தாமோதரன் சாது

Romance Tragedy Classics

4.5  

தாமோதரன் சாது

Romance Tragedy Classics

பெண் பார்த்தல்

பெண் பார்த்தல்

2 mins
320



முன்னுரை 

ஒரு சாதாரண ரசிகனின் கனவான நடிகையை பெண் பார்த்தல் என்ன நேரும் ? அதுவும் ஒரு வளர்ந்து வரும் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் எப்படி இருக்கும் ? மேலும் சாதாரண கிராமத்து குடும்பத்தில் வாசித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்யை பெண்பார்க்க செல்லும் சில நிகழ்வுகள் ...என்னுள் உதித்த சில கற்பனை 


 கல்யாணம் என்ற சடங்கு தொடங்குவதற்கு முன்னாடியே தொடங்கிவிடும் பெண் பார்த்தல் என்ற களைப்பு மிக்க பயணம். எல்லா ஆண்வர்க்கத்துக்கு நடக்கிற ஓன்று தான் இந்த பெண் பார்த்தல் என்ற சடங்கு , பெண் பார்த்தல் என்பது எந்த ஆணுக்கும் வேடிக்கையான அனுபவம் அல்ல , சில பாக்கியசாலிகளூக்கு ஒரே முயற்சியில் அமைந்துவிடும் ; துர்பாக்கியசாலிகளுக்கு நீண்ட தேடுதல் பயணம் அது .



”பெண் பார்த்தல்" என்ற நிகழ்ச்சி மணமக்களின் வாழ்வில் வாழ்க்கை திருப்புமுனை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் உணர்ச்சி கலந்த பரபரப்பு கூடிய ஒரு நிகழ்ச்சியாக பல இடங்களில் நடைபெறுகிறது .


நம்முடைய பாரம்பரிய கலசரத்தின் படி “பெண் பார்த்தல்" என்பது ஜோதிட பொருத்தம் பார்த்து , புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டு , பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் வீட்டு பெரியோர்கள் மணமகனை அழைத்து பெண் வீட்டிற்கு செல்கின்றனர் . அப்படிதான் ஒரு நாள் முன்கூட்டியே அறிவித்தார்கள் , நமக்கு சாதாரண நாட்களில் படுத்தால் விடியும் , ஆனால் அன்று மட்டும் கடிகாரத்தில் முழுசுற்றளவு கணக்கு போட்டால் கூட “நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் “ என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது , பெண் பார்க்க கூட செல்லவில்லை அதற்குள் கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதும் போன்ற நினைவு அலைகள் விடியும் வரை கனவு உலகம் தான் ! முழுசா விடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கு அதற்குள் ஏதோ ஒரு சேவல் "கொக்கரக்கோ கொக்கரக்கோ “ சத்தம் கூட இசைஞானிகளுக்கு பின்னிசையாக ஒலித்தது , கடிகாரத்தில் ஒலி அடித்தவுடன் ! வீடே கலவர பூமியானது , நான் அதிகாலை எழுந்து மூன்று முறை பல் துலக்கி தண்ணீர் தொட்டி காலியாகும் வரை குளித்தேன் ! ‘ஆள் பாதி ஆடை பாதி ‘அதற்குகேற்ப பிறருக்கு செயலாற்றல் மிக்கவராக தோற்றம் அளிக்கும் தன்னம்பிக்கை ஆற்றல் என்னிடம் உள்ளது போன்ற ஆடையை தேர்ந்தெடுத்து அணிந்தேன், முன்னோர்கள் கணித்த பஞ்சகத்தை பெரியோர்கள் நல்ல நேரம் (சகுனம்)

பார்த்து சொற்ப சொந்தக்காரர்களுடன் பெண் பார்க்க சென்றோம் .


கிராமத்து எல்லையில் காத்திருந்த தந்தை மற்றும் மூத்தமருமகன் கிராமத்தில் ஓரமாய் ஒத்தவீடு பார்ப்பதற்கு கண்கவர கூடிய அழகான மொட்டைமாடி வீடு !

வீடு முற்றத்திலே வரவேற்ற தாய்மாமன் , ஓரக்கண்ணால் முறைக்கும் அண்ணன், ஜன்னலிருந்து ஓரக்கண்ணால் ஒளிந்து பார்க்கும் தங்கை , வீட்டிலிருந்து ஒளிந்து பார்க்கும் அவள் அன்னை ஓவ்வொன்றும் ஒரே செடியில் தனித்தனி பூத்த பூக்கள் ; 

எங்கே எனது கவிதை? என்ற பாடல் நினைவுறுத்தியது ,

தூரத்திலிருந்து ஒரு குரல்,“ஏம்பா! பொண்ண கூப்பிடறது!” என் அண்ணன் கந்தசாமி அன்று உண்மையாவே சாமியாக காட்சியளித்தார் .


சின்ன இடை ! கொண்டு அன்ன நடை ! தேவலோக அமிர்தத்துடன் (தேநீருடன்) நடந்து வந்தாள் ;

வசீகரிக்கும் வெள்ளை அழகு ஊதா நிற பட்டுத்தி கலையாய் இருந்தாள்.

என் வீரம் ஓடி உன் வெட்கத்தின் பின்னால்! ஒளிந்து கொண்டது ;

தொட்டசினுங்கிக்கு நாணத்துக்கு என்ன விலை ? குழந்தை தொட்டியிலிருந்து எட்டி பார்க்கும் கள்ளப் பார்வையில் ஒரு கள்ளக்கலங்க சிரிப்பை தந்தாய். யாத்தே ! சின்ன அந்த நொடி பார்வை ஓராயிரம் கதை சொன்னது .



என்று நீங்காத தருணம் ; வசீகிர வெள்ளைகாரி என் மனதை கொள்ளையடித்து சென்றுவிட்டாள் ! இதை போல் என்றுமில்லாத ஓர் உணர்வு வாழ்க்கை முழுமையடைந்த திருப்தி ! , எல்லையில்ல மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நிலாவும் இல்லை , நட்சத்திர கூட்டமும் இல்லை ! இருள் சூழ்ந்திருந்த்தது ; மனதில் ஏதோ ஓலமிட்டு கொண்டிருந்தது , பெண் பார்த்துவிட்ட மகிழ்ச்சி , தொலைந்தே போய் விட்டேன் ;

 தொலைத்ததை தேடிக் கொண்டிருக்கிறேன் , தொலைந்ததை மீட்க அல்ல காரணம் என்ன ?? ... என்பதை தெரிந்து கொள்ள ஓர் உள்ளூணர்வு ... அன்று விட்டு சென்ற கனவுகளை மட்டும் இறுக்கி பற்றிக் கொண்டு வாழ பிடிக்கிறது ... நிந்தம்... நிந்தம் ... நீங்காத நினைவுடன் ... நான்....






Rate this content
Log in

Similar tamil story from Romance