பள்ளி நண்பர்கள்
பள்ளி நண்பர்கள்
ராஜ் அன்று பள்ளிக்கு உற்சாகத்துடன் கிளம்பி கொண்டிருந்தான்.
அவன் மொத்த குடும்பமே அந்த ஆண்டு விழாவுக்கு செல்ல கிளம்பியது.
ஹேமாவின் தாத்தா பாட்டி மட்டும் பள்ளிக்கு அவளை அழைத்து வந்தனர்.
அவளுடைய அப்பா,அம்மா பிஸ்னஸ் மீட்டிங்க் காரணமாக அன்று வர இயலவில்லை.
ஹேமா மற்றும் ராஜ் இருவரும் அன்று மேடையின் பின்புறம் பயிற்சி மேற்கொள்ள சென்ற பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு நடந்து சென்றனர்.
அன்று பள்ளியில் மற்ற குழந்தைகள் ஓடி ஆடி விளையாடி பெற்றோர்களுக்கு ஓடும் பயிற்சி அளித்தனர்.
ஹேமா, ராஜ் சண்டைக்கு காரணம் இருவரும் மூன்றாம் வகுப்பில் படித்து வந்த போது அவர்களுக்கு படிப்பு, விளையாட்டு,போட்டிகளில் கடுமையாக போட்டியிடுவர்.
அந்த மாதிரி மாறுவேட போட்டியில் இருவரும் போட்டியிட்டு சண்டை போட்டு கொண்டனர்.
டீச்சர் இருவரையும் கூப்பிட்டு சமாதானப்படுத்தினாலும் அவர்கள் கேட்கவில்லை,குழந்தைகள் குணாதிசயமே "என்ன தான் சண்டையிட்டாலும்,மனதில் எந்த கெட்ட உணர்ச்சியும் சேராது,இருக்கவும் இருக்காது."
ராஜ் பதட்டத்தில் தயாராகி கொண்டு இருக்கும் போது அவன் தொண்டை கட்டி இருப்பது ஹேமா விற்கு தெரிகிறது அவள் உடனே சுடு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் அருகில் வைத்து விட்டு வருகிறாள்.
ராஜ் சிறிது நேரம் அதை எடுக்காமல் இருந்தாலும் பின்பு எடுத்து குடித்து விடுகிறான்.
தான் கொண்டு வந்த தீனியை எடுத்து சென்று ஹேமாவிற்கு குடுக்கிறான் ராஜ்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் மேடையின் பின்புறம் உட்கார்ந்து நீண்ட நேரம் கார்டூன் பற்றி பேசி சிரித்தனர்.
பின்பு இருவரும் ஒருவருக்கு ஒருவர் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினர்.
