பருவ மழை
பருவ மழை
பருவத்தில் மழை பெய்தால் தான் விவசாயம் சிறக்கும்.
எதையும் அந்தந்த பருவத்தில் செய்து முடிக்க வேண்டும் அது தான் வாழ்க்கையின் குறிக்கோள்.
கல்வி, வேலை,திருமணம்,,குழந்தை பேறு,குடும்பம் என்று அந்தந்த வயதில் நடந்து முடிந்து இருக்க வேண்டும்.
கோகிலா இப்போது முப்பது வயதை தாண்டி கொண்டு இருந்தாள்.படித்து வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதித்து கொண்டு தான் இருக்கிறாள்.
ஆனால் தான் நினைத்த அந்த மாவட்ட ஆட்சியர் பொறுப்பை அடையும் வரை திருமணம் கூடாது என்று கூறி அதை பிசகாமல் கடை பிடித்து வந்து விட்டார்.
அப்பா சாகும் தருவாயில் கூட,நான் இறந்து விடுவேன்,உன்னை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டு பார்த்து விட்டார்.
கோகிலா சம்மதிக்கவில்லை.இன்று
அவர் உயிருடன் இல்லை.
gb(0, 0, 0);">அதை தொடர்ந்து அம்மா நச்சரித்து வருகிறார்,கோகிலா திருமணம் செய்து கொள்ள தயார் தான்,ஆனால் அவள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை அமையவில்லை.அம்மாவும் தன் ஆசை நிறைவேறாமல் இறந்து போய் விட்டார்.
இப்போது கூட பிறந்த தம்பி,திருமணம் ஆகி குடும்பத்துடன் இருப்பவன் அக்காவிற்கு வரன் தேடி கொண்டு இருக்கிறான்.
கோகிலா இப்போது நாற்பத்தி எட்டு வயதை நெருங்கி கொண்டு இருக்கிறாள்.மாதவிடாய் பிரச்சினை காரணம்,கர்ப்பையை அகற்றி விட்டார்கள்.இனி திருமணம் நடந்தாலும் குழந்தை பிறக்காது.இது தெரிந்தால் யார் வருவார் திருமணம் செய்து கொள்ள.
இப்போது அடியோடு தனக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாள்.
பணி ஓய்வுக்கு பிறகு அவளுக்கு யார் துணை.அது ஒரு கேள்வி குறி தான்.
அந்த பருவத்தில் நடந்து இருந்தால்,
இன்றைக்கு அப்படி இருக்கும்,இப்படி இருக்கும் என்று அவளால் கனவு தான் காண முடிந்தது.எதையும் அனுபவிக்க முடியவில்லை.