவு செஞ்சு அதை புரிஞ்சிக்கோங்க.


நீங்க நீங்களா எப்பவும் போல இருங்க.


போயிட்டு வரேன் சார்.


வளவன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.


வீட்டிற்கு வந்து ரேடியோவை ஆன் செய்ய 


"காலங்களினில் 


அவள் வசந்தம்


 பறவைகளில் 


 அவள் மணி புறா 


 பாடல்களில் அவள் தாலாட்டு 


பறவைகளில் அவள் மணி புறா 


பாடல்களில் அவள் தாலாட்டு" 


என‌ பாடல் ஒலிக்க அதை கேட்டு கொண்டு படுத்திருந்தான்.


சார் என் சரண்யாவின் குரல் கேட்க கண்ணீரை துடைத்து கொண்டு வா மா என சொல்லி ஃபோர்டு முன் உட்காரு என சொல்கிறான்.


சரண்யாவுக்கு டியூஷன் எடுத்து விட்டு அவன் போய் படுத்து கொண்டான்.


ஹரியும் டியூஷன் முடித்து கிளம்பி இருந்தான்.


சரண்யா திரும்ப வந்து சார் அப்பா மீட்டிங்ல இருக்காரு.


வர 1 மணி நேரம் ஆகுமா.


சரி மா இங்கேயே வெயிட் பண்ணு மா என சொல்லி பிரியாணி உண்ண செல்கிறான்.


சார் நீங்க என் சார் அளவுக்கு மீறி அசைவம் சாப்பிடுறீங்க இங்க பாருங்க உங்க உடம்புல கெட்ட கொழுப்பு ஏறி போயிருக்கும் என‌ சரண்யா கேட்க வளவன் ஆமாம் மா இந்த சார் குற்ற உணர்ச்சியோட வாழ்ந்து கிட்டு இருக்கேன்.


அதை மறைக்க தான் எனக்கு பிடிச்ச விஷயங்களை அளவுக்கு அதிகமா செய்றேன்.


சார் நீங்களா, நீங்க எவ்வளவு நல்லவர் நீங்க எப்படி தப்பு பண்ணுவீங்க.


இந்த சார் பிறந்ததிலிருந்து கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ஒரு மோசமான இகோ பிடிச்சவனா இருந்தேன்.


எங்க அப்பா அம்மாவுக்கு நான் ரொம்ப செல்லம்.ஒரு வார்த்தை கூட என்னை எங்க அப்பா அம்மா தீட்டுனதோ கண்டிச்சதோ இல்லை.


நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன்.


மெக்கேனிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு அதே கல்லூரியிலே புரோபஸர் வேலையில் சேர்ந்தான்.


என் கிளாஸில் கிஷோர் அப்படினு ஒரு ஸ்டூடன்ட் சேர்ந்தான்.


அவனை எனக்கு பார்த்ததில் இருந்து பிடிக்கல.


அவனும் நான் எதை சொன்னாலும் தட்டாம செய்வான்.


ஒரு நாள் நான் போர்ட்டில் தப்பா எழுதிட்டேன் கிஷோர் அதை சுட்டி காட்டினான்.


என் ஈகோ ஹர்ட் ஆகிடுச்சு.


அவனை காலேஜ் முடிஞ்சம் அவனுக்கு மட்டும் கிளாஸ் வைச்சு அட்டெண்ட் பண்ண சொன்னேன்.


அவன் எங்க அம்மா உடனே வரச் சொன்னாங்க அப்படின்னு கெஞ்சுனான்.


நான் விடவே இல்லை.


அப்பறம் அவன் பிரெண்ட் காலேஜ் வந்து டேய் உங்க அப்பாவை வெட்டிடாங்க என சொல்ல நான் அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்.


அவன் அப்பாவை பிடித்த கலியின் ஆட்கள் கேட்ட பணம் தரவில்லையென்றால் உன் புருஷனை வெட்டி விடுவோம் என மிரட்ட உடம்பு முடியாத கிஷோரின் அம்மா கிஷோருக்கு போன் செய்து உடனே வா என சொல்லியுள்ளார்கள்.


நான் கிஷோருடன் ஹாஸ்பிடல் சென்றேன்.


அவங்க அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.


பின்பு அவர் உயிர் பிழைத்து விட்டார் என செய்தி வந்தது.


ஆனால் அவரால் இனி கைகள் கால்களை அசைக்க முடியாது என்ற செய்தியும் வந்தது.


கிஷோர் என்னிடம் வந்து கேட்டான்.


"என்ன சார் ஹர்ட் ஆன உங்க ஈகோ இப்ப கூல் ஆகிடுச்சா.


உங்க கிட்ட இருக்கது சுயமரியாதை ஈகோ இல்லை சார்.


உங்க கிட்ட இருக்காது அடுத்தவங்க உணர்சிச்களை காயப்படுத்தும் ஈகோ.


டீச்சர்,டாக்டர்,கடவுள் எல்லாரும் ஒன்று சார்.ஏனா இவங்க யாருக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்காது,இருக்கவும் கூடாது சார்.


இனி மேலாவது மாறுங்க சார்."


அழுதபடி சென்றான் கிஷோர்.




என்னால குற்ற உணர்சி தாங்க முடியல.


எங்க அப்பா நடந்த எல்லா விஷயத்தையும் கேள்வி பட்டு என் கிட்ட பேசுவதையே விட்டுட்டாரு.


நானும் என் வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த ஊருக்கு வந்தேன்.


அழுதபடி பேசிய வளவனை தேற்றினர் ஹரியும்,சரண்யாவும்.


வடிவேலன் கலியின்  இடத்தை பற்றி தெரிந்து கொண்டு தன் ஆட்களை அனுப்பி அவர்களை வைத்து சில காரியங்கள் ஆற்றினான்.


சரண்யாவின் அப்பாவை கொல்லவும் ஆள் அனுப்புகிறான் வடிவேலன்.


சரண்யாவின் அப்பா ராஜ் கீழே வர வடிவேலனின் ஆட்கள் அவரை அடிக்க ஆரம்பிக்கின்றனர்.


சரண்யா அலறி கொண்டு வளவனை கத்தி கூப்பிடுகிறாள்.


வளவன் தொப்பை தள்ளியபடி கீழே வருகிறான்.


சார் அப்பாவை காப்பாத்துங்க சார்.


ஒரு அடியாள்,ஏய் வாத்தி நீ சத்தம் போட்டு  யாராவது இங்க வந்தா கையில் பாரு இரும்பில் செஞ்ச சாமான் அப்பறம்  எவன் வந்தாலும் சொருகிடுவோம்.


எங்களுக்கு தேவை இந்த ராஜ்,அப்பறம் அவன் பொண்ணு.


வளவன் அந்த ஆட்களுக்கு பின்புறம் பார்த்தால் கலியின் ஆட்கள் செத்து கிடந்தனர்.


மக்கள் பயந்து ஓடி கொண்டிருந்தனர்.


வளவன் தன் பைக் சாவியை எடுத்தான்.


ராஜை பார்த்து சார் நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க காரில்.


நான் இவங்களை பார்த்துக்கிறேன்.


அவர்கள் காரில் கிளம்ப வளவன் இந்த ஆட்களை தடுக்க போக அவர்கள் வளவனின் தாடையில் அடித்தார்கள்.


வளவன் கீழே விழுந்தான்.


கலியின் இடத்திற்கு வடிவேலன் தன் ஆட்களுடன் சென்றான்.


அந்த இடம் வெட்ட வெளியான மைதானம் நான்கு சுவர்களுடன் இருந்தது.




கலியின் தரப்பிலும் சரி,வடிவேலன் தரப்பிலும் சரி அனைவரும் தாங்கள் வைத்திருந்த மொபைல் போன்களை ஒரு சுவரின் பக்கம் வைத்து விட்டு மீட்டிங்கை தொடங்கினர்.


ஏலே பசங்களா சாமி தரிசனம் பண்ணுங்களே இவர் மூஞ்சிய பார்த்த இவர் எதிரிகள் உயிரோடு இருக்கமாட்டாங்களா என கலி சிரித்தான்.


மூக்காலம்  உணர்ந்த கலி சார் நடக்கப் போறத எப்படி இவ்வளவு சரியா சொன்னீங்க என வடிவேலன் சொல்ல.


டேய் போடுறா இவனை என கலி கத்த,வடிவேலன் ஏய் கலி நீ ரவுடி தானே நீ போடு என்னை.


"நீ நம்பிக்கையை உன் அடியாளுங்க மேல வைச்சுருக்க கலியா,நான் என் மேல வைச்சுருக்கேன்."


என சொல்லி தன் ஆளுங்களை பார்த்து தலையசைத்தான்.


ஒருவன் வெளியே ஓடி போய் அந்த இடத்துக்கு வந்த கரெண்ட் ஓயர் மீது இரு முனையிலும் கற்கள் கட்டிய ஓயரை வீசினான்.


கலி சிரித்து கொண்டே இன்வெர்ட்டர் வேலை செய்யும் என்றான்.


ஆனால் இன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை.


வடிவேலன் ஆள் போட்டு அந்த இன்வெர்ட்டரை ரிப்பேர் செய்துவிட்டான்.


வடிவேலன் அந்த இருட்டு அறையில் இரண்டு வருடம் இருந்து மற்றும் தினமும் தன் கண்களை இருட்டுக்கு பழக்கப்படுத்தி கொண்டிருந்தான்.


வடிவேலனின் ஆட்கள் அவன் முன்னரே சொன்ன படி தரையோடு தரையாக தலை மீது இரு கைகளையும் வைத்து படுத்தனர்.


வடிவேலன் கலியின் ஒவ்வொரு ஆட்களையும் கழுத்து,கை,கால்களை உடைத்து போட்டான்.


கடைசியில் வடிவேலன் கலியிடம் வந்து கலியின் வயிற்றை இடைவெளி விடாமல் இரு கைகளால் மாறி மாறி குத்தி கலியனை தலைக்கு மேல் தூக்கி தரையில் ஓங்கி எறிந்தான்.


பின்பு மொபைல்கள் இருந்த இடத்திற்கு சென்று தன் ஆட்களை அழைத்து அனைத்து மொபைலிலும் இருக்கும் சிம்களை கழட்டி ஏறிய சொன்னான்.


பின்பு வெரும் மொபைல்களை காரில் இருக்கும் பையில் போட சொன்னான்.




வடிவேலனின் மொபைலுக்கு ஒரு போன் வந்தது.



உபாத்தியாயர் அத்தியாயம் 2 என தொடரும்.


இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யவும்.











Rate this content
Log in

Similar tamil story from Action