Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

நண்பனே

நண்பனே

2 mins
402


 கவின்,சங்கர் மற்றும் பிரியன் ஆகியோர் சிறுவயது முதல் நல்ல நண்பர்களாய் இருந்து வந்தனர்.

கிரிக்கெட் என்பது அவர்களை இன்னும் நிறைய பேச வைத்தது.

சங்கரின் அப்பா அவர் மூவரையும் கிரிக்கெட் விளையாட கூட்டி போவார்.

அவரே பந்து வீசி,பேட் பிடிக்க மூவருக்கும் சிறிது கற்று தந்து அவர்களுடன் சேர்ந்து விளையாடுவார்.

பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பின் சங்கர் வேறு பள்ளிக்கு சென்று விடுகிறான்.

கவின் மற்றும் பிரியன் வேறு வேறு வகுப்பு பிரிவில் படித்தாலும் பள்ளியில் மீதி நேரம் ஒன்றாக இருந்தனர்.

இதனால் சங்கர் அந்த நட்பு வட்டத்தில் சற்று இல்லாதது போல் உணர்ந்தான்ஆனால் கவினும்,பிரியனும் ஒன்றாக இருந்ததால் சங்கர் இல்லாதது போல் தெரிரவில்லை.

கவின் இந்த நேரம் அவன் வகுப்பில் படித்து வந்த வசந்தி மீது ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது.

இதை பற்றி கவின் சங்கர் மற்றும் பிரியனிடம் கிரிக்கெட் வியையாடும் போது கூற இருவரும் அவனை டேய் என கேட்டபடி ஓட்ட ஆரம்பித்தனர்.

கவின் இந்த விஷயத்தை பற்றி அவன் பள்ளி நண்பர்களுக்கு கூற சங்கர் வார்ன் செய்தான்.

பிரியன் பல சினிமாக்களில் வந்த காதல் கதைகளை கூறி கவின் மனதில் ஆசையை வளர்த்தான், அவளிடம் சீக்கிரம் சொல்லி விடு என்றான்.

கவின் ஒரு நாள் வசந்தியிடம் காதல் சொல்ல போகிறேன் என கூற சங்கர் வேண்டாம் அவள் வீட்டில் சொல்வாள் இந்த வயசில் தேவையில்லை என கூற கவின் சரி என வெறும் வாய் வார்த்தைக்கு கூறிவிட்டு வந்தான்.

அடுத்த நாள் பிரியனை பள்ளிக்கு சீக்கிரமே அழைத்து சென்றான்

வசந்தி சீக்கிரம் வந்து அகத்தா கிறிஷ்டியின் "அண்ட் தெர் வெர் நன்" புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள்.

பிரியனை அங்கே நிற்க சொல்லி விட்டு உள்ளே வந்து வசந்தியிடம் தான் அவள் வைத்திருந்த காதல் பற்றி கூற வசந்தி மூடி வைத்து விட்டு முகத்தில் அதிர்ச்சியுடன் எழுந்து சென்றாள்.

திகில் அடைந்த கவின் பிரியனை அழைக்க அவன் அங்கு இல்லை.

விசயம் வகுப்பு ஆசிரியர் மற்றும் கவின் வீட்டை அடைய கவினின் அப்பா பள்ளிக்கு வந்து பள்ளி முதல்வருக்கு நடந்த தவறுக்கு மன்னிப்பும்,இனிமேல் இப்படி நடக்காது என கையெழுத்து இட்டு லெட்டர் குடுத்து விட்டு வந்தார்.

வீட்டிற்கு சென்ற கவின் அம்மாவிடம் ரத்தம் வரும் அளவுக்கு அடி வாங்கினான்.

அவன் அப்பா அவனிடம் பேசுவதையே விட்டு விட்டார்.

கவின் சங்கரிடம் இதை பற்றி கூற சங்கர் கவினின் வீட்டிற்கு சென்று அவன் அப்பா,அம்மாவிடம் கவினை நான் பார்த்து கொள்கிறேன்,அவன் தவறுக்கு மிகவும் வருந்துகிறான் என சொல்லி பேசி பார்த்தான்.

சங்கரின் தோளில் கை வைத்து விட்டு கவினின் அப்பா அங்கிருந்து சென்றார்.

பின்பு கவினின் வாழ்க்கையில் சங்கரின் நட்பு முக்கிய பங்கு வகித்தது.

கெம்பள் இன்டர்வியூவில் தேர்வாகி வெளியே வந்த கவின் சங்கர் அன்று தனக்கு செய்த உதவியை நினைத்து பார்த்தபடி விடுதிக்கு சென்றான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract