நாய்
நாய்
மூர்த்திக்கு நாய் வளர்ப்பு என்றால் மிகவும் பிடிக்கும் உள்நாடு வெளிநாடு ஜாதி நாய்கள் அவர் வளர்த்து வந்தார்.
ஒரு பண்ணையே வைத்து வளர்த்து வந்தார்.குட்டி போட்டால் அதை நல்ல விலைக்கு விற்று வருமானமும் ஈட்டி வந்தார்.
தன்னுடைய அரிசி வியாபாரத்திற்கு வீட்டிற்க்கு பக்கத்தில் ஒரு அரிசி ஆலையும் நிறுவி அதை நிர்வகித்து வந்தார்.
அறுவடை காலம் வரும் போது விவசாயிகளிடம் நேரில் நெல்லை கொள்முதல் செய்து,கொடோனில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைப்பது வழக்கம்.அது ஒரு இருபத்தி அடி உயரம் வரை மூட்டைகள் அடிக்கி வைப்பது வழக்கம்.
அந்த அரிசி ஆலையில் ஒரு நாட்டு நாயியும் காவலுக்கு வளர்த்தி வந்தார்.சில நேரங்களில் அவர் பின்னால் வீடு வரை வந்து மற்ற நாய்களுக்கு போடும் உணவில் சிறிது இந்த நாய்க்கும் கிடைக்கும்,அதை சாப்பிட்டு விட்டு திரும்ப அரிசி ஆலைக்கு வந்து விடும்.
மூர்த்தி கொடோன் உள்ளே செல்லும் போது கூடவே சென்று எலி இருந்தால் அதை துரத்தி பிடிக்கும்.
அப்படி ஒரு நாள் மூர்த்தி உள்ளே சென்று மூட்டைகளை எண்ணி கொண்டு இருக்க,மூட்டைகள் சரிந்த் மூர்த்தி மீது விழுந்து மூர்த்தி வெளியில் வர முடியாமல் அடியில் சிக்கி கொண்டார்.இதை கவனித்த அந்த நாய் வேகமாக வெளியில் ஓடி சென்று,அங்கு வேலை செய்தவர்களை பார்த்து குறைக்கவும் கொடவுன் நோக்கி ஓடுவதும் திரும்பி வந்து குறைப்பதும் கண்ட வேலை ஆட்கள் உள்ளே என்னவென்று எட்டி பார்க்க
மூர்த்தி முட்டைகளுக்கு அடியில் சிக்கி கொண்டு வெளியில் வர முடியாமல் தவிப்பதை கண்டு உடனே ஓடி மூட்டைகளை நீக்கி அவனை காப்பாற்றினார்கள்.நாயின் விசுவாசத்தை கண்ட மூர்த்தி அதற்கு பிறகு மூன்று வேலை சாப்பாடு தவறாமல் கொடுத்து,அந்த நாயை நல்ல முறையில் கவனித்து கொண்டார்.
