பாண்டிச்சேரி பாசஞ்சர்
பாண்டிச்சேரி பாசஞ்சர்


என்னடா! நீ நானும் கிண்டியிலிருந்து பார்க்கிறேன்..அப்படியே தலைமேலேயே பெட்டியைப்போடுறியே!
கொஞ்சம் பொறுத்துக்கோங்க! மேல்மருவத்தூர் போற மக்களுங்க கூட்டம் அதிகம் பாருங்க!
இப்ப பெட்டி வசதியைவேறு மாற்றி விட்டிருக்காங்க! ஒண்ணும் சரிப்படலை! என்றபடி கையில் இருந்த பையை காலுக்கடியில் தள்ளினான் சின்ன துரை.
அடுத்து எப்பம்மா வண்டி நிற்கும்?
ஏண்டா!
எனக்கு அவசரமா ஒன்பாத்ரூம்போகணும்மா!
தள்ளிட்டு போடா! இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்.தண்ணீர் ரொம்ப குடிக்காதேன்னு!
வேணும்னா தம்பிபோடற டயப்பரை எடுத்து கட்டிக்கிட்டான்ன கேட்கிறான் என நமட்டு சிரிப்பு சிரித்தாள் கோதையம்மா.
வந்ததும் இட்லிப்பொடி வச்சிருக்கியான்னு உருட்டுவான். அவனுக்குன்னு காலையிலேயே தக்காளி சட்னி,வெங்காயச் சட்னின்னு எடுத்துட்டு வந்தேன் என காரியரைத் திறந்தபடி பேசிய கோதையம்மாளை சின்னதுரை சிரித்தபடி எப்படி சாப்பாடு கொடுப்பீங்க என்றான்?
பாத்ரூம் சென்று வெற்றியுடன் திரும்பிய மகனைப் பார்த்து குப்பைத்தொட்டி வச்சிருக்காங்களாடா?
இல்லைம்மா.....
சரி! நீ நான் வச்சிருக்கிற பேப்பரில் கையைக் கழுவி துடைத்து போடு..இந்தா! வாயில் தர்றேன்..வாங்கிக்கோ..என்று ஊட்டத் தொடங்கி அவளும் வாயில் விழுங்கினாள். பையன் மொபைலில் ஏதோ பார்த்தபடி இருந்ததைப் பார்த்த சின்னதுரை என்ன தம்பி பார்க்கிறே! என்றான்.
வாட்ஸ்அப் அங்கிள்......அதுல வெட்டிகதை எல்லாம் போடமாட்டேன். எங்கப்பாவுக்கு ஒரு வீடியோ யுட்யூபில் வந்தது. அது விவசாயம் தொடர்பானது அதை அவர் பார்க்கிறதுக்காகப் போட்டேன்.அறிவியல் கருவி எப்படி பயனுள்ளதாக இருக்கு தெரியுமா? வேஸ்ட் மிக்சியில் மோட்டராக்கி பயன்படுத்துறாங்க!
மூங்கில்குழாய்மட்டுமே பய்ன்படுத்தி கிணறு தோண்டி இருக்காங்க! இதுமாதிரி நிறைய இருக்கு! படிக்கிறது பயனுள்ளதாக இருக்கணும் இல்லையா! என்று அவன் சொன்னதை பாண்டிச்சேரி பாசஞ்சர் சக்கரங்கள் சரசரவென கத்தியபடி சென்ற கொண்டிருந்தன