தம்பி
தம்பி
ரோட்டில் சுற்றி திரியும் ஒரு நாய் குட்டி அது.எப்போதும் அந்த பஸ் ஸ்டேண்ட் அருகில் படுத்து கொண்டு இருக்கும்.இரவு ஆனால் அங்கு உறங்கும் மனிதர்களுடன் ஒருவராக அங்கு உறங்கி கொண்டு இருக்கும்.
யாராவது தின்பண்டம் போட்டால் அதை சாப்பிட்டு கொண்டு அங்கேயே சுற்றி கொண்டு இருக்கும்.
சுபி தினமும் அங்கு வந்து தான் பணிக்கு செல்லும் இடத்திற்கு பஸ்சை பிடிக்க வேண்டும்.சுபி அங்கு வந்து பத்து நிமிடம் காத்து இருப்பாள்.அவளுக்கு இந்த நாய்குட்டியை மிகவும் பிடிக்கும். தெரு நாய் போல இருக்காது.சுத்தமாக தான் இருக்கும்.அதை பார்க்கும் போது தம்பி என்று கூப்பிட்டு அது சாப்பிட தின்பண்டம் கொடுப்பாள்.அதை கவ்வி கொண்டு தன் இருப்பிடம் சென்று அதை சாப்பிட தொடங்கும். மழை பெய்தால் மட்டுமே பகலில் அந்து நிழல் குடைக்குள் வரும்.அல்லது இரவு தூங்கும் நேரத்தில் உள்ளே வரும்.சுபி தம்பி என்று அழைத்து வந்ததால் எல்லோருமே அதை தம்பி என்று தான் அழைப்பார்கள்.
அன்று ஒரு நாள் காலையில் லேசாக மழை பெய்ய தொடங்கியது.சுபி மழையில் வந்து சேரும் போது அவளுடைய பஸ் போய் விட்டது.அடுத்த பஸ் இன்னும் அரை மணி நேரம் இருந்தது.அங்கு இவளை தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை.அவள் வந்ததும் தம்பி நிழல் குடைக்குள் தான் இருந்தது,பிஸ்கட் கொடுக்க வாங்கி கொண்டு மூலையில் சென்று படுத்து கொண்டது.அப்போது அங்கு ஒருவன் தலையை மூடி படுத்து கொண்டு இருந்தவன், சுபி தோளில் தொங்கி கொண்டு இருந்த பையை புடுங்கி கொண்டு ஓட தொடங்கினான்.அதில் கொஞ்சம் பணமும்,கைபேசி, வங்கி கடன் அட்டை போன்றவை இருந்தது.அவன் பையை புடுங்க சுபி கூக்குரல் இட உதவிக்கு யாரும் இல்லை. மழை பெய்து கொண்டு இருந்ததால் ஜனங்கள் யாரும் இல்லை. சுபியின் குரல் கேட்டதும் தம்பி அவனை துரத்தியது.அவனும் ஓட முடியாமல் ஓட தம்பி துரத்தி அவன் காலை கவ்வி பிடிக்க,அவன் வலி தாங்காமல் கையில் இருந்த பையை விட்டு விட்டு காலை பிடித்து கொண்டு உட்கார்ந்தான்.சுபி திகைப்புடன் பார்த்து கொண்டு இருக்க,ஒரு நிமிடத்தில் அவனிடம் இருந்து பையை பிடுங்கி,கவ்வி கொண்டு திரும்ப சுபி யை நோக்கி ஓடி வந்தது.சுபிக்கு ஒன்றும் புரியவில்லை,என்ன செய்வது என்று அறியாது நிற்கும் போது அடுத்த பஸ் வர,அதில் இருந்து இறங்கிய பயணிகள் அவள் நிலைமையை புரிந்து கொண்டு உதவிக்கு வந்தனர்.
வாயில் கவ்வி கொண்ட வந்த பையை சுபி காலுக்கு அடியில் போட்டு விட்டு வாலை ஆட்டி கொண்டு நின்றான் தம்பி.அங்கு வந்தவர்கள் நாய்க்கு இவ்வளவு அறிவா,அதும் ஒரு தெரு நாய்,அதன் விசுவாசத்தை கண்டு எல்லோரும் வியந்து நின்றார்கள்.
அன்றே தன் தந்தையின் உதவியுடன் தம்பியை தன் வீட்டிற்க்கு கொண்டு சென்று வளர்க்க தொடங்கினாள்.
தினமும் காலையில் அவளுடன் பஸ் நிலையம் வரை வந்து அவள் பஸ் ஏறிய பிறகு சற்று நேரம் அங்கு இருந்து விட்டு சுபி வீட்டை நோக்கி போகும்.
முற்றும்.
