DEENADAYALAN N

Abstract

4.9  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - ஐந்து

ஞாயம்தானா? - ஐந்து

2 mins
35.3K




அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சென்ற ‘ஞாயம்தானா?’ பதிவுகளில் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.


இந்த வார ஞாயத்தைப் பார்ப்போம்!


அன்று பண்டிகைத் திருநாள்!


மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதியது. பூக்களின் விலை உச்சம் தொட்டது. ஜாதிமல்லி கால் கிலோ நூற்றைம்பது ரூபாய் என்று விற்றது.


குறைந்தபட்சம் கால் கிலோ வாங்க வேண்டும் என்று கடைக்காரர் கூறி விட்டார். சுக்ரபதிக்கு எப்படியும் பூ வாங்கியே ஆக வேண்டும். ஆனால் பூவிற்காக நூற்றைம்பது ரூபாய் செலவிட முடியாத நிலை.


எனவே ஒரு ஐடியா செய்தார். மற்றொரு பெண்ணுடன் பேசி இருவரும் சேர்ந்து கால் கிலோ பூ வாங்கி, ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வது என்று முடிவாயிற்று.


கடையில் ஈ போல் மொய்க்கும் மக்கள் கூட்டம். கிலோ கணக்கில் மொத்தமாய் வாங்கியவர்களுக்கே கவனிப்பு அதிகம். சுளையாய் நூற்றைம்பது ரூபாயை கொடுத்து விட்டு கால் கிலோ பூவை வாங்கிக் கொண்டு விலகி வந்து சுக்ரபதி பூவைப் பார்த்தார். கால் கிலோ இருக்காது என்று தோன்றியது.


‘சே.. வேற கடையிலே பூ வாங்கியிருக்கலாம்..’ தன்னை நொந்து கொண்டார்.


மனமின்றி பூவைப் பிரித்துக் கொண்டபோது சுக்ரபதிக்கு அங்கலாய்ப்பாய் இருந்தது. இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று மனசு பரபரத்தது.


‘கொஞ்சம் பொறுங்கம்மா…’ என்று சொல்லி விட்டு விறு விறு என்று கடைக்காரரிடம் ஓடினார். ‘அண்ணே, இருநூறு ரூபாய் குடுத்தேன்.. பாக்கி ஐம்பது ரூபாய் வாங்கலே..’ – சுக்ரபதி.


‘அப்படியா.. குடுக்கலையா..’ தயங்கித் தயங்கி ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் கடைக்காரர்.


சுக்ரபதி அந்த அம்மாவிடம் வந்தார். இருபத்தைந்து ரூபாய் எடுத்து நீட்டினார்!


ஆனால் அந்த அம்மா வாங்க மறுத்து விட்டார். ‘வேண்டாங்க..இன்னிக்கு விலைவாசிலே கடைக்காரர் பூவை அந்த விலைக்கு வித்திருக்கலாம்.. அது நமக்கு அநியாயமா இருக்கு.. ஒரு அநியாயத்திற்கு எதிரா இன்னொரு அநியாயம் செஞ்சா அது நியாயம் ஆயிடாது.. பணத்தை திருப்பிக் குடுத்துருங்க..’என்று கூறி விட்டு மளமளவென்று நடயைக் கட்டி விட்டார்.!



ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார் சுக்ரபதி.


சுக்ரபதியின் செயல் ஞாயம்தானா?


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்


அடுத்த பதிவு ஓரிரு நாளில்!











Rate this content
Log in

Similar tamil story from Abstract