Harini Ganga Ashok

Crime

4.7  

Harini Ganga Ashok

Crime

உண்மையின் பக்கம்

உண்மையின் பக்கம்

3 mins
232


சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் எனப்படும் மட்டைப்பந்து விளையாட்டில் முடிசூடா மன்னன் அவர். மாஸ்டர் பிளாஸ்டர் என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.


அவரை ஒரு வழக்குரைஞராக மாற்றி பார்ப்போமா... கற்பனைகளுக்கு ஏன் முட்டுக்கட்டை போட வேணும்...

சச்சின் ஒரு வழக்குரைஞராக இருந்திருந்தால்.....


சென்னையின் உயர்நீதிமன்றம் அன்று பரபரப்பாக இருந்தது. மருத்துவ துறையினர் ஒரு வாரமாக தங்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழக்கிற்கான தீர்ப்பிற்காக தான் இத்தனை பரபரப்பும். நியாயமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் அவர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை அதை கண்காணிக்க வேண்டும் மேலும் ஊதியம் அதிகமாக்க படும் என்று நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வழங்கியது என்னமோ நீதிபதி தான் ஆனால் அவரின் தீர்ப்பிற்கு பின் இருந்தது சச்சினின் வாதங்கள். எடுத்த வழக்குகளை நன்முறையில் முடித்து கொடுப்பார். வழக்கு அவர் எடுத்துக்கொண்டால் அதில் வெற்றி நிச்சயமே.


வழக்கு முடிந்து வெளியே வரும் வேளையில் அவரை சந்திக்க அரசியல்வாதி ஒருவர் காத்திருந்தார். முன்னாள் எம்.பியாக இருந்தவர். அவரிடம் கேட்டதில் அவருக்கு சாதகமாக வழக்கு ஒன்றை நடத்த வேண்டும் என்று கூறினார். விவரங்களை கோப்புகளில் வழங்கினார். படித்துக்கொண்டு வழக்கை ஏற்பதா வேண்டாமா என்று கூறுவதாக சொல்லி புறப்பட்டுவிட்டார். தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அந்த அரசியல்வாதி பொறுமி தள்ளினார்.


ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்டு பல கோடி சம்பாதித்ததாக அவர் மேல் வழக்கு ஒன்று போடப்பட்டிருந்தது. அதை கொடுத்தது வேற யாரும் இல்லை அவருடைய மருமகள் தான். மாமனாரின் இச்ச்செயல்களை கணவனிடம் கூறிய பொழுது அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்பே அவளுக்கு தெரிய வந்தது தன் கணவனும் இதற்கு உடந்தை என்று. சற்றும் யோசிக்கவில்லை அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதித்தாள். இதை அறிந்த அந்த இருவரும் மிரட்டினர். கர்ப்பமாக இருக்கும் அவளை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவோம் என்றும் கொல்ல கூட தயங்க மாட்டோம் என்று அவளை அடித்து கொடுமை படுத்தினர். வலியை தாங்கிக்கொண்டாலே தவிர வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை.


இதை கோப்புகளில் இருந்து மட்டுமல்ல தனியாக அவரும் விசாரித்து தெரிந்துகொண்டது. தீர விசாரிக்காமல் எந்த வழக்கையும் எடுப்பதில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் முன் அவரின் மருமகளை சந்தித்து மேலும் விவரங்களை தெரிந்து கொண்டார். அவளை பாக்க அவர் பெருமையாக உணர்ந்தார். எட்டு மாத கர்ப்பிணி அவள். துணிந்து செயலில் இறங்கி இருக்கிறாள். அவள் கண்களின் பயத்திற்கான சாயல் சிறிதும் இல்லை. அவளிடம் தான் அவளின் மாமனார் சார்பாக வாதாட போவதாக கூறியும் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. முடிந்தவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று போய்விட்டாள். வீட்டை விட்டு அவளே வெளியேறி விட்டதாகவும் தற்போது ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருக்கும் தகவலையும் அவர் அறிவார்.


ஆற்று மண்கடத்தல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசியல்வாதி சார்பாக சச்சின் ஆஜராகி இருந்தார். மருமகள் கீதாவின் பக்கம் யாரும் இல்லை. அரசு வழக்குரைஞரை பரிந்துரை செய்தும் அதனை அவள் மறுத்துவிட்டாள். தனக்காக தானே வாதாடினாள். ஆரம்பத்தில் சச்சின் அந்த அரசியல்வாதிக்கு சார்பாக வாதிட்டு கொண்டிருந்தாலும் வாதத்தின் இறுதியில் அவருக்கு எதிரான சாட்சியங்களை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு வந்தார். சச்சினின் வாதமும் அவருக்கு எதிராக திரும்பியது. இதை சற்றும் அரசியல்வாதி எதிர்பார்க்கவில்லை.


தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஆற்றுமண் கடத்தலில் ஈடுபட்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீதா சச்சினிடம் நன்றி உரைத்தாள். சாட்சியங்களோடு நிரூபித்ததற்காக.

சச்சின் அவளிடம் 10 வருடம் கழித்து அவர்கள் வெளியே வரும்போது உன்னை ஏதும் செய்ய மாட்டார்களா என்று கேட்ட பொழுது. அவள் அப்போது பத்து வருடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி சென்றாள். பிரமிப்பாக பார்த்தார் சச்சின் அந்த பெண்மணியை.


வழக்கை ஏற்க மறுத்தால் இன்னொரு வழக்குரைஞரிடம் நிச்சயம் செல்வார் என்று தெரியும் அவர் பணத்திற்காக நீதியை விற்றுவிட்டால் என்ன செய்வது என்று எண்ணித்தான் வழக்கை ஏற்க ஒப்புக்கொண்டார் சச்சின் அவரின் வாதத்தை தன் கட்சிக்காரருக்கு எதிராகவே திருப்பி தண்டனை வாங்கி கொடுத்துவிட்டார். இனி வரப்போகும் விளைவுகள் எதுவாகினும் சந்திக்க தயார் என்ற முடிவோடு புறப்பட்டார்.


பரமசிவன் தன்னில் பாதி சக்தி என்று அகிலத்தாருக்கு தெரியப்படுத்தினார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறாள். வழக்குரைஞர் பதவி என்பது நியாயத்தை வழங்க போராடும் தர்மத்தின் பாதை அதில் நேர்மை மட்டுமே இருக்க வேண்டும் சுயலாபம் அல்ல. மனிதர்கள் செய்யும் வேலைகள் மாறுபடலாம் ஆனால் மனசாட்சி மீறி நடந்துகொள்ள கூடாதல்லவா... தவறு என்று தெரிந்தால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள். நம்முடைய வேலைகளில் நாம் கடவுளை மறந்தாலும் நம்மை படைத்தவர் நம்மை காக்க என்றும் இருக்கிறார். உண்மையின் பக்கம் தான் நான் என்று உறுதி கொள்ளுங்கள்


Rate this content
Log in

Similar tamil story from Crime