Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

நதியில் ஒரு படகு

நதியில் ஒரு படகு

1 min
228


இரண்டு கிராமத்தின் நடுவே ஒரு பெரிய நதி.அதில் இறங்கி கடக்க முடியாத அளவிற்கு ஆழம் மட்டுமல்ல,பிடித்து தின்ன காத்து இருக்கும் முதலைகள்.யாரும் அதை நீந்தி கடப்பதற்கு கூட பயப்படு வார்கள்.

வேலன் என்ற ஒரே ஒரு படகோட்டி,மட்டும் படகை இக்கரைக்கும் அக்கரைக்கும் இயக்கி கொண்டு இருந்தான்.

ஒரு நாள் நோய்வாய் பட்டு இறந்து போக,படகை இயக்க யாரும் இல்லை.

வேலன் இறந்த செய்தியை கேட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்தான் பேரன் கந்தன்.

இக்கரையில் வேலன் இறந்து கிடக்க,அவனுடைய வீடு அக்கரையில் இருக்க,அவனுடைய உடலை அக்கரையில் சேர்கக,யாருக்கும் படகை இயக்க தெரியவில்லை.

எல்லோரும் செய்வது அறியாது காதது இருக்க,பேரன் கந்தன் அங்கு வந்து சேர,கந்தன் தாத்தாவின் உடலை தூக்கி படகில் கிடத்தி,மெதுவாக படகை இயக்கிக் அக்கறை கொண்டு சேர்த்து இறுதி சடங்கை செய்து முடித்தான்.இப்படி மூன்று நாட்க்கள் ஓட,வந்த காரியம் முடிந்தது என்று ஊருக்கு கிளம்பினான்.

படகில் ஏறி அக்கறை சென்று அடைந்தான்.இறங்கிய பிறகு தான் 

அவனுக்கு புரிந்தது,இனி படகை இயக்க யாரும் இல்லை என்று.

இங்குள்ள மக்கள் என்ன செய்வார்கள் என்று மனம் வருந்தி

ஊருக்கு போகும் திட்டத்தை கை

விட்டான்.இப்போது அவன் தான் அந்த பட கை ஒட்டி கொண்டு இருக்கிறான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract