நிறம்
நிறம்
அகிலன் பிறக்கும் போது சிவப்பாக அழகாக எல்லோரும் கவரும் வண்ணம் இருந்தான்.
யார் பார்த்தாலுமே தூக்கி வைத்து
கொள்வார்கள்.
வயது ஏற அழகும் கூடியது.போட்டி போட்டு அவனுக்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.
ஒரு பணக்கார பெண்ணும் இவன் அழகை விரும்பி திருமணம் செய்து கொள்ள,வாழ்க்கை இனிமையாக போய் கொண்டு இருந்தது.
திடீர் என்று அவனுக்கு பெயர் தெரியாத வியாதி அவனை தாக்க
அவனுடைய சிவந்த தோல் கொப்பளித்து புண்ணாகி தோல
முழுவதும் சுருங்க தொடங்கியது.
மூன்று மாதத்தில் ஒரு முதியவன் போல தோற்றம் வந்து விட்டது.
கண் கன்னம் முகம் கை கால்
எல்லாமே சுருங்கி கிழவன் ஆகி விட,அவனை விரும்பிய அத்தனை பேரும் வெறுக்க தொடங்கினர்.
அருகாமையில் வரவே தயங்கி
சாப்பாடு கொடுக்க கூட யாரும் வரவில்லை.
அதை நினைத்து அவன் படுத்த படுக்கையாகி ஒரு நாள் இறந்தும் விட்டான்.அந்த சோகம் தாளாமல் அவன் மனைவியும் இறந்து விட்டார்.
