saravanan Periannan

Romance Tragedy Classics

5.0  

saravanan Periannan

Romance Tragedy Classics

நிகழுமோ சந்திப்பு

நிகழுமோ சந்திப்பு

2 mins
342


சரவணன் தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் மேனேஜர் மேனன் அவனிடம் டீம் பிராஜெக்ட் ஃபைலை குடுத்தார்.


அதில் அவன் வாசித்த பெயர்கள்

கெவின்

விக்னேஷ்

ஷ்யாம்

அபர்ணா

அபிநயா


அபிநயா என்ற பெயரை முணுமுணுத்த உடன் அவன் மனதின் நினைவுகள் சுனாமியின் போது கடல் பின்வாங்குவது போல் பின்நோக்கி சென்று அந்த முகத்தை அவன் மட்டும் காணும்படி செய்தது.


சரவணன் கண்கள் கண்ணீர் துளிர்க்க ஆரம்பிக்க அவன் கண்களை துடைத்து விட்டு டீ குடிக்க கேன்டீன் சென்றான்.


சரவணன் கல்லூரியின் போது சந்தித்த பெண் தான் அபிநயா.


இருவருடைய நட்பும் ஒரு பரீட்டை ஹாலில் தான் ஆரம்பமானது.


சரவணன் அமரும் இடத்திற்கு பக்கத்தில் தான் அபிநயா அமர்வாள்.


இருவரும் பேச ஆரம்பித்தது ஒரு பேனாவால் தான்.


சரவணன் பேனா மை லீக் அடிக்க அபிநயா தன்னுடைய பேனாவை தந்தாள் சரவணனுக்கு.


அபிநயா ஒரு நாள் காலேஜ் பூங்கா பெஞ்ச்சில் அமர்ந்து படித்து கொண்டிருக்க சரவணன் அபிநயாவிடம் வாங்கிய பேனாவை திருப்பி கொடுக்க சென்றான்.


அபிநயாவிடம் பேனாவை குடுத்து விட்டு என்ன ஆச்சு உங்க முகம் பதட்டமாக இருக்கே என்று கேட்டான்.


அபிநயா இந்த செப்டர் புரியவில்லை என்று கூற சரவணன் இது நான் படிச்சிருக்கேன் என்று கூறி அவளுக்கு சொல்லி கொடுத்தான்.


அபிநயாவும்,சரவணனும் காலேஜில் ஒரு நேரமாவது சந்தித்து பேசுவதை வழக்கமாக்கினர்.


நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு,புரிதல் வலுவடைந்தது.


இது நட்பா,காதலா என்று சரவணன்,அபிநயா இருவரும் குழம்பி இருந்தனர்.


ஒரு மாத காலம்,கேம்பஸ் இன்டர்வியூ காரணமாக சரவணனும் அபிநயாவும் பேசிக்கொள்ளவில்லை.


காலேஜில் கடைசி செமஸ்டர் முடிந்த பிறகு சரவணன், அபிநயா இருவரும் சந்திக்கவில்லை.


அபிநயா சரவணன் பின்னால் நடந்து வந்து பேச முயற்சி செய்தாள்.


சரவணன் அவளை பார்த்தும் பேசமால் வீட்டுக்கு கிளம்பினான்.


பின் ஒரு நாள் அவளை சந்திக்காமல் போய் விடுவோமோ என எண்ணி சென்றான்.


"ஆனால் காலம் ஒரு விந்தையான விசயம்.


பிடித்த விசயம்,பிடிக்காத விசயம் இரண்டையுமே காலம் பாரபட்சமின்றி கொடுக்கும்.


நம் மகிழ்வோமோ,அழுவோமோ குடுத்தது குடுத்தது தான் என நீதிபதி போல் செயல்படுவது தான் காலம்."


காலேஜ் வந்து டீசி வாங்கும்போது சந்திக்கலாம் என எண்ணிய சரவணன் அதிர்ச்சி அடைந்தான்.



காரணம் அபிநயாவின் தோழி கூறியது,"அபிநயா அவங்க அப்பா அவளுக்கு டீசி வாங்கிட்டு தீடீரென்று அவர்கள் பூர்வீக ஊருக்கே சென்று விட்டார்கள்."



நீங்கள் நினைப்பது போல் அது இன்றைய அதிநவீன தொழில்நுட்பக் காலம் அல்ல.


பட்டன் போன்கள்,கடிதங்கள் கோலோச்சிய காலம்.



சரவணன் இடிந்து போய் அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தான்.


சரவணன் அவளை இனி அவளை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என புரிந்த கொண்டான்.


தன்னையும், காலத்தையும் தீட்டி தீர்த்தான்.


அபிநயா என்ற பெயரை கேட்டால் அங்கு சென்று தேடுவான்.


நண்பர்களிடம் விசாரித்தேன் ஆனால் அந்த பூர்விக ஊர் ஒருவருக்கு கூட தெரியவில்லை.


சார் டீ என்று சப்ளையர் கூறியபோது நிகழ்காலம் வந்தடைந்தான் சரவணன்.


டீ அருந்தும் போது அபிநயா என்னும் குரல் கேட்டது.


டீ குடித்த சரவணன் திரும்பி பார்க்கவில்லை ஏனெனில் அபிநயாவுக்கான தேடல் அவனுக்கு எல்லையற்ற கோபம் மற்றும் எல்லையற்ற கவலையை அவனுக்கு குடுத்தது.


சரவணன்‌ அந்த நினைவுகளை மறக்க முயற்சி செய்த போதிலும் அந்த நினைவுகள் மேலும் மேலும் பசுமரத்தாணி போல் இறங்கின.


சரவணன் காலியான டீ கப்பை பார்த்துக் கொண்டே யோசித்தான்.


அபிநயாவை இனி தேடுவோமா,வேண்டாமா.


அவளும் நம்மை தேடுவாளா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் மேனேஜர் மேனன் அவன் பெயரை உரக்க கத்தினார்.


சரவணன் சிரித்தப்படி கேன்டீனை விட்டு சென்றான்.



Rate this content
Log in

Similar tamil story from Romance