Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

நழுவிய சந்தர்ப்பம்

நழுவிய சந்தர்ப்பம்

2 mins
221



நழுவிய சந்தர்ப்பம்.

கணபதிக்கு,விநாயகர் அருள் நிறைய கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு கணபதி என்று பெயர் வைத்தனர் அவனது பெற்றோர்கள்.

அவன் வணிகவியல் இளங்கலை பட்டம் வாங்கி இருந்தும் அவனுக்கு ஓரு சரியான வேலை,அதாவது படிப்புக்கு ஏற்ற வகையில் வேலை கிடைக்கவில்லை.

அவனை சொல்லி பயன் இல்லை.பெற்றோருக்கு ஒரே மகன்.விவசாயம் செய்ய சிறிதளவு நிலம்,தண்ணீர் வசதியுடன்.இரு போகம் நெல் விளையும்.அதுவே அந்த குடும்பத்திற்கு போதுமானது.


அதை காரணம் காட்டி அவனது பெற்றோர்கள்,வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டாம்.உள்ளூரில் கிடைக்கும் வேலையை செய்தால் போதும் என்று கூறி விட்டார்.அதனால் அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் நடத்தும் வட்டிக்கு கடன் கொடுக்கும்,நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.அவரிடம் இவனை வேலைக்கு சேர்த்து விட்டார்.

அந்த நிறுவனத்தை நடத்தி வந்த மணியும் இவனுக்கு மாதம் பதினையாயிறம் சம்பளம் கொடுக்க,அது அவனுக்கு போதுமானதாக இருந்தது.அதற்கு சம்மதித்து வேலை செய்து வந்தான்.

ஆனால் அவனுக்கு மணியிடம் பிடிக்காத விஷயம் கண்டிப்பும் கராரும்.ஏழை விவசாயி கடன் கேட்டு வந்தால் கூட,அவர் நிலையை புரிந்து கொண்டு வட்டியை குறைக்க மாட்டார்,வட்டி வராவிட்டால்,வட்டிக்கு வட்டி வசூல் செய்து விடுவார்.மக்கள் அவரிடம் வந்து கெஞ்சுவதை,மன்றாடுவதை பார்க்க அவனுக்கு துக்கமாக இருக்கும்.

இவருக்கென்ன,குறைத்து வாங்கினால் இவர் ஏழை ஆகி விடுவாரா என்று நினைப்பான்.

மணிக்கு ,ஒரே மகன்,கல்லூரியில்

படிக்கிறான்.மணிக்கு மனைவி உயிருடன் இல்லை.அதனால் செல்ல மகன் வந்து அப்பாவிடம் செலவுக்கு பணம் கேட்கும் போது,பணப்பெட்டியை திறந்து அவனை எடுத்து கொள்ள சொல்வார்.அவனும் அள்ளி கொண்டு சென்று ஒரே நாளில் செலவு செய்து விட்டு அடுத்த நாளும் வந்து நிற்பான்.

அன்று அப்படி வாங்கி கொண்டு போனவன் வீடு திரும்பவில்லை.இருசக்கர வாகன விபத்தில் உயிர் இழந்து விட்டான்.

இதை அறிந்த மணிக்கு உயிர் போகாத குறை தான்.அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.என்ன செய்தும் பலன் இல்லை.மகன் இறந்தது இறந்தது தான்.

துக்கம் தாளாமல் சில நாட்கள் நிதி நிறுவனத்திற்கு வரவில்லை.ஒரு நாள் வந்து கணபதியை கூப்பிட்டு,தான் காசிக்கு செல்வதாகவும்,திரும்பி இங்கு வர மாட்டேன். இந்த நிறுவனத்தை நீயே வைத்து நடத்தி கொள்,இனிமேல் இது உனக்கு சொந்தம் என்றார்.கணபதி சற்று யோசித்து விட்டு, ஐய்யா இது எனக்கு வேண்டாம்,இது ஒரு பாபமான தொழில் ஆக தெரிகிறது.கடும் வட்டி வாங்கி,மக்களை துன்புறுத்திய காரணம் தான் மனைவி மகனை உங்களிடம் இருந்து ஆண்டவன் பிரித்து விட்டான்.இது நாள் வரை சம்பளம் வாங்கியதே ஏழை விவசாயி கண்ணீருடன் கொடுத்த பணம்.அதை தொடும் போது கை நடுக்கம் ஏற்படுகிறது.இதை உங்கள் உறவினர் யாருக்காவது கொடுத்து விடுங்கள்.இன்று முதல் நான் பணியில் இருந்து விடை பெற்று கொள்கிறேன் என்று கூறி விட்டு,பெட்டி சாவி,கணக்கு புத்தகம் இரண்டையும் கொடுத்து விட்டு வீடு திரும்பினான்.

அப்பா அவனிடம் சீக்கிரம் வீடு வந்த காரணத்தை கேட்டு அறிய,அவனும் விவரம் சொல்ல,மகனே,நீ செய்த காரியம் பாராட்ட பட வேண்டியது.அந்த பாவ ப் பட்ட பணம் நமக்கு வேண்டாம். நீ எடுத்த முடிவு மிகவும் சரி.இனி உன் மனதிற்கு பிடித்த வேலையை செய்து பிழைத்து கொள் என்று கூற அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.


Rate this content
Log in

Similar tamil story from Abstract