தீபம்
தீபம்


கார்த்திகை தீபம் அதுவும் ஏம்மா வெளியில் அகல் விளக்கு ஏற்றலை!
வெளியே மழை பெய்யுதும்மா!
குளிர் போகணும்னுதான் விளக்கு ஏத்தறது..வீட்டில் நல்லது நடக்கணும் இல்லையா! போய் அடுப்படியில் வெல்லம் காய்ச்சி பொரி உருண்டை செய்து வை. திருவண்ணாமலை போகணும்.
நீங்களும்தான் வருஷாவருஷம் நாலு கிழமைன்னா எல்லா பண்டிகைகளும் கொண்டாடுறீங்க!
என்ன பிரயோஜனம்? உங்களுக்கு 17 வயசுல கல்யாணம்..பதினெட்டுல அப்பா இறந்துட்டார். அப்பா முகமே எனக்கு ஞாபகம் கிடையாது. இதோ! எனக்கு வயது 28 வயசாச்சு……கல்யாணமே செய்துக்க யாரும் வரலை! நிங்களும் விடாமல் தான தருமம் செய்றிங்க! என்றாள் நந்தினி.
நமக்குமட்டும் வாழ்வது வாழ்க்கையில்லை. நாம் முன்னாடி செஞ்ச பாவ கர்மாக்களுக்குத்தான் இப்ப அனுபவிக்கிறோம். நல்லது செய்யவேண்டும். புரிந்ததா! என்றாள் அம்மா.