STORYMIRROR

Saravanan P

Abstract Classics Inspirational

4  

Saravanan P

Abstract Classics Inspirational

ஷகிலா இந்த பெயரின் அர்த்தம் அழகு

ஷகிலா இந்த பெயரின் அர்த்தம் அழகு

2 mins
223

இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.


கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுக்காக தயார் ஆகி கொண்டிருந்தது.

ஷகிலா தன் வீட்டில் இறைவனை எண்ணி பிராத்தனை செய்து கொண்டிருந்தாள்.

அவளது தந்தை ஒரு குடிகாரன் வீட்டில் நடக்கும் சந்தோசம்,துக்கம் ஒன்றுமே தெரியாது.

தன் சம்பளத்தில் அவளது தந்தை வீட்டுக்கு ஒன்றுமே செய்ததில்லை.

ஷகிலா அந்த தெருவில் உள்ள மகளிர் சுய உதவி குழு,தையல் கடை என இரு இடங்களில் வேலை பார்த்தாள்.

அவளது தாய் கிட்னி கோளாறு காரணமாக ஆஸ்பித்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்க தனது தாய்க்கு உணவு சமைத்து எடுத்து சென்று உட்டி விட்டு தனது தாயின் அழுக்கு துணிகளை எடுத்து வந்து வீட்டில் துவைப்பாள்.

அவளது தம்பிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களை தீர்த்து பின்பு வீட்டில் உள்ள தனக்கு,தந்தை,தம்பி என் மூவருக்கும் உணவு சமைப்பாள்.

இதை தினமும் பார்த்த அவள் தம்பி 

அக்கா நீ போய் படி,நான் பாத்திரம் சுத்தம் பண்றேன்.

துணிகளை துவைச்சு வைக்குறேன்.

நீ தினமும் எவ்வளவு வேலை செய்கிறாய்.

நான் இனிமேல் தினமும் உனக்கு உதவி செய்கிறேன் சரியா என்றான்.

ஷகிலா அவனை கட்டி பிடித்து தம்பி என் முத்தமிட்டாள்.

ஷகிலா தன் தந்தையை பல முறை குடியை விட சொல்லி கெஞ்சினாள்.

அவளது தந்தை நீ என்ன எனக்கு புத்தி சொல்ற என அடிகள் மட்டுமே வாங்கினாள்.

அவளது வகுப்பில் கல்லூரியில் படிக்கும் வருண் தனக்கு அனைத்து சௌகரியங்கள் இருந்தும் ஏதுவது குறைகள் இருக்கும் என சொல்வதை அவனது பெற்றோர் புரோவசரிடம் சொல்ல புரோவசர் ஷகிலாவை அழைத்து வருணுக்கு இந்த குறைகளை காணாமல் இருக்கும் படி சொல்ல சொல்லி கேட்டாள்.

ஷகிலா வருணை கூட்டிட்டு காலாற நடந்து கொண்டே பேசலாம் என்றாள்.

வருண் ஓ சார் உன்னை எனக்கு குறையெல்லாம் கண்டுபிடிக்க கூடாது என சொல்ல சொல்லி அனுப்பினாரா.

ஓகே வருண் நான் சொல்றதை கேளு நான் இருக்குறது ஒரு சின்ன ஓட்டு வீடு எங்க அப்பா குடியில் மூழ்கிட்டார்.

அம்மா உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்க

தம்பி பள்ளியில் பத்தாம் கிளாஸ்.

நான் தான் வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்துறேன்.

உனக்கு என் கஷ்டத்தை சொல்லவில்லை.

"கஷ்டம் ,இது சரியில்லை அது சரியில்லை என சொல்லிக் கிட்டே இருந்தால் எதுவும் மாறாது.

நாம் அந்த கஷ்டத்திலும் முன்னேற என்ன பண்றோம் என்பது தான் விஷயம் என்றாள்."

வருண் அதை கேட்டு தன் மனதை மாற்றினான்.

நன்றி ஷகிலா நான் இந்த முக்கியமான பாடத்தை கத்துக்கிட்டேன் என சொன்னான்.

அவள் வீட்டுக்கு வர அவளது தம்பி அழுது கொண்டிருந்தான்.

அக்கா அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டார் பக்கத்து வீட்டுக்காரங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என சொன்னான்.

தன் அடுத்த நாள் பரிட்சை புத்தகங்களையும்,ஆஸ்பத்திரி செலவுக்கான பணம் எடுத்து கொண்டு தம்பியை பத்திரமாக இருக்க சொல்லி விட்டு அவன் செலவுக்கு பணம் கொடுத்தாள் ஷகிலா.

பின் தன் தந்தை இருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பணம் கட்டி அவருக்கு சிகிச்சை முடியும் வரை அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து படித்தாள்.

அவள் தந்தை கண் முழித்து அம்மாடி ஷகிலா,இந்த அப்பன் எவ்வளவு கஷ்டம் கொடுத்தேன் உனக்கு.

மன்னிச்சிடுமா என கண்ணீர் விட்டார் அவளின் தந்தை.

தந்தையை கண்ணீரை துடைத்து விட்டு செவிலியரை தந்தையை பார்த்துக்க சொல்லி வீட்டுக்கு வந்த தன் தாய்க்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு அங்கு சென்றாள்.

பின் தன் தாய்க்கு பணிவிடை செய்து விட்டு வீட்டுக்கு வந்து படித்து விட்டு அடுத்த நாள் கல்லூரிக்கு சிரித்த முகத்துடன் சென்றாள்.

படிப்பை முடித்து ஆசிரியர் என்னும் பொறுப்பை ஏற்றாள் ஷகிலா.

ஷகிலா என்ற பெயருக்கு அழகு என்று அர்த்தம்.

உண்மையில் இந்த பெண் ஷகிலா பெயரினால் மட்டும் அல்ல உள்ளத்தாலும் அழகு தான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract