பணம் படுத்தும் பாடு
பணம் படுத்தும் பாடு
பணம் படுத்தும் பாடு
உலகில் எங்கோ வசிக்கும் ஒருவன் யார் இதை படிக்க போகிறார்கள் என்று எழுதினான்"பணம் தான் பூமியை சுற்றி வர வைக்கிறது" அதாவது the money makes the world go round .இது பாதி உண்மை தான்.பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது என்று தீவிர நம்பிக்கை உள்ளவள் அனு.காரணம் அவள் பிறந்து வளர்ந்து கொண்டு இருப்பது ஒரு கோடீஸ்வரன் வீட்டில்.கண் அசைவுக்கு காபி வரும்.கையை தூக்கினால் கார் வந்து நிற்கும்.
இப்படி எது வேண்டுமானாலும் அவள் நினைத்த படி
கிடைத்தது.காரணம் அவளிடம் உள்ள செல்வம்.அப்பா அம்மாவுக்கு ஒரே மகள்.படிப்பிலும் கெட்டிக்காரி,மிகவும் புத்திசாலி,அவளுக்கு கிடைத்த pocket money செலவு போக மீதம் இருந்த பணத்தில் சிறிதாக ஒரு பொக்கே ஷாப் ஆரம்பித்து இப்போது சுமார் ஐம்பது கிளைகளுடன் மாதம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து கொடுக்கிறது.வந்த லாபத்தில் வியாபாரத்தை விரிவு படுத்தி வருவாயை அதிக படித்தி கொண்டாள்.அவள் சம்பாதித்த பணத்தில் தனக்கு சொந்தமாக ஒரு சிறிய காரையும் வாங்கி விட்டாள்.தோழிகள் யார் வந்து உதவி கேட்டால் மறுக்காமல் செய்து விடுவாள்.காரணம் இந்த லாபத்தில் யார்க்கும் பங்கு கொடுக்க வேண்டியது இல்லை.ஆனாலும் அவளுக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டது போல ஒரு எண்ணம் அல்லது ஏதோ ஒன்றை அவளால் அனுபவிக்க முடியாமல் இருக்கிறது.
.
ஒரு நாள் தன் கல்லூரி தோழியுடன் அவள் வீட்டிற்க்கு சென்று இருந்தாள்.அவள் இவளை விட படிப்பில் கெட்டிக்காரி,சந்தேகம் ஏதுவாக இருந்தாலும் அவளிடம் கேட்டு தெரிந்து கொள்வாள்.அவ்வளவிற்கு வசதி கிடையாது.இரண்டு பெட்ரூம் பிளாட்டில் வசித்து வந்தாள்.மேலும்
அனுவிற்கு வேறு யாருடனும் நெருங்கின பழக்கம் கிடையாது.பாடத்தில் சில சந்தேகம்,புஸ்தகம் யாரும் கையில் கொண்டு வரவில்லை.அதை கற்று கொள்ள வேண்டி தோழியின் வீட்டிற்க்கு அவளுடன் போய் இருந்தாள்.அவள் பெயர் ரோகிணி.
தன்னுடைய காரில் அவளையும் அழைத்து கொண்டு அவள் வீட்டிற்க்கு சென்றாள்.போனதுமே தன் தாய்க்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டு,தன்னுடைய அறைக்கு சென்று அனுவை உட்கார வைத்து விட்டு ,வேகமாக சென்று குளித்து உடை மாற்றி வந்தாள்.
அவள் வந்ததும்,அவளுடைய அம்மா இரண்டு பிளேட் நிறைய சூடான வடையுடன் வந்து குடிக்க என்ன வேண்டும் காபி அல்லது டீ யா என்று கேட்டு சென்றார்.
அனுவிற்க்கு டீ காபி குடிக்கும் பழக்கம் இல்லை,இருந்தாலும் மறுக்காமல் கொண்டு வந்த டீ யை
வாங்கி குடித்தாள்.அவளுக்கு அந்த வடையும்,டீயும் அவ்வளவு ருசியாக இருந்தது.மேலும் ரோகிணி அம்மாவின் உபசரிப்பு அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.மேலும் இனம் புரியாத
ஒரு சந்தோசம் மனதில் தோன்றியது.
அதற்கு பிறகு மூன்று நான்கு தடவை அந்த வீட்டிற்க்கு சென்று இருப்பாள் அனு.அவளுக்கு அங்கு செல்வது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.அது என்ன என்று அவளுக்கு புரியவில்லை.அப்படி சென்ற போது ஒரு தடவை செய்து கொடுத்த ரவாலட்டு அவளை மிகவும் கவர்ந்தது,ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போது அதை கேட்டு வாங்கி ருசி பார்த்தாள்.அது போல அவள் அங்கு இருந்து கிளம்பும் போது அவளை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பினார் ரோகிணி அம்மா.
தன்னுடைய வீட்டில் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தாள்.அது அந்த ரோகிணி வீட்டில் இருப்பதாக உணர்ந்தாள்.
அன்று மாலை அவள் வீட்டிற்கு வந்ததும்,அவள் எதையோ எதிர் பார்த்தாள்.அது நடக்கவில்லை.தலை வலித்தது,சூடாக ஏதாவது குடிக்க யாராவது கொண்டு வந்து கொடுப்பார்களா என்று எதிர் பார்த்தாள்.யாராவது இருக்கீங்களா என்று சத்தம் போட்டாள்.பணியாள் அவசரமாக வந்து சொல்லுங்க அம்மா என்று கேட்க,அவள் தேவையை வாய் திறந்து கேட்க தயங்கினாள்.
அடுத்த நாள் கல்லூரியில் நடக்கும் போட்டிக்காக வெளியூர் சென்று விட்டு மாலை திரும்புவதாக திட்டம்,அதை தாயாரிடம் கூறுவதற்கு
அம்மா அம்மா என்று கூப்பிட,அம்மாவும் போன் பேசி கொண்டே வந்து கையால் என்ன என்று சைகையில் கேட்க,அவள் விவரத்தை சொல்ல அம்மாவும் போன் பேசுவதை நிறுத்தாமல் சரி என்று தலையை ஆட்டி அனுமதி அளித்தாள்.அனுவிற்கு அது என்னவோ போல் தோன்றியது.
அன்று இரவு படுக்கையில் படுத்து கொண்டு யோசித்து பார்த்தாள்.
தனக்கும் ரோகினிக்கும் என்ன வேறுபாடு.அவள் தன்னை விட மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தாள்.
தினமும் அவளுடைய அப்பா தான் கல்லூரியில் கொண்டு வந்து விடுவார்.
ரோகிணி வீட்டிற்க்கு சென்றதும் அவள் கேட்காமல் அவளுடைய அம்மா தின்பண்டமும் சூடாக டீயும் கொடுக்கிறார்.தன்னை அணைத்து உச்சி மோர்ந்து வழி அனுப்பியதை நினைத்து பார்த்தாள்.
தன்னுடைய வீட்டில் தன்னை வழி அனுப்ப அம்மாவிற்கு நேரம் இல்லை,போன் பேசவே அவளுக்கு நேரம் இல்லை.அப்பாவை பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது.அவளுக்கு என்ன தேவை என்று ஒரு நாள் கூட கேட்டது கிடையாது.வீட்டிற்கு வந்தால் என்ன தேவையோ அதை கேட்டு பெறும் நிலை.யாரும் குறிப்பு உணர்ந்து செயல் படவில்லை.
அனு வீட்டில் பணம் நிறைய இருந்தது.ஆனால் யாரிடமும் அன்பு இல்லை.
ரோகிணி வீட்டில் வசதி குறைவாக இருந்தாலும்,அன்பு நிறைய இருக்கு,
ரோகிணி க்கு என்ன தேவை என்று அவளுடைய அம்மா அவராகவே புரிந்து கொண்டு வந்து கொடுக்கிறார்.வெளியில் செல்லும் போது செய்யும் வேலையை விட்டு விட்டு வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.
தன்னுடைய வீட்டில் இது எதுவும் இல்லை.எதும் நடப்பது இல்லை.
பணம் இருந்தால் எல்லாமே நடக்கும் என்று நினைக்கிறார்கள்.உண்மை எல்லாமே நடக்கும்,ஆனால் அதில் பாசம் இல்லை, அன்பு இல்லை,அக்கறை இல்லை. பணத்தால் எதையும் வாங்கி விடலாம்,பாசம் அன்பை தவிர.
அனு புரிந்து கொண்டாள் அவளை தேடி திருமணம் செய்ய வரும் ஆணும் அவள் பணத்தை தான் ஆசை படுவான் அவளை அல்ல.
முற்றும்
