துரத்தும் எண்ணங்கள்
துரத்தும் எண்ணங்கள்
எண்ணம் ஒன்று.
எண்ணங்கள் என்னவோ துரத்தி கொண்டு தான் இருக்கிறது.ஆனால்
உடலோ அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,கால்கள் பின்னி கொண்டு நடக்கின்றன.
நல்லது செய்ய மனம் விளைகிறது,ஆனால் செயல் படுத்த
உடல் மறுக்கிறது.
மனம் இருந்தும் மறுப்பது ஏன்.
வயதானவர் மனதில் மற்றவருக்கு
ஏதாவது செய்ய நினைக்கிறார்,ஆனால் வயோதிகம் காரணம் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.அப்படியே செய்தாலும்,ஒரு முறை அல்லது இரு முறைக்கு மேல் முடிவது இல்லை.
மற்றவரை கொண்டு செய்விக்கலாமே,என்ற எண்ணம் வந்தாலும்,அது அவர் திருப்திக்கு நடப்பது இல்லை.
