STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

பச்சை

பச்சை

1 min
6

அடர்ந்த வனம் போல பச்சை பசேல் என்று இருந்த அந்த இடம்,

இப்போது பொட்டல் காடு போல காட்சி அளித்தது.

 அந்த இடத்தைபசுமை காடாக மாற்றிய சிவலிங்கத்திற்கு முந்தைய அரசு பரிசு அளித்து பாராட்டி பத்திரம் கொடுத்து இருந்தார்கள்.

ஆயிரம் மர கன்றுகள் நட்டு,

தண்ணீர் விட்டு மரத்தை வளர்த்தி 

அடையாளம் தெரியாத அளவிற்கு 

மாற்றி இருந்தார்,சிவலிங்கம்.

மரமே வளராது என்று எல்லோராலும் கை விடபட்ட இடத்தில் மரம் வளர்த்து சாதனை புரிந்தார்.

ஆட்சி மாறியதும் புது இரயில் தடம் 

உருவாக்க அரசாங்கம் அந்த இடத்தை தாரை வார்த்து கொடுத்தது.அதுவும் ஒரு தனியார் நிறுவனம் அந்த திட்டத்தை அமல் படுத்தி கொண்டு இருந்தது.

இப்போது வளர்த்த மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்க பட்டு 

வெறும் தரிசு பூமியாக காட்சி அளித்தது.

அந்த இடத்தை இரயில் பாதை அமைக்க கொடுக்க கூடாது என்று 

சமூக ஆர்வலர்கள்,வழக்கு தொடுத்து இருந்தார்கள்.வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே மரங்களை வெட்டி விட்டார்கள்.

இப்போது நீதிமன்றம்,அங்குள்ள மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவு போட்டது.

உத்தரவு கைக்கு வரும் முன்பே

மரங்கள் வெட்டி சாய்த்து விட்டார்கள் பாவிகள்.

இனி அந்த இடம் பழைய நிலைக்கு எப்போது திரும்பும் என்பது

ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Abstract