STORYMIRROR

Saravanan P

Abstract Comedy Drama

4  

Saravanan P

Abstract Comedy Drama

பசுமரத்தாணி

பசுமரத்தாணி

2 mins
344

வயல்களில் வேலை மிகவும் கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது.

கிராமத்து பாடல் அழகாக வேலை செய்யும் பெண்மணிகள் வாயில் இருந்து ஒலித்தது.


அங்கு காலை வேலை முடித்து உணவு உண்ண நிழல் தேடி வந்தனர் வேலை செய்பவர்கள்.

அப்பொழுது ஒரு பெண் தன் இரு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இங்கு உணவு உண்ண வந்தாள்.

அடே நம்ம கங்கா பொண்டாட்டி சசியும் அவ பிள்ளைங்க கதிரும்,ஜனனியும்.

கதிர் மரத்திற்கு அடியில் சென்றவுடன் அங்கு இருந்த பல நடுவயதினற்கு அப்படியே கங்கா சிறுவயதில் மரம் நட்ட ஞாபகம் வந்தது.

சசி தன் பிள்ளைகளை அங்குள்ளவர்களக்கு அறிமுகப்படுத்தினாள்.

அனைவரையும் அந்த இடத்தில் இருந்த மரத்திற்கு அடியில் அமர அழைத்தாள் சசி.

அனைவரும் தூக்குவாளிகளுடன் அங்கு வர கதிர்,ஜனனி துள்ளி குதித்தனர்.

சசி சோற்றை தட்டில் போட்டு பிசைந்தபடி கதிரையும்,ஜனனியையும் துரத்தியபடி மிரட்டினாள்,ஒரு வாய் வாங்கிட்டு போங்க அன்று.

அங்கு இருந்த ஒரு பாட்டி பிள்ளைங்கனா அப்படிதான் தங்கம்,அவங்களை உட்கார வைக்கனுமா இங்க வாங்க உங்க அப்பனை சின்ன வயசுல பண்ண கூத்தெல்லாம் சொல்றேன்.

கதிர்,ஜனனி ஆர்வத்தில் பாட்டி பக்கத்தில் வந்து அமர சசி இது தான் சமயம் என விறு விறு என அங்கு வந்து சோறு உட்ட ஆரம்பித்தாள்.

"கங்கா அவன் அப்பாக்கு சக்கரைகட்டி மாதிரி அப்படி தாங்குவாரு.

அவனுக்கு முன்னே,பின்னே பிறந்த பிள்ளைங்க எல்லாம் அடி வாங்கும்போது அவன் மட்டும் அப்பன் தோள்ல உக்காந்து பந்தா பண்ணுவான்.

பாடம் எடுக்குற ஆசிரியர் ஒரு நாள் நம் கிராமத்தில மரக்கன்று நடும் திட்டம் பத்தி பிரச்சாரம் பண்ணாங்க.

திடு திடுனு ஓடி வந்த கங்கா என் மரம் நடனும்னு கேட்டான்.

சுத்தமான காத்து,நிழல்,மழை வர வைக்கிற வேலை,பறவைகள் தங்குற இடம்னு அவங்க அதோட பலனை சொல்ல கங்கா உடனே அவன் அப்பன் கிட்ட போய் நம்ம இடத்தில எல்லாம் மரக்கன்று நடனும் அப்படினு சொல்றான்.

அவன் அப்பா ஒத்துக்காம இருக்க அடம் அதிகமாகுது.

அது வரைக்கும் வாங்காத அடியெல்லாம் கங்கா அவன் அப்பன்கிட்ட சேத்து வாங்குறான்.

ஒரு நாள் முழுக்க அழுத அவனை சமாதானம் படுத்த மூன்று மரக்கன்றுகளை வாங்கி இந்தா இங்க ஒன்னு,கோயில் பக்கத்தில் ஒன்னு,வீட்டு பக்கத்தில் ஒன்னு அப்படினு கங்காவை தோளில வச்சுக்கிட்டு அவன் அப்பன் ஊரே வேடிக்கை பார்க்க நட்டாரு.

கங்கா முகத்தில சிரிப்பு வந்தது நட்ட மரக்கன்றுக்கு தண்ணீ உத்துனதுக்கு அப்பறம்னு" பாட்டி சொல்லி முடிக்க,கதிர் மற்றும் ஜனனி சாப்பிட்டு முடிக்க சரியா இருந்தது.

அப்பொழுது குடும்பத்தை அழைத்து செல்ல வந்த கங்காவை குட்டிஸ் ஜனனியும்,கதிரும் சக்கரக்கட்டி என கங்காவை அழைத்து சிரிக்க சசி சிரித்து விடுகிறாள்.

கங்கா அந்த பாட்டியை பார்த்து "நீ தானே அத்தை,வீட்டுக்கு சாயங்காலம் வெத்தலை டப்பா கொண்டு வருவில்ல உனக்கு அப்ப இருக்கு என சொல்ல ஜனனி,கதிர்,சசி அனைவரிடமும் விடைப்பெற்று கங்காவின் வண்டியில் ஏறினர்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract