ஒருவனின் கதை அத்தியாயம் 3
ஒருவனின் கதை அத்தியாயம் 3
தொடர்கதை
இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.
அத்தியாயம் 3 நிச்சயதார்த்தம்
மாசி அன்று முதல் நாள் கடையில் இருந்து வெகு சீக்கிரம் அறைக்கு வந்துவிட்டு தனது கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்த பட்டு வேட்டி,சட்டை மற்றும் தங்கமோதிரத்தை பார்த்துவிட்டு அதை எடுத்து பார்த்து கொண்டிருக்க அவர் அண்ணி அப்பொழுது அங்கு வந்து அண்ணன் குடுக்க சொன்னாரு பா நிச்சயத்திற்கு என சொல்லிவிட்டு சென்றனர்.
மாசி அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு மேத்தையில் படுத்த உடன் உடம்பு அசதி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
மாசி அக்கா விரைந்து அங்கு மாசி அண்ணன் வீட்டிற்கு வந்தார்.
அண்ணி மாசியிடம் வந்து உங்க அக்கா வந்திருக்கு அப்பா,போய் பஜ்ஜி,வடை எதாவது வாங்கிட்டு வா பா என சொல்லி விட்டு நாத்தனாருக்கு காபி போட சென்றார்கள்.
மாசி வடை வாங்க கடைக்கு போனால் அங்கு ஒரே கூட்டமாக இருந்தது.
அந்த கூட்டத்தில் ஒரு பட்டு வேஷ்டி அணிந்த ஒரு ஆள் வடைகளை தட்டில் வாங்கி அங்கு மேசையில் அமர்ந்திருந்த தன் மனைவிக்கு சென்று குடுத்தார்.
அவர் மனைவி சுற்றி இருந்தவர்களை பார்த்து சாப்பிட தயங்கி கொண்டிருக்க கணவன் சாப்பிடு என்று தலையை ஆட்டி சொன்னார்.
மாசிக்கு இதை பார்த்து நாமும் நாளைக்கு இப்படி தான் மனைவியுடன் வெளியே வருவோம் என நினைத்து கொண்டு உள்ளுக்குள் சிரித்தபடி வடையுடன் கொண்டு சென்று அக்காவிடம் குடுக்க டேய் மாசி என குரல் கேட்டது.
என்ன என அக்காவை கேட்டு விட்டு தரையில் அமர்ந்தார் மாசி.
நாளை கழிச்சு நிச்சயத்தப்போ உன் மாமியார் வீட்டு ஆளுங்களோட அப்படியே ஓட்டி உறவாடாதே,கொஞ்சம் கெத்தா இரு,இது வேணும்,அது வேணும்னு கேளு என சொல்லி மாசி அங்கிருந்து கிளம்பி அறைக்கு சென்று அதை பற்றி யோசிக்கும் போது தன் எதிர்கால பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது.
அந்த பொண்ணு கிட்ட எப்படியாவது பேசனும்,அன்னைக்கே யாருமே பேச விடல என சொல்லி மாசி படுத்து தூங்கிவிட்டார்.
அங்கு திண்டுக்கல்லில் தனம் தனது வீட்டு ஆட்களுடன் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி கொண்டு இருக்க திடீரென மாப்பிள்ளையின் முகம் கொஞ்சமாக பார்த்தது ஞாபகம் வந்தது.
நிச்சயத்தப்போ மாப்பிள்ளையை எப்படியாவது பார்க்கனும் என தனம் நினைத்து கொண்டே பேசிவதை குறைத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தாள்.
நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் திண்டுக்கல்லில் தனம் வீட்டில் ஆரம்பித்தது.
சொந்தக்காரர்கள் அங்கு வர ஆரம்பிக்க அவர்களுக்கான சமையல் வேலைகள் ஆரம்பிக்க அந்த தெருவிலும் பலர் வீட்டு சமையைலுக்கு சற்று லீவு விட்டனர்.
தனம் மற்றும் தனம் வீட்டாரிடம் வந்த மாப்பிள்ளை பற்றி எதாவது கேட்டு கொண்டே இருந்தனர் தனம் சொந்தக்காரர்கள்.
சிலர் தனம் காது படவே தனம் காது பட மாப்பிள்ளை பற்றி கேலி கிண்டலுமாக போக தனம் அம்மா அங்கு சென்று அந்த ஆட்களை திட்டி அனுப்பிவிட்டனர்.
மாசி வீட்டிலும் சொந்தகாரர்கள் குவிய ஆரம்பித்தனர் அங்கு காலை டிபன் ஆனது.
மாசியின் நண்பர்கள் அனைவரும் மாசியிடம் பார்ட்டி கேட்டு கலாட்டா பண்ணி கொண்டிருக்க வீட்டு பெண்கள் பலர் நீண்டு நாட்கள் கழித்து பார்த்து கொண்டு பொரணி பேச ஆரம்பிக்க அதில் சில ஆண்களும் சேர்ந்து பேச அந்த வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது.
சின்ன பிள்ளைகள் ஓடி பிடித்தும்,கண்ணாமூச்சி விளையாடி ரகளை பண்ணி குஷியாக இருந்தனர்.
எல்லாரும் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு வேன்களில் ஏற சாமி பெயரை சொல்லி கும்பிட்டு வாய் உரக்க சொல்ல வேன்கள் கிளம்பியது.
திண்டுக்கல் போகும் வரை அந்த வேன்களில் ஓடிய பழைய பாடல்கள்,பேசப்பட்ட பொரணிகள்,பேசப்பட்ட பல குடும்ப கதைகள் பலர் காதுகளில் ஓலித்தது.
திண்டுக்கல்லில் தனம் வீட்டை அடைந்த உடன் தனம் அண்ணன் அனைவரையும் வரவேற்று அவர்களை தங்குமிடம் அழைத்து சென்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார்.
அடுத்து மாப்பிள்ளை வீட்டார் அனைவரையும் சாப்பிட வைத்து விட்டு முக்கியமானவர்களை அழைத்து சென்று நிச்சயம் நடக்கும் கோயிலை காட்டினார் தனம் அண்ணன்.
மாப்பிள்ளை மாசியை ஊரார் வாங்க வாங்க என வாயார வரவேற்றனர்.
அடுத்து கோயிலில் இரு வீட்டாரும் ஒன்று கூடினர்.
அங்கே தனமும்,மாசியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துகொள்ள முடியவில்லை.
அந்த சிறிய கோயிலில் தனம் முதலில் வந்து வணக்கம் சொல்லி விட்டு பின் சென்று நிற்க திபுதிபுவென உள்ள புகுந்த சொந்தக்காரர்கள் இருவரையும் சரியாக பார்த்து கொள்ள விடாமல் தடுக்க,அந்த மூச்சு முட்டும்,வியர்த்து கொட்டும் இடத்தில் நிச்சயம் சுபமாக முடிந்தது.
அடுத்து என்ன கல்யாணம் தான்.
திருச்சியில் கல்யாணம் அடுத்த அத்தியாயம் மறக்காம வந்திருங்க.
ஒருவனின் கதை அத்தியாயம் 4 என தொடரும்.

