sowndari samarasam

Abstract Inspirational

4.6  

sowndari samarasam

Abstract Inspirational

பெண் சுதந்திரமும் அதிகாரமும்

பெண் சுதந்திரமும் அதிகாரமும்

5 mins
729


ஒருநாள் பக்கத்து வீட்டு வனஜா மாமி என் வீட்டிற்கு வாந்தார்கள் என்னம்மா கீதா எந்த ஊரு என்ன படுச்சிருக்கே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது குழந்தை இல்லையா எவளோ பவுனு போட்டு கட்டி குடுத்தாங்க புடவைல நிறைய குடுத்தாங்களா உங்க வீட்டுல கடைசி தீபாவளிக்கு எவளோ வச்சுகுடுத்தாங்க பட்டு புடவை எத்தனை ரூபா, கார்லா இருக்குதா கல்யாணத்துக்கு முன்னாடி வேளைக்கு போனையா என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் குவித்து கொண்டே போனார்கள்..உடனே கீதா இதென்னடா இவளோ கேக்கறாங்களே என்று மனதில் நினைத்து கொண்டு ஒவ்வொன்றாக பதில் கூறினாள்..

சட்டென்று கீதாவின் மாமியார் என்ன அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கிற இங்க வானு கூப்பிட படபடத்து ஓடோட இல்லைங்க அத்தை இவங்க நிறைய கேள்வி கேக்கறாங்க பதில் சொல்லிட்டு இருந்தே..எதையாச்சு சொல்லி மானத்தை வாங்கிராத எங்க மாண மரியாதை எல்லா உங்க வீட்டில நடந்துகிட்டு லட்சணத்துக்கு எப்பவோ பறந்திருக்கு நான் யார்டையும் சொல்லாம காப்பாதீட்டு இருக்கற உன்னை ஒரு அந்தஸ்துல வெச்சிருக்கே அதையும் இதையும் சொல்லாத என்று பலத்த குரலில் கூறினார்..

கீதாவிற்கு மனதிலே ஆயிரம் குழப்பங்கள் இவங்க என்ன நல்ல விதமா நினச்சு சொல்றாங்களா இல்லை ஒன்னுமே புரியலையே என்று குழம்பி தவித்தாள்...

சில மாதங்களில் கீதா கருவுற்றாள் அவளின் அத்தை என்றும் கண்காணித்து கொண்டே இருந்தார்கள் வயிற்றில் அவர்கள் வாரிசு என்பதால் நன்றாக பார்த்து கொண்டார்கள். அவளுக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டாலும் கூட தன் சமையல் வேலையை முடித்து விட்டுத்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தாள்.

ஒரு வருடத்திற்குள் குழந்தையும் சிசேரியன் செய்து பிறந்தது அடிக்கடி கீதாவிற்கு உடல்நலம் சாி இல்லாமல் போய்விடும் அவள் வேதனை வலிகளோடு சொல்லவும் முடியாமல் முதுகுவலியோடு அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து துணியை அலசி காயவைத்து வீட்டு வேலைகளை முடிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டாள்..


ஒரு நாள் கீதாவிற்கு உடம்பு முடியாமல் காய்ச்சல் கடுமையான வயிற்று வலி வந்தது பிள்ளைக்கு பாலைக்குடுத்து கஞ்சிய வூட்டிவிட்டு தூங்கவும் முடியாமல் தன் குழந்தையை தான்தான் கவனித்து கொள்ள வேண்டும் என்று யோசிக்க.. பெண் என்பவள் உடல் ரீதியாக வலிகள் இருந்தாலும் தன் வேலைகளை செய்துதான் ஆகவேண்டும் என்று புலம்பி கொண்டு அழுதாள்.

தன் அத்தையிடம் இதைப்பற்றி கூறவும் ஒரு குடும்பத்துல ஒரு பெண்தான் எல்லாத்தையும் செஞ்சாகனு அது விதி என்ன வலிச்சாலும் பொறுத்துகிட்டு எல்லா வீட்டு வேலையும் செஞ்சிட்டு போயிதா தூங்கனும் இல்லைனா புருஷ தட்டுக்கு சோறு வந்திருமா என்று கத்தி பேசினார்கள்..

ஒருநாள் காலை பொழுது விடிந்தது காக்கா குருவிகள் கூச்சலிட்டு பறந்து சென்றது சூரியன் உதிக்கும் நேரம் குளுமையான காற்று மார்கழி பணியோடு வாசலிலே தண்ணீர் தெளித்து கோலமிட்டாள்.சமையல் வேலைகளை முடித்து விட்டு தன் குழந்தைக்கு சோறூட்டிவிட்டு மதியவேளையில் கணவருக்காக காத்துக்கொண்டு இருந்தாள்..

வேர்த்து விருவிருக்க அசதியாக வந்தவர் முகம் கைகால் கழுவிக்கொண்டு உள்ளே சென்றதும் "என்னங்க உங்க அம்மா எப்ப பாத்தாலும் ஏதாச்சு என்ன சொல்லிட்டே இருக்காங்க நான்தா எல்லா வேலையும் செஞ்சிட்டுத்தான இருக்கே கொஞ்சம் அப்போ அப்போ பாப்பாவ பாத்திட்டு உடம்பு முடியல முடியாம எப்படி செய்யமுடியும் இதுக்குமேல என்ன பன்றது நானு"..எங்க வீட்ல அவங்கனால முடுஞ்சது போட்டுதான் கல்யாணம் பன்னிக்குடுத்தாங்க ஒன்னு அடிமை சாசனம் எழுதி கொடுத்து கட்டிட்டு வர்ல எல்லாத்துக்கு தேவை இல்லாம சண்டை போடறாங்க என்று ஆத்திரம் அடைந்தாள்..

அவரோ முனகிகொண்டே நானே இவளோ அசதியா வந்திருக்கே வந்த உடனே இத சொல்லனா உனக்கு தூக்கம் வராதா உன்ன சும்மா யாராச்சு சொல்லுவாங்கலா தப்புனு சொன்னா சரிபன்னிக்கோ அடுத்ததடவ, உன்னோட நல்லதுக்குதான சொல்றாங்க வீட்டு வேலைய பாக்கறதுதா உன்னோட வேலை அத மட்டும் செய் வாய் பேசாத..என்று கூறிவிட்டு முகத்தை துடைத்தபடி சாப்பிட அமர்ந்தார்..

இவள் புலம்பிக்கொண்டு தனிமரமாய் நின்றாள் மனதில் நிறைய சிந்தனைகளோடு கண்களில் கண்ணீரோடு தன் சேலை முந்தானையை எடுத்து கண்களை துடைத்துகொண்டே கணவருக்கு பரிமாறினாள்.

நான் எதற்காக இவரை கல்யாணம் பன்னே தினமு சட்டி பாத்திரம் கழுவிட்டு சாப்பாடு செஞ்சிட்டு இவங்கள பாத்திட்டு உக்காந்தே காலம் போகுது இது என்ன வாழ்க்கை நாம எதுக்கு படிச்சோ வேளைக்கு போனோம் இப்ப எதுக்கு இங்க உக்காந்திருக்கோனே தெரியலையே நம்ம வீட்ல ஒரு வேல கூட செஞ்சதில்ல நல்லா ஊருசுத்திட்டு வேளைக்கு போயிட்டு நல்லா சம்பருச்சிட்டு நமக்கு புடிச்சமாதிரி இருந்து பழகிட்டோம் இங்க வந்து இவ்ளோ மாறிடுச்சு வாழ்க்கையே அவளோதானா நமக்குன்னு ஒரு அடையாளத்தை குழி தோண்டி புதைக்க

சொல்றாங்களே..என்று மனதிலே அருவியை போல் கொட்டி தீர்த்து கொண்டாள்..

அவளுடைய மாமனார் ஒருநாள் அத்தையை திட்டிகொண்டே அறையில் இருந்து கோவமாக வெளியே வந்தார்..அரிசி கடையில் சரக்கு வந்து நிற்கிறது இன்னும் பணத்தை எங்குதான் ஒளித்து வைத்திருக்கிறாய் உடனே அலமாரியில் இருந்து எடுத்துவா என்று கத்தி கொண்டே சென்றார்..கடையில் வியாபாரம் பெருகி கொண்டே சென்றது.


சில மாதங்களுக்கு பிறகு தன் கணவனும் மாமியாரும் தன்னை பற்றி பேசிக்கொண்டு இருப்பதை கவனித்தாள்..சுரேஷ் என்னடா உன் பொண்டாட்டிக்கு குடும்பம்னா என்னனு தெரியுமா அவ பாட்டுக்கு வரா போரா பெரியவங்கள மதிக்க தெரியாதா அவங்க வீட்ல இருந்து என்ன ஒழுங்கா கொண்டுவந்தா இங்க வந்து இந்த ஆட்டம் ஆடிட்டு இருக்கிறா பக்கத்து வீட்டுல நம்ம மரியாதையா சந்திசிரிக்கவெச்சிடா...முதல மரியாதைனா என்னனு சொல்லிக்குடு வீட்ல சுதந்தரமா எதுமே இல்லைங்கறா அப்படி என்ன அவள பண்ணிட்டோம் இரண்டு மணி நேரம் தூங்கவிடறன்ல மத்தியானம் எவளோ வேல செஞ்சாலும் கால் நீட்டுனாலே தூங்கினமாறிதா தூங்கமுடில காத்து இலைங்கிறா உடம்புல வலிக்குதுங்கிறா என்னதா வேல செஞ்சு கிழிக்கிறாடா.. நான் அரிசி கடைல உக்காந்திட்டு திங்க நேரமில்லாம இருக்கே இவளுக்கு என்னடா வந்திச்சு என்று கத்தி கொண்டே இருந்தார்..

கீதா அத்தையை கவனித்த பிறகு நான் சொல்லவருவதை யாரும் புருஞ்சிக்கவே மாற்றங்களே 3நேரமும் சோறாக்கி குழம்பு வச்சு பாத்திரம் கழுவிட்டு இவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கறது வேலையா என்று நினைத்து கொண்டு வேலைக்கு போகலாம் என முடிவு எடுத்தாள்.


அத்தையிடம் இதைப்பற்றி கூறவும் அவர்கள் மனதிலே வேலைக்காடி போற வேளைக்கு இரு வச்சிக்கற, வேலைக்கு போயி சம்பாரிச்ச காசுலா என்டதா தரனும் நீயே செலவு பன்னாத புரியுதா இங்கு எல்லாமே அப்டிதா விடிய காலைல எந்திருச்சு எல்லா வேலையும் செஞ்சிட்டு சமைச்சு வச்சிட்டு வேலைக்கு போ என்று கண்டித்தார்...இவள் மனதிலே மீண்டும் குழப்பம் இவங்களுக்கு தரதக்கு நான் எதுக்கு வேலைக்கு போகணும் என் புருஷ சம்பாரிச்ச காசையும் அவங்களே வாங்கிக்கறாங்க நமக்குனு என்ன சேத்தி வச்சிருக்காங்க...

வெளிய வேளைக்கு போனாவாச்சு நமக்கு மனசு நிம்மதி கிடைக்கு வீட்டுக்குல்லையே எத்தன நாளைக்கு அடைஞ்சுகிடக்கறது எங்கையும் வெளிய கூட்டிட்டு போறதில்ல..நம்மள சரிசமமா நினைக்கவும் மாட்டிறாங்கா எல்லா விஷயத்துலையும் குறையா பேசிட்டு இருக்காங்கனு பொளம்பிட்டு அவ வேக வேகமா பாத்திரத்தை கழுவினாள்.

அவள் கதை கட்டுரை எழுதுவது ஓவியம் வரைவது அவளுக்கு மிகவும் பிடிக்கும் தன்னை எதுலையாவது உயர்த்தி கொண்டு முன்னேறி வரவேண்டும் என்று மனதில் நெருப்பை போல் பற்றிக்கொண்டு இருந்தாள்..

அழகா துணிமணி போடறது தல சீவரத்துல இருந்து டிவி பாக்கிறது எல்லாவற்றிலுமே அவளோட சுதந்திரத்தை இழந்திட...கீதா தனுக்குள் நிறைய மாற்றங்கள் வருவதை உணர்ந்தாள்.

பயந்து கொண்டே ஒவ்வொரு வேலையாக சீக்கிரம் செய்து கொண்டு முடிப்பாள்..அவள் மாமியார் தீடிரென்று கோபத்தில் நீ வெறும் வெள்ள தோழுதா இல்லைனா உன்ன யாரும் கட்டிட்டு வந்திருக்க மாட்டோம் என் பையனுக்கு நிரைய இடத்துல பொண்ணு வந்திச்சு அவளோ பவுனு போட்டு கட்டிக்க வல்லினமா வந்தாங்க நீ நடந்துகிறதுக்கு உங்க வீட்ல மதிக்கற லட்சணத்துக்கு உன்ன வேற இடத்தில கட்டி கொடுத்திருந்தா உன்ன வச்சு செஞ்சிருப்பாங்க நாங்களா இருக்கறதுனால உன்ன நல்லா வச்சு பாத்துகரோ அத முதல மனசுல வச்சு நடந்துக்கோ..என்று கீதாவின் மாமியார் சமையல் அரையில் அங்கும் இங்குமாய் திட்டிகொண்டே நடந்தார்.

இரவு முழுவதும் நல்ல உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள். மறுநாள் மாலை வெயிலிலே சாய்ங்கால நிழலிலே நின்றுகொண்டு அவள் மனதிற்குள் ஒரு விதமான கோபமும் அழுகையும் நெஞ்சுக்குழியில் அடைத்ததுபோல் பதற்றத்துடன் காணப்பட்டாள்..நம்ல மாதிரி எத்தனையோ பெண்கள் சீக்கிரமா கல்யாணம் பன்னிகிட்டு கஷ்டப்பட்டு இருக்காங்க இவங்களுக்கெல்லா விடிவு காலமே இல்லையா பெண்களுக்கு எப்பதா சுதந்திரம் கிடைக்கும் நாம எந்த துறைக்கு போனா ஜெய்களாங்கிற எண்ணமும் தன் குழந்தை நல்லா வளரனும் நாம கண்காணிப்புல இருக்கனு நினச்சுட்டு பல கனவுகள மறச்சுட்டு தன் குடும்பத்துக்காக முடங்கி கிடந்க்கிறாங்க.

ஆணும் பெண்ணும் எப்பவும் சரிசமமா பாக்கராங்களோ அப்பத்தா இந்த நாடு முன்னேறு ஒரு பொண்ணு வெளிய போறானா ஆண்கள் ஏன் அவள தங்கச்சியாவோ அக்காவாவோ பக்கமாட்டிக்கிறாங்க. தப்பான கண்ணோட்டத்தில பாக்கறதுனாலையே சில பெண்கள் வெளிய வரமாட்டிராங்க நிரைய துன்புறுத்தலுக்கு தள்ளப்படறாங்க..


நம்மள கல்யாணம் பன்னிக்கிற ஒரு கணவர் உனக்கு என்ன புடிக்கும் உன்னோட கனவு லட்சியம் என்னது நீ எப்படி இருக்கணும் ஆசைப்படற சரி எது தப்பு எதுன்னு சொல்லிகுடுத்து உதவி செஞ்சு உத்வேக படுத்தனு எப்பவும் நம்பி வந்தவள சந்தோசமா வச்சுக்க நினைக்கனு அவருதா சிறந்த கணவரா இருக்க முடியும் நாம என்ன சொல்லவரோ நமக்கு என்ன பிரச்சனைனு காது குடுத்து கேக்கிறதுக்கே வலிக்குது பணம் பணம்னு எதையோ தேடிகிட்டு வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறாங்க குடும்ப சூழ்நிலை பொண்டாட்டி என நினைக்கறாங்கிறது கவனிச்சு சரியா கொண்டுபோறவங்க ரொம்ப குறைவாதா இருக்காங்க இதெல்ல எப்போ மாறும் தனக்கான அடையாளத்தை எப்போ காட்டமுடியும் ஒரு பெண்ணுக்கு மன ரீதியாவும் உடல் ரீதியாவும் நிறைய பிரச்சனைகள் இருக்கு அவங்க ஆணுக்கு சரியா வேல பார்க்க முடியாது அவங்க அவங்களுக்கு என்ன வேல செய்யமுடியுமோ அத தேடி புடிச்சு அந்த வேலைய விரும்பி செய்யணும் அந்த இடத்துல நிறைய பிரச்சனைகளையும் எதிர் கொள்கிறாள் அந்த பெண்.

அப்பவும் ஒரு ஆண் உதவி தேவைப்படுது அதுக்கு துணையா கணவர் மட்டும்தா கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா விதத்துலையும் கூட நிக்கணும் புரிதல் இல்லைனா வாழ்க்கை வீணாபோய்டும் எப்போ ஒரு ஆண் ஒரு பெண்ணை முழுமையா புருஞ்சு நடந்துக்கறாங்களோ அப்பதா ஆண் ஆதிக்கமும் அழியும் பெண்ணுக்கு சுதந்திரமும் வெளியே போயி வேலை செய்யவும் அவளுக்கான அடையாளத்தை தேடிக்கவும் முடியும்..என்று மனதிலே ஆயிரம் கற்பனைகளோட தன்னையும் ஒருநாள் கணவர் புரிந்து கொண்டு தன் வீட்டில் உள்ளவருக்கும் எடுத்து புரியவைப்பார் என்று நம்பி வீட்டிற்குள்ளே நுழைந்தாள்..Rate this content
Log in

Similar tamil story from Abstract