பணம்
பணம்
ராஜாவும் அகிலனும் நண்பர்கள்.
இருவரும் ஒரே வியாபாரத்தை வேறு வேறு ஊர்களில் ஆரம்பித்து நடத்தி முன்னுக்கு வந்தவர்கள்.
ராஜா இன்னும் இரு சக்கர வாகனம்,மற்றும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.கையில் ரொக்கமாக பணம் வைத்து உள்ளார்.வங்கி கணக்கில் சேமித்து வட்டி வாங்கி செலவு செய்து வருகிறார்.
அகிலன் கடனுக்கு ஒரு வீடு,ஒரு கார் என்று வாங்கி மாத தவணை செலுத்தி வருகிறார்.வியாபாரத்தில் வரும் லாபம் தவணை தொகை அடைக்க சரியாக இருந்தது.
நடுவில் கொரோனா வர வியாபாரம் மூன்று மாதங்கள் நடக்காமல் மூட வேண்டிய சூழ்நிலை வந்தது.ராஜா வங்கியில் இருந்து கிடைத்த வட்டி தொகையை வைத்து ஆட்களுக்கு சம்பளம்,தன்னுடைய குடும்ப செலவை சமாளித்து விட்டார்.ஆனால் அகிலன் தவனைகள் கட்ட முடியாமல் போக கடன் கொடுத்தவர்கள் வீட்டையும் காரையும் பிடுங்கி கொள்ள,இருக்க இடம் இல்லை.உதவி கேட்டு ராஜாவிடம் வந்தார்.அவரும் கொஞ்சம் கொடுத்து உதவினார்.
அளவிற்கு மீறி ஆட்டம் போட இருந்ததும் போய் விட்டது
