Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

3 mins
234


புதிய தொடக்கம்

கோயமுத்தூர் நகரம்  புத்தாண்டை கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்தது.நகரத்தில் இருந்த அத்தனை ஹோட்டல்கள் விருந்தினரை வரவேற்க அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்து முடிக்க பட்டு இருந்தது.மேஜைகள் அனைத்தும் முன் பதிவில் புக் ஆகி இருந்தது.நாட்டியம் ஆட ஒரு தலைக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணம்.அதுவும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும்.

இரவு முழுவதும் தேவை படுவோர் முன்கூட்டியே முன் பதிவு செய்து இருந்தார்கள்.இருந்தாலும் கூட்டத்திற்கு குறைவு இல்லை.

சிவராம் பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போவது இல்லை.

ஏதுவாக இருந்தாலும் வீட்டிலே முடித்து கொள்வார்.கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர்.

அவருடைய நண்பர் பாலு அவரை புத்தாண்டு கொண்டாட அழைத்து இருந்தார்.இவரும் தயக்கத்துடன் சம்மதம் சொல்லி இருந்தார்.

மாலை நெருங்க,பாலு சிவராம் வீட்டிற்கு வந்து தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.புறப்படும் போது பாலு,சிவராமின் மனைவியிடம்,திரும்பி வர நள்ளிரவு,அல்லது அதிகாலை ஆகலாம்,பதட்டபட வேண்டாம் என்று சொல்லி விட்டு போனார்.

பாலு சிவ ராமை அழைத்து கொண்டு ஒரு பிரபல ஹோட்டலுக்கு சென்றார்.தான் கொண்டு வந்து இருந்த நுழைவு சீட்டை காண்பித்து விட்டு,ஒரு பெரிய ஹாலுக்குள் நுழைந்தார்.தனக்காக ஒதுக்க பட்ட மேஜையை தேடி கண்டு பிடித்து,இருவரும் சென்று தத்தம் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

மது பானம்,அசைவ உணவு எவ்வளவு கேட்டாலும் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.கூட்டம் மெல்ல மெல்ல அதிகம் ஆனது. ஆண் பெண் பேதமின்றி ஃபேஷன் என்ற பெயரில் தாறுமாறாக உடை அணிந்து கொண்டு,ஆண்களும் பெண்களும் நடனம் ஆட துவங்கினார்கள்.ஒரு நடனமும் ஒரு பாட்டும் என்ற கணக்கில் ஜோடிகள் வந்த மாறி மாறி ஆடி கொண்டும் பாடி கொண்டும் இருந்தார்கள்.நேரம் செல்ல செல்ல ஆட்டமும் பாட்டும் உச்சஸ்தாதிக்கு சென்றது.அது போல இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி கட்டி பிடித்து ஆடி கொண்டு இருந்தார்கள்.

நினைத்தவன் நினைத்த பெண்ணை இழுத்து கட்டி பிடித்து நடனம் ஆடி கொண்டு இருந்தார்கள்.மது போதை

உச்சத்தில் இருந்தது.

பாலு சிவராமின் அனுமதியோடு குடிக்க ஆரம்பித்து இருந்தார்.அவர் சிவரா மை கொண்டு வந்த காரணமே திரும்பி போகும் போது கார் ஒட்ட அவருக்கு உதவி தேவை இருந்தது.

மணி பன்னிரெண்டு நெருங்கும் போது சத்தம் ஆட்டம் பாட்டம் எல்லாமே உச்ச கட்டத்தில் இருந்தது.

பணம் தண்ணீராக செலவாகி கொண்டு இருந்தது.பாலு அவருடைய பேத்தி வயதில் உள்ள ஒரு பெண்ணுடன் நடனம் ஆடி கொண்டு இருந்தார்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அங்கு நடந்த கூத்தை பார்த்த, சிவராமுக்கு என்ன செய்வதென்றுபுரியவில்லை.எழுந்து வெளியில் போக முடியாத அளவிற்கு கூட்டம்.அங்கு இவர் மட்டும் தான் சுய நினைவோடு அமர்ந்து இருந்தார்.பல பேர் போதையில் மயங்கி ஒருவர் மீது ஒருவர் கிடந்தனர்.அங்கு இருந்த ஆண் பெண் திருமணம் ஆனவரா,கணவன் மனைவி,இல்லை ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லது இது எதுவுமே இல்லையா,நம் கலாச்சாரம் இவ்வளுவு மோசம் ஆகி விட்டதா அவருக்கு ஒன்றும் புரியவில்லை.


கொரோனா காரணம் கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத கொண்டாட்டம் இந்த வருடம் முதல் ஆரம்பித்து விட்டது.ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் என்று வயது வித்தியாசம் இல்லாமல் குடித்து கும்மாளம் இடுவதும், ஆண் பெண் கட்டி பிடிப்பதும் தான் நாகரீகம் என்று நினைக்கும் இந்த சமூகம்,அழிவை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது.

இந்த ஆண்டு வெறுமனே வேடிக்கை பார்த்த சிவராம் அடுத்த ஆண்டும் இதே  நிலையை  தொடருவாரா,

இல்லை அவரும் இதை கொண்டாட ஆரம்பித்து விடுவாரா படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

பெரும்பாலான ஆணும் பெண்ணும் திருமணம் வேண்டாம் என்று சொல்வதில் உள்ள காரணம் இதுவாக இருக்கலாம்.சுதந்திரமாக வந்து குடித்து கும்மாளம் இட முடியாது.

ஆனால் சிவராம் ஒரு புத்தாண்டு முடிவை எடுத்து கொண்டார்.இனி மேல் எந்த கொண்டாட்டமும் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி தான் இருக்க வேண்டும்.இது மாதிரி வீட்டுக்கு தெரியாமல் வந்த கும்மாளம்போடுவது,மற்றவர்

களுக்கு நாம் முன் உதாரணம் ஆகி விடுவோம்.எக்காரணம் கொண்டும் இதை நான் செய்ய மாட்டேன் என்று சிவராம் அந்த கூட்டத்தில் நடுவே சத்தம் போட்டு சொல்லி கொண்டு இருந்தார்.ஆனால் அந்த இரைச்சலுக்கு நடுவே அவர் குரல் எங்கும் ஒலிக்கவில்லை.அது ஒலிக்கவும் போவதில்லை.காரணம் நம் அழிவை நாமே தேடி கொண்டோம்,அது ஆரம்பம் ஆகி விட்டது,யார் தடுத்தாலும்,எத்தனை சிவராமன் வந்தாலும் அது நிற்க போவது இல்லை.



Rate this content
Log in

Similar tamil story from Abstract