KANNAN NATRAJAN

Abstract Drama Tragedy

3  

KANNAN NATRAJAN

Abstract Drama Tragedy

தொலைநோக்கு

தொலைநோக்கு

3 mins
173


ஆட்டோவில் ஏறிப் போம்மா!நேரமாச்சு……

போம்மா! நடவுகூலிக்கு ஆள் வந்தாச்சு…கையில் வட்டிக்கு வாங்கிய பணம்தான் இருக்கு…..

யார் இடத்திற்கு வேலைக்கு போறீங்க………..?

இரண்டு ஆள் குறையுது..

உன் பிள்ளைகளை வச்சுக்க வேண்டியதுதானே!

என்ன காமராசரா திரும்ப வந்து சோறு,நல்ல படிப்பு தரப்போறாருன்னு பார்த்தே! இப்ப தமிழ்வழிக்கல்விதான் கிராமங்களில் பெரும்பாலும் இருக்கு…ஆனால் தமிழ் டாக்டர் கிடையாது. கிராமத்திற்கும் சேவை செய்யும் மனப்போக்கும் கிடையாது. பணத்தைச் செவழிச்சா திரும்ப எடுக்கணும்னுதானே தோணும்… ஒரு சின்ன தலைவலின்னா கூட ஒரு மைல் நடந்து போய் ஆஸ்பத்திரி போகணும். ஆட்டோ வச்சுத்தான் போகணும். அதுக்கு கொடுக்கக்கூட காசில்லாமல் எத்தனையோ தடவை நடந்தே போயிருக்கேன்.

ஏன் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டியதுதானே!

ப்ச்! வசதி அங்க குறைவுதானே! பள்ளியாகட்டும்..மருத்துவமனையாகட்டும்.அரசு கொடுக்கிற சம்பளம்தான் தனியார் நிறுவனம் கொடுக்கிற சம்பளத்தைவிட அதிகம் என்றாலும் தரம் தனியார்லதான் இருக்கு. அப்படின்னா வேலை செய்யற போக்கு இல்லைன்னுதானே அர்த்தம். இலஞ்சம்தான் கொடி கட்டுது!

நல்ல படிப்பெல்லாம் இப்ப வேலை செய்யறேனே! அவர் தலைமையில் பல பள்ளி எல்கேஜியிலிருந்து மெடிகலு,இஞ்சினீயரிங்படிப்பெல்லாம் இருக்கு! அவர் பள்ளியில் லீவு போட்டா பாடம் போயிடுமாம்.பசங்க வராது. நுனி நாக்கு இங்கிலீஷூ,நல்ல லேப்,லைப்ரரி,வழுவழுன்னு தரை இதெல்லாம் என் பிள்ளைக்கு வேணும். எனக்கு அரசு பள்ளியில் நல்ல கல்வி மட்டும் இருந்துச்சு. ஆனா என் பசங்க இப்ப வேலைக்காக,ஒழுக்கத்துக்காக இதையும் கேட்கிறாங்க.

அப்ப தனியார் பள்ளியில் படிப்பும்,ஒழுக்கமும் மட்டும் யோக்கியமா இருக்கா?

பெற்றோர்கிட்டதான் இருக்கு..அரசு பள்ளியாவது..தனியார் பள்ளியாவது….

நீ பேசறதையே பேசிட்டு இரு… இதுக்கே செலவழிச்சிட்டா கை,கால் சோர்ந்துபோற நேரத்துல யார் வருவா..சோறு போட………?இலட்சக்கணக்கா செலவழிச்சு படிக்க வைக்கிறே….ஆனா பார்!….காமராசர் படத்தை மாட்டி வச்சிருப்பாங்க……

காலத்திற்குத் தகுந்த கோலம்….விவசாய நிலத்தை வித்துதான் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டி இருக்கு..இதுல ட்யுஷன்வேறு போக வேண்டி இருக்கு. இருக்கிற நிலத்தை விற்றுவிட்டேன்.பத்தாவது படிப்புக்கே என்ன செய்யறதுன்னு தெரியலை….பிள்ளை அரசு பள்ளிக்கே போறேங்கறான்….எல்கேஜிபாப்பாஒண்ணு நானும் அந்த பள்ளிதான் போவேன்னு டீவி விளம்பரத்தைப் பார்த்து அடம்பிடிக்குது….பணமே இல்லை………!

கூலிக்குப்போனா எப்படி?ஏதோ நிலத்துல வந்ததை வச்சு வயிறார சோறு போட்டீங்க..இப்ப அதுக்கும் கஷ்டம்தானே! கேழ்வரகே கிலோ 36 விக்குது..

இரண்டுநாளா நொய் அரிசி கஞ்சிதான். உடைசல் அரிசின்னு சொல்வாங்க…..களியும் சாப்பிட்டுக்கறோம். பால்,பழம் எல்லாம் போச்சு…

எல்கேஜிபாப்பா நானும் வருவேன்னு களைகொத்தியைத் தூக்கிட்டு வந்திடுவா…அந்த பள்ளிக்குத்தான் போறேன்னு தெரிஞ்சா என் பர்ஸ் அவ்வளவுதான்.

அம்மா!…..

முந்தானையைப் பிடித்தபடி களைக்கொத்தியுடன் வந்த மகள் மீனுவை ஒருகணம் பார்த்தபடி இருந்தாள்.

வீட்டில் இருன்னு சொன்னா கேட்கமாட்டியா?

உனக்கு எப்படி ஒரு ஆள் கூலி தருவாங்களாம்………..

சும்மா வர்றேம்மா……பொழுது போகணும் இல்லையா?

அங்கே வந்தா சிலேட்டில் அம்மா சொன்ன பாடத்தை எழுதிப் பார்த்துட்டு இருக்கணும். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளியில்தான் சேர்ப்பேன்.

சரிம்மா!

அப்ப வர்றேன் சங்கீதா!

வத்சலாவிற்கு பள்ளி நெருங்க நெருங்க பயம் வந்தது. ஆண்குழந்தையைப் படிக்க வைக்கிறோம். ஆனால் இந்த பெண் குழந்தையைப் படிக்க பணம் இல்லையே! ஊர் என்ன பேசுமோ!...என நினைத்தபடி காவலாளியிடம் சொல்லிவிட்டு ஆட்களுடன் ஆட்களாக இறங்கினாள்.

புருஷன் இருந்தா அவரு பார்த்துப்பாரு…அது ஒரு பொறுக்கி..எங்கே போச்சோ!!

நம்ம பிழைப்பு இப்படி இருந்தா இது கதி என்ன ஆகுமோ! மனதில் பல எண்ணங்கள் பந்துபோல அழுந்திக்கொண்டிருந்தது.

செடிகளை நன்றாக இழுத்து கட்டிக்கொண்டிருந்ததில் மீனுவைக் கவனிக்கவில்லை.

கார் அவளைத் தாண்டிப் போனதையும் பார்க்கவில்லை.

காரில் இருந்து பள்ளியின் தாளாளர் கார் கண்ணாடியை இறக்கி விட்டபடி மீனுவின் அருகில் வந்தார்.

பாப்பா! நீ யாரும்மா?

ஆமா! நீங்க யாருன்னு சொல்லுங்க…காரில் காமராசர் படம் எல்லாம் மாட்டி இருக்கீங்க?

அவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?

ஆமா! எங்கம்மா காலத்துல இருந்தாராம்…

அப்ப கவர்மெண்ட் பள்ளியெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சாம்.இப்பவும்தான் நல்லா இருக்கு..

ஆனா இந்த பள்ளி வசதியெல்லாம் அங்கே இல்லையே!

நீங்க காமராசருக்கு உறவா தாத்தா! மாலையெல்லாம் போட்டிருக்கீங்க!

இல்லைம்மா! சும்மா அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்…அதான்…

உனக்கு ஏதாவது ஆசை இருக்குதா பாப்பா…

குழந்தை இந்த பள்ளியில் படிக்க விருப்பப்படுகிறது என நினைத்து அவர் கேட்க ஆமாம்! எனத் தலை அசைத்தது.

சரி! உன்னை நான் இலவசமா இந்த பள்ளியில் சேர வைக்கிறேன்.

எனக்கு மட்டும் இந்த பள்ளியில் சீட் கிடைச்சா எப்படி? என்னைமாதிரி ஏழை விவசாயிகள் அத்தனைபேரும் பயனடையணும் இல்லையா? அதுக்கு வழி இருக்கா?

ஒரு கணம் யோசித்தார் தாத்தா.

நான் என் பசங்ககிட்டே பேசிட்டு சொல்றேம்மா

செல்ஃபோனில் காருக்குள் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார். என்னவோ வெளிநாடுமாதிரின்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது. உங்க குடும்பத்திற்கு வேணுங்கறதைச் சேர்த்துட்டேன்.

காரிலிருந்து பேசி முடித்ததும் பாப்பாவின் விரலைப் பிடித்தபடி உன் ஃப்ரெண்ட்செல்லாம் கூட்டிட்டுவா! எல்லாரும் படிக்கட்டும்…….

மறுநாள் தொலைக்காட்சியின் அனைத்து சேனல்களிலும் அடிப்படைக்கல்வி முதல் இஞ்சினீயரிங்கல்லூரிவரை அனைத்தும் இலவசம் என அந்த தாத்தாவின் முகத்துடன் படம் வந்ததை அரசு தொலைக்காட்சியில் பார்த்தபடி இருந்தாள் மீனு.

இந்தா! கஞ்சி குடிச்சுட்டு பள்ளிக்கு போ! நான் அந்த பள்ளி வேலையை முடிச்சுட்டு வர்றேன் என்றபடி தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்தபடி இலவசமா! என வத்சலா வாயைப் பிளந்தாள்.

மீனு மௌனமாக இவருதான் அந்த பள்ளி தாததாவா! அவருகிட்டேயா பேசினோம் என கண்ணைச் சிமிட்டியபடி இருந்தாள்.

தம்பி! எந்திரிடா! இனி ஃபீஸ் கட்டவேண்டாமாண்டா!

இனிமே தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் முதலிடம் அம்மா!

எப்படிடா சொல்றே?

பள்ளியில் சேர்வதற்காகத்தான் அம்மா நிறையபேர் தகுதிக்கு மீறி இலஞ்சம் வாங்குகிறார்கள். இப்ப தேவையே இல்லை என்றால் ஏன் வாங்கப்போகிறார்கள். நாட்டிற்கு உழைக்கவேண்டும் என்ற நினைப்புதானே வரும்!

மதுவையும் எடுத்துட்டா விவசாயத்திலேயும் தமிழ்நாட்டை மிஞ்ச ஆளில்லைடா! இந்த மண்ணுல அத்தனையும் பொன்தாண்டா விளையும்.

முதலில் இது சக்சஸ் ஆகுதான்னு பொறுத்துத்தான் பார்க்கணும்.

ஒரு கல்வி நிறுவனம்தான் வந்திருக்கு…

இதுமாதிரி இன்னமும் தானாகவே முன்வந்து எல்லாரும் வருவாங்களா?!!Rate this content
Log in

Similar tamil story from Abstract