STORYMIRROR

Madhu Vanthi

Abstract Inspirational Others

4  

Madhu Vanthi

Abstract Inspirational Others

தப்ப முடியாது மக்களே

தப்ப முடியாது மக்களே

1 min
237

இந்த முடிவை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.... கோபம் கோபமாக வந்தது... ஆனால் எப்படி காட்டுவது என்று தான் ஒன்றும் புரியவில்லை... தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தகுதியற்ற ஒருவளுக்கு கிடைத்து உள்ளது.... 


அந்த கோபத்துடன்யே வீட்டிற்கு வந்தவள் வாயிலை தாண்டியதும் தனது ஸ்கூல் பேக்கை தூக்கி எறிந்து விட்டு நேராக அம்மாவிடம் சென்றாள்.... 


அவள் முகம் இறுகி இருப்பது தாய்க்கு தெளிவாகவே தெரிந்தது.. எதுவும் கேட்காமல் தான் செய்து வைத்திருந்த கேசரியை ஒரு கின்னத்தில் எடுத்து மகளிடம் நீட்ட.... அவன் அதே முறைப்புடன் கேசரியை நோக்கியவள், "எனக்கு வேணாம்..... நான் ஜெயிக்கல", என முறுக்கிக்கொண்டு கூறினாள்.


"அட... பாப்பாக்கு அது தா கோபமா... இன்னைக்கு இல்லன்னா என்ன... கண்டிப்பா உன் திறமைக்கு இன்னொரு நாள் பிரைஸ் கெடைக்கும் மா", ஏன மகளை சமாதானம் செய்ய முனைந்தார் தாய்.


"ஹ்ம்ம்... நா ஜெயிக்களனாலும் பரவா இல்லம்மா... என்னோடது கொஞ்சம் சுமாரா தா இருந்துச்சு... ஆனா என் பிரண்டோடது ரொம்ப அழகா இருந்துச்சு... அந்த ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குன ட்ராய்ங் அவ்ளோ அழகா ஒன்னும் இல்ல... ஆனா அது தா ஃபர்ஸ்ட் பிரைசாம்...", என அவள் எதுவும் அறியாதவலாய் தாய் முன் நிற்க... அந்த தாய் என்ன கூறுவாள்...


அரசியல் எதையும் விட்டு வைப்பதில்லை என்றா???..... 

 



Rate this content
Log in

Similar tamil story from Abstract