DEENADAYALAN N

Abstract

4.6  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - ஏழு

ஞாயம்தானா? - ஏழு

2 mins
23.1K

அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சென்ற பதிவுகளில் உங்கள் கருத்துகளைப் பதியவில்லை என்றால் இப்போதும் பதியலாம்..


காந்திபுரம் சமிக்‌ஷை சந்திப்பில் நெடும் / கடும் போக்கு வரத்து நெரிசல்.


க்ருஷ் காரின் ஓட்டுனர் இருக்கையில் பொறுமையின்றி அமர்ந்திருக்க, அவி அருகில் அமர்ந்திருந்தான்.


‘என்னடா இது.. இருபது நிமிஷம் ஆச்சி.. இன்னும் ட்ராஃபிக் அசைய மாட்டேங்குதே..’ கடுகடுத்தான் க்ருஷ்.


‘டேய் கொஞ்சம் பொறுடா.. டென்ஷன் ஆகாதே…’ – என்று அவி அவனை சமாதானப் படுத்தினான்.


‘மணி 6.00. ஆறரைக்குப் படம் போட்ருவான்டா..!’ என்று மீண்டும் கடுப்பை உதிர்த்தான் க்ருஷ்.


அவி வண்டியிலிருந்து இறங்கி சற்று தூரம் சென்று பார்த்தான். இரண்டு காவலர்கள் படாத பாடு பட்டு நெரிசலை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.


மீண்டும் காருக்குள் வந்து, ‘ஆயிடும்டா.. காவலர்கள் சரி பண்ணிகிட்டு இருக்காங்க’ என்று நம்பிக்கையூட்டினான்.


அந்த சமயம் பார்த்து ‘உய்..உய்’ என்று சத்தத்துடன் பின்னாலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவராக ஒதுங்கி வழி கொடுக்க க்ருஷ்ஷும் சற்று ஒதுங்கி வழி கொடுத்து விட்டு, உடனே சற்று வேகத்தை அதிகரித்து ஆம்புலன்ஸ் பின்னாலேயே போக ஆரம்பித்தான். இரண்டு நிமிடங்களில் சமிக்‌ஷை சந்திப்பின் அருகில் வரும்போது ஆம்புலன்சை மட்டும் அனுப்பி விட்டு இந்தக் காரை காவலர் மறித்து விட்டார்.


‘ஏம்பா.. ஆம்புலன்ஸ் பின்னாடியே இந்த வேகத்துலே வர்றயே.. அப்பிடி வரலாமா.. அப்பிடி என்ன உனக்கு தல போற அவசரம்..?’


‘சாரி சார்.. ஒரு ஃப்ரெண்ட கேஜி ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணி இருக்கறாங்க.. அவசரமா போகணும்’ – க்ருஷ் நடித்தான்


‘அப்பிடியா.. போங்க.. போங்க.. ‘ என்று வண்டியை விட்டு விட்டார்.


நெரிசலைக் கடந்து வந்த ‘க்ருஷ்’ நண்பனை பார்த்தான்.


அவனுடைய பொய்யும் செயலும் அவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


‘ரொம்ப தப்புடா.. கேவலம் ஒரு சினிமா பாக்கறதுக்காக ஒரு ஃப்ரெண்ட ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டியேடா…’ என்றான்.


‘டேய் டேக் இட் ஈசி.. அதுலே ஒன்னும் தப்பு இல்லடா..’ என்று ஆரம்பித்தான் க்ருஷ்.


‘சாரிடா.. உண்மையிலேயே நமக்கு முன்னாடி வரிசையிலே நின்னுட்டிருந்தவங்களுக்கு எத்தனையோ அவசரம் இருந்திருக்கும்..அவங்களையெல்லாம் முந்திகிட்டு வந்ததுலே நீ என்ன சாதிச்சிட்டே…. இதபாருடா.. பலருக்கும் தெரிஞ்சி ஒரு தப்பு செய்யறவனைக் கூட ஒரு வீரனா ஏத்துக்கலாம்.. ஆனா யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சி ஒரு தப்பை செய்யறவன் கோழைடா..’


‘டேய்.. கெடச்ச சந்தர்ப்பத்தெ பயன் படுத்திக்கறதுல என்னடா தப்பு?’ – க்ருஷ்


‘கெடச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிறதுலையும் ஒரு ஞாயம் இருக்கணும்டா’ – அவி


அவி விருப்பமின்றியே அன்று படம் பார்த்தான்.திரும்பி வரும்போது ‘இவ்வளவு நல்லவனாடா நீ..’ என்று க்ருஷ் கிண்டலடித்தான்.


ஆனால் அவி அதை கண்டு கொள்ளவில்லை!‘இதிலென்ன இருக்கு?’ – என்று ஒரு சிலர் நினைக்கலாம்.


‘இது ரொம்ப தப்பு. கொஞ்சம் கூட ஞாயமே இல்லை.’ என்று வேறு சிலர் கருதலாம்.


க்ருஷ்ஷின் செயல் ஞாயம்தானா? உங்கள் கருத்தைப் பதிவிடலாம்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract