saravanan Periannan

Abstract Drama Tragedy

5.0  

saravanan Periannan

Abstract Drama Tragedy

பணம் இருக்கும் மனிதரிடம்

பணம் இருக்கும் மனிதரிடம்

1 min
494


ஒரு‌ கற்பனை கதை 

1990'களில்

5 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தனர்.

அங்கு வரும் ஆறாவது ஆள்,விமல் தனது பாக்கெட்டில் இருந்து நோட்டுகளை எடுத்து அந்த மேசையில் கொட்ட மற்ற அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

விமல் பல பெரிய‌ கடைகளை நிர்வகித்து வந்தான்.லாபம் எக்கச்சக்கமாக வந்தது.இந்த பார்ட்டி அவனது திருமணத்திற்காக கொடுத்தான்.

"பணம் வெறும் பேப்பர்,மனிதர்கள் தான் எல்லாம் என சொல்லுவார்கள்.

உண்மை என்னவென்றால் நம்மிடம் உள்ள பணம் தான் மனிதர்களை நம்முடன் பேச வைக்கும்.

உண்மை அன்பு நம் மனதுடன் சம்பந்தபட்டிருக்கும்,அந்த அன்பு வெகு சிலரிடமே இருந்து கிடைக்கும்."

விமல் தன் மனைவி கர்ப்பமான விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க மிகப்பெரிய விருந்து வைத்தான்,மீண்டும் நண்பர்களுடன் குடி.

"சேமிப்பு இல்லையென்றால் எவ்வளவு பணம் சம்பாதித்தும் வீண்‌ தான்."

இந்த குடியினால் விமல் தனது முதல் தவறை செய்தான் வியாபாரத்தில்,சிறு நஷ்டம் ஆனால் அவன் பாடம் கற்கவில்லை.

சேமிப்பு செய்ய ஆரம்பிக்கவும் இல்லை,அவன் மனைவி சொல்லை மதிக்கவும் இல்லை.

விமல் கடைகளில் பெரிய‌ நஷ்டமானது தனது கையில் உள்ள‌ மொத்த பணத்தையும் செலவழித்தான்.

ஆனால் போட்ட காசை லாபமாக எடுக்கும் முன் புதியதாக அவனுக்கு போட்டியாக மிகப்பெரிய காம்ப்ளெக்ஸ் கட்டப்படுகிறது.

நஷ்டம் பெரிதாக சொத்தை விற்கிறான் விமல்.

சொந்தங்கள் விலக ஆரம்பிக்கிறது எங்கே கடன் கேட்டு வந்து விடுவானோ என்று?

நண்பர்கள் மற்றும் சில நல்ல சொந்தங்கள் தங்களால் இயன்ற சிறு உதவி செய்தனர்.

இறுதியாக வாங்கிய கடனுக்காக அவன் கடைகள் ஜப்தி செய்யப்படுகின்றன.

மனைவி வீட்டில் சென்று தங்கும் நிலை சொத்தும் போய்விட்டது.

மனைவியிடம் பேசவும் விமல் தயங்கினான்.

பிறகு மனைவியின் ஊரில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தான்.

அங்கு அவன் வேலைக்கு செல்லும் பாதையில் ஒரு குப்பை தொட்டியை பார்க்கிறான்.

அதில் தூக்கி வீசப்படும் குப்பை இடத்தில் தன்னை வைத்து பார்க்கிறான் நானும் இப்படி தான் வீசப்பட்டேன் என்று.

"முடிந்த செயல்களில் இருந்து பாடம் தான் கற்றுக்கொள்ள முடியும், பாடம் அடுத்தவருக்கு எடுக்கத் தான் முடியும்.

இந்த பாடங்களுடன் அடுத்தது வாழ்க்கையை அனுக வேண்டும்,

ஏனென்றால் நிற்காமல் செல்வது காலமும்,வாழ்க்கையும்."



Rate this content
Log in

Similar tamil story from Abstract