பெருந்தன்மை
பெருந்தன்மை
குசேலன் குமுதினி தம்பதியருக்கு
ஒரே ஒரு பெண் குழந்தை.பிறந்த ஐந்தாவது வயதில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் அடிபட இரண்டு கண் பார்வையும் இழந்த விட்டாள்.குசேலன் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன்.வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு என்ற நிலை.இப்படி இருக்க மகளுக்கு அதிக செலவு செய்ய முடியாமல் போய் விட்டது.இப்போது அவளுக்கு வயது இருபத்தி ஐந்து
படிப்பில் கெட்டிக்காரி,அரசாங்க தேர்வுகளுக்கு படித்து தேர்வில் வெற்றியும் பெற்று விட்டாள்.இன்னும் ஆறு மாதத்தில் பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்து விடுவாள்.
பெற்றோருக்கு பிற்காலத்தில் இவளை யார் அக்கறையுடன் பார்த்து கொள்வார்கள்.என்ன தான் உத்தியோகம்இருந்தாலும்,பொருத்தமான கணவன் கிடைக்க வேண்டும் ,கடைசி வரை காப்பாற்ற வேண்டும்.
இந்த கவலை அவர்களை வெகுவாக பாதித்தது.
அந்த விபத்தை ஏற்படுத்திய அந்த ஊர் பிரமுகரை எண்ணி நொந்து போய் விட்டார்கள்.அந்த விபத்தில் அவருக்கும் இரண்டு கால்கள் முடமாகி போய் விட்டது. உண்மையில் அவரும் இந்த பெண்ணிற்காக மருத்துவ செலவை செய்தும் அவளுடைய கண் பார்வை திரும்ப கிடைக்கவில்லை.அவளுடைய படிப்பிற்கு தேவையான பண உதவியும் செய்து கொண்டு வந்தார்.இப்போது அவள் அரசாங்க அதிகாரி ஆனது அவருக்கும் மகிழ்ச்சி.கூடவே தன்னுடைய மகனும் படித்து அவனும் ஒரு அரசாங்க அதிகாரி ஆகி விட்டான்.
இப்போது அந்த பிரமுகர் தன்னுடைய மகனிடம் ஒரு உதவி கேட்டார்.கண்களை இழந்த குசேலன்
பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டினார்.அவனும் சம்மதிக்க,அவர் குசேலன் வீட்டிற்க்கு சென்று அவனை சந்தித்து,என்னால் தான் உன் பெண்ணுக்கு கண் பார்வை போய் விட்டது.அதற்கு பரிகாரமாக என்னுடைய பையனுக்கு உன் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்ப படுகிறேன் என்று கூற குசேலன் அரை மனதாக சம்மதித்தான்.எதற்கும் என் பெண்ணை கேட்டு சொல்கிறேன் ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டான்.தன்னுடைய பெண்ணை கேட்க அவளும் சம்மதிக்க,காரணம் அந்த பிரமுகரின் பெருந்தன்மையை அறிந்து இருந்தாள்.நல்ல நாளில் அவளுக்கு திருமணம் முடிய இப்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
