Delphiya Nancy

Drama Horror

4.5  

Delphiya Nancy

Drama Horror

நல்லிரவுப் பேய்கள்

நல்லிரவுப் பேய்கள்

2 mins
1.7K


 எங்க ஊருல ரொம்ப நாளா ராத்திரில பேய் நடமாட்டம் இருக்கு, யாரும் ராத்திரில தனியா வெளில போகாதிங்கன்னு சொல்லுவாங்க...

பேய்கத கேக்க யாருக்குதான் பிடிக்காது? பெரியவங்க சொல்ற கதையெல்லாம்

ம்ம் ..ம்ம்.. -னு கேட்டுட்டு அப்பறம் பகல்ல தனியா போகக்கூட பயமா இருக்கும்.


கதை-1

    பேய் அவங்க பிரண்டு மாதிரி வந்து எழுப்பி வேலைக்கு கூட்டிட்டு போகுமாம். ஆத்துல தண்ணி இறைச்சுக்கிட்டே இருப்பாங்களாம் வயலுக்கு தண்ணி ஏறவே ஏறாதாம் ,அப்பறம் அது பேய்னு தெரிஞ்சு வேட்டிய எடுத்து மண்வெட்டில தலப்பா மாதிரி கட்டி ஆள் இருக்கமாதிரி செட் பன்னிட்டு ஓடி வந்துருவாங்கலாம்.


கதை-2

        வேலை செய்யிற காட்டுல " ஏய் நாளைக்கு நான் கல்யாணத்துக்குப் போறேன் நாளைக்கு வீட்டுக்கு வந்து கம்மல் ,ஜெயின்

வாங்கிகிறேன் கயல்விழி" , "சரி கனி வா தறேன் "-னு  பேசிக்கிட்டாங்கலாம்.

       அடுத்த நாள் அவங்க சொன்ன மாதிரியே போய் கேட்டாங்கலாம், அவங்களும் நகைய குடுத்துவிட்டாங்கலாம்.


கொஞ்ச நேரத்துல கயல் ,கயல் -னு யாரோ எழுப்ப, போய் பாத்தா, கயல் சீக்கிரம் நகைய குடு லேட் ஆச்சுன்னு கனி கேட்டாளாம். ஏய் இப்பதானே குடுத்தேன் என்ன கிண்டல் பன்றியானு கயல் சண்டை போட்டாளாம்.



      அப்பறம் தான் புரிஞ்சுச்சாம் அது பேயோட வேலைன்னு. அப்பறம் எல்லாறும் ஓடி போய் பாத்தா அவங்க நகையெல்லாம் சுடுகாட்டு நடுவுல வச்சு பேய்ங்க எல்லாம் சுத்தி சுத்தி கும்மி அடிச்சுக்கிட்டு இருந்துச்சாம். எல்லாரும் சேர்ந்து கத்திக்கிட்டே ஓடிபோய் நகைய எடுத்துட்டு வந்துட்டாங்கலாம்.


கதை-3

     

          ஒருநாள் ராத்திரி குப்புசாமி மீன் புடிக்க  நண்பர்களோட போனான்.அப்ப ஒரு மீன் ரொம்ப பெருசா இருந்துச்சு, நமக்கு அதிஸ்டம் தான்னு கத்தியால குத்தி பிடிக்க முயற்சி செஞ்சான் குப்புசாமி. ஆனா அந்த மீன் நழுவி நழுவி போக அவன் பின்தொடந்து சென்றான். அவனையும் அறியாமல் வெகு தூரம் போய்விட்டான்.



திடீரென அந்த மீன் அகோர உருவமா எழுந்து நிக்க , அவன் அலரி அடுச்சுக்கிட்டு ஓடி வந்து பாத்தா நண்பர்கள் யாரும் இல்லை. ஐயோ கடவுளே என்ன காப்பாத்து காப்பாத்துனு வேண்டிக்கிட்டே தல தெறிக்க ஓடி வந்து வீடு சேர்ந்தான்.


     மறுநாள் அவனுக்கு காய்ச்சல் வந்து உடம்புக்கு முடியாம படுத்துருந்தான். அவன் நண்பர்கள் வந்து அவன பார்த்தாங்க. குப்புசாமி நடுங்கிகிட்டே நடந்ததையெல்லாம் சொல்லிட்டு, நீங்கலாம் என்ன விட்டுட்டு எங்கடா போனிங்க? என கேட்க,

ஒரு மீனும் மாட்டல வாங்க போலாம்னு நீதானேடா கூப்பிட்ட அப்பறம் எப்படி தனியா போன ? என கேட்டனர். நானா? நா அப்புடி சொல்லவே இல்லையே டா -னு குப்புசாமி சொன்னான்.


அப்ப நம்ம கூட பேசிக்கிட்டு வந்தது யாரு ? என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அடுத்த நாள் பாத்தா எல்லாருக்கும் குளிர் ஜீரம், இனி ராத்திரில மீன் பிடிக்க எவன் போவேன்?


    நம்ம ஆள் குப்புசாமி மட்டும் போவான் ஏன்னா அவன்தான் இந்த புரளிய கிளப்பிவிட்டது. அவன் வெகு தூரத்துல போனப்ப ஒரு குட்டைய பாத்தான் அது முழுக்க பெரிய பெரிய மீன்கள் இருந்துச்சு. அத அவன் மட்டுமே பிடிச்சு வித்தா நல்ல லாபம் கிடைக்கும்னு மனசுல நினைச்சுட்டு , மீன் ஒன்னும் இல்ல வாங்க வீட்டுக்குப் போலாம்னு அவன் நண்பர்கள கூட்டிட்டு வந்துட்டு, மறுநாள் காய்ச்சல், பேய்னு உடான்ஸ் விட்ருக்கான். 


கதை முடிந்தது, குப்புசாமியின் கதை மட்டும் தொடரும்.


   இது மாதிரி கதையெல்லாம் கேட்டுட்டு போனா போறவழி எல்லாம் எதோ பின்னாடி வரமாதிரியே தோனும். இப்போ அதெல்லாம் நெனச்சா சிரிப்புதான் வருது.


நம் முன்னோர்கள் நல்ல கதை சொல்வாங்கன்னு தெரியும், ஆனா நல்லா கத கதயா விடுவாங்கன்னு வளர்ந்த பிறகுதான் புரியுது....

   



Rate this content
Log in

Similar tamil story from Drama