ரகசிய மருத்துவமனை: புது சேர்க்கை
ரகசிய மருத்துவமனை: புது சேர்க்கை
அன்று அந்த மருந்தகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நிறைய பேர் அங்கு வரிசையில் மருந்து பில்லின் விலையில் தள்ளுபடி எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர்.
அப்பொழுது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அந்த மருந்தகத்துக்கு முகத்தை பாதிக்கும் மேல் மறைத்து கொண்டு தங்கள் அடையாளம் தெரியாதபடி வந்தனர்.
பின்னர் பில் போடும் இடத்தில் இருந்த நபரிடம் தன் அண்ணனின் உடல்நிலை ரொம்ப மோசமாக உள்ளதாகவும் இங்கு மிக குறைந்த விலையில் வைத்தியம் செய்யப்படும் என கேள்விப்பட்டதாகவும் அந்த பெண் கூறினாள்.
அந்த நபர் கறாராக முதல் நாளே வந்து பெயர் குடுத்தீர்களா? என கேட்க அந்த பெண்,இல்லை சார் என கண்ணீர் வந்தபடி கூறினாள்.
சரி பரவால அடுத்த தடவை நீங்க இங்க எந்த பிரச்சனைனாலும் கண்டிப்பா வாங்க என அந்த ஆணுக்கு அட்மிஷன் போட்டு விட்டு இருவரையும் ஒரு துணி போட்டு மூடி இருந்த அறைக்கு அழைத்து சென்று விட்டு விட்டு அந்த நபர் அங்கு உள்ளே இருந்த டாக்டரிடம் கை அசைத்து விட்டு சென்றான்.
அந்த டாக்டர் இவர்களை உள்ளே அமர வைத்து பொறுமையாக பேசி அந்த ஆணின் உடல்நிலையை பரிசோதித்து விட்டு சில மருந்துகளை தந்தார்.
ஊசி போட அந்த டாக்டர் தயாராக அந்த ஆண் மற்றும் பெண் சிறிதும் பதற்றம் இன்றி நிதானமாக இருப்பதை கண்டு அந்த டாக்டர் ஊசியை அந்த ஆணின் வலது கையில் செலுத்தி விட்டு அடுத்த வாரம் வலி குறைஞ்ச உடனே வாங்க என அந்த ஊசி மற்றும் அந்த ஊசி மருந்து பாட்டிலை பத்திரமாக ஒரு துணியில் சுற்றி ஒரு இடத்தில் இருந்த டப்பாவில் பத்திரமாக வைத்தான்.
பின்னர் அந்த ஆண் மற்றும் பெண் இருவரும் அறையை விட்டு வெளியே சென்ற பின் அந்த டப்பாவில் கையை விட்டு ஒரு ஊசியை எடுத்து துடைத்து மேசையில் வைத்து விட்டு அந்த டாக்டர் பெல் அடித்தான்.
இந்த ஆண் மற்றும் பெண் வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்து சென்ற பின் அந்த ஆண் ஊசி போட்ட இடத்தில் கை வைத்து ஒரு வகையான சதை போன்ற பொருளை பிய்த்து எடுத்தான்.
நல்ல வேளை அந்த ஊசி என் கைக்குள் போகல என அந்த ஆண் சொல்லி விட்டு மூச்சு விட அந்த பெண் இன்னும் ஒரு வாரம் இந்த கேஸ்க்கு தேவையான எல்லா ஆதாரமும் கிடைச்சிரும் என கூற பின்னால் ஒரு கண்கள் இதை கவனமாக பார்த்து கொண்டு இருந்தன.
அடுத்த வாரம்,
அந்த பெண் மற்றும் ஆண் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு செல்ல பில் போடும் நபர் இந்த முறை அவர்களை பார்க்காதது போல் இருந்து விட்டு சிறிது நேரம் கழித்து அவர்களை மீண்டும் அந்த டாக்டர் அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து விட்டு வர அந்த டாக்டர் ஒரு ஊசி மற்றும் மருந்தை டேபிளில் வைத்து விட்டு கொஞ்சம் திரும்பி உக்காந்து பேன்ட்டை இறக்குங்க சார் உங்களுக்கு ஊசி அங்க போடனும் என சொல்லி முடிக்க அந்த ஆண் இல்லை டாக்டர் எனக்கு வலி ஒன்னும் இல்லை சின்னதா சளி மட்டும் இருக்கு என சொல்ல அந்த டாக்டர் டேபிளில் இருந்த பெல்லை அழுத்த அந்த அறையின் உள்பக்கம் இருந்து ஒரு போலீஸ் ஜிகிர்தண்டா குடித்து கொண்டே வந்து விட்டு அந்த ஆண் மற்றும் பெண்ணை பார்த்து "டேய் என்ன,எங்க வந்து என்ன வேலை பண்றீங்க,பெரிய ஜேமஸ் பாண்ட் டா நீங்க எல்லாம் என அந்த பெண்னை அறைய வர அந்த ஆண் போலீஸின் கையை தடுத்து நிறுத்த,ஓ நீ பெரிய இவனா என அந்த போலீஸ்காரர் காலால் அந்த பெண்னை எட்டி உதைக்க வர அந்த பெண் அந்த போலீஸ்காரரின் காலை ஒரு கையால் தடுத்து நிறுத்தி தனது இன்னொரு கையால் லாவகமாக தாக்கினாள்.
வலியில் கத்திக்கொண்ட கீழே விழுந்த போலீஸ்காரரிடம் "நீங்க இன்னைக்கு இங்க வைத்தியம் பாருங்க" என சொல்லி விட்டு இருவரும் ஒளித்து வைத்திருந்த பேனா கேமராவை கையில் எடுத்து கொண்டு அந்த மக்களிடம் வந்து பேசினர்.
"நீங்க எல்லாரும் இந்த ஆளை டாக்டர் அப்படினு நம்பிட்டு இருக்கீங்க, இந்த ஆள் ஒரு கம்பவுண்டர்,ஒரு டாக்டர் கிட்ட வேலை பார்த்து இதை எல்லாம் பண்றான்,முதல்ல எது எதுக்கெல்லாம் எவ்வளவு தெளிவா விசாரிச்சு வேலை செய்றீங்க? உங்க உடல்நல விஷயத்துல எதுக்கு இவ்வளவு அலட்சியம் பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்,எல்லாரும் அங்க போறங்க,காசு கம்மியா இருக்கு இப்படி எல்லாம் ஏமாறாமா இருங்க.
இவங்களை கைது பண்றதுக்கு இரண்டு மூணு பேரோட சாட்சி வேணும்,யார் வரீங்க,நான் டிடேக்டிவ் பாரி மற்றும் இவங்க இவாஞ்சலின்" என சொல்லி விட்டு தங்களது கார்ட்டை இருவரும் எடுத்து காட்ட யாரும் முன் வராமல் இருக்க இரண்டு துப்பறிவாளர்களும் அந்த இடத்திலிருந்து வெளியே கிளம்பினர்.
