உன் பொண்டாட்டிய தான்
உன் பொண்டாட்டிய தான்


காலையில் சமையலை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் வாணி. அந்த வீட்டின் குட்டி சுட்டீஸ் கவின், விவின் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கவின் கத்தரிக்கோலை எடுத்து விளையாடினான்,,, கவின் கத்தரிக்கோலை வை என்று அதட்டினாள் வாணி.
அவன் பேப்பரை எடுத்து வெட்டும்போது விவின் அருகில் வந்துவிட விவின் கண்ணுக்கு அருகில் கத்தரிக்கோல் பட்டுவிட்டது.
கத்தரிக்கோலை எடுக்காதேனு சொன்னேன்ல என்று கவின் முதுகில் சுல்லென அடித்துவிட்டு, அழுது கொண்டிருந்த விவினை தூக்கி சமாதானப் படுத்தினாள்.
கவின் கோபித்துக் கொண்டு அடி வாங்கிய இடத்திலேயே நின்றான். சரி வா கவின் நீ செஞ்சது தப்புதானே....
என்ன எதுக்கு அடிச்ச?
தம்பி கண்ல பட்டிருந்தா என்ன ஆகுறது?
அவன்தானே என்கிட்ட வந்தான்?
பேசிக்கொண்டிருக்கும் பொழுது கவின் அத்தை வந்து ஏன்டா அடம் பன்றனு கேட்க, கவின் அவன் அத்தையை போ என்று சொல்லி குட்டி கைகளால் அடித்தான். அவன் அடித்தது வலிக்காது என்றாலும் அப்படியே அடம்பிடித்து பழகிக்கொள்வான் என்று இவள் பங்கிற்கு ஒரு அடி வைத்தாள்.
அவன் கோவமாக...இரு உங்க இவருகிட்ட சொல்லி உன்ன அடி பின்ன சொல்லறேன் என்று மலழைக் குரலில் சொல்ல...
எவருடா அந்த இவரு?...
மாமா...
சரி சொல்லிக்கோ என சிரித்துக் கொண்டே சொல்லி சென்றாள் ராகினி.
ராகினி அவள் கணவனுடன் போனில் பேசியபடி வர,
மாமா என்றான் கவின்...
உங்க மாப்பிள்ளை உங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்...
சொல்லு கவின் என்ன பன்ற? மாமாகிட்ட என்ன சொல்லனும்?
அடிக்கனும் மாமா...
யார அடிக்கனும்?
உன் பொண்டாட்டியதான்...
ஹாஹாஹாஹா
அருகில் இருந்த அனைவரும் இவனுக்கு இப்பவே எவ்வளவு குசும்பு பாரேன் உன் பொண்டாட்டியனு சொல்றான் என்று சிரித்தனர்.
எத்தன அடி சாமி அடிக்கனும்?
ட்டூ ஹன்ரட் டைம்ஸ் அடிக்கனும் ,சீக்கிரம் வாங்க...
சரி மாமா வந்ததும் அடிக்கலாம் அதுவரைக்கும் என் பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கோ மாப்ள...ஹாஹாஹா
சரி மாமா...
UKG தான் படிக்ககிறான் கவின், ஆனா எவ்வளோ பேசுறான், பெரிய மனுசன் மாதிரி
சுட்டிப்பய...
இப்ப உள்ள பிள்ளைகள் எல்லாம் அட்வான்ஸ்ட் அன்ட் அடமென்ட்!!!