Saravanan P

Abstract Drama Romance

5  

Saravanan P

Abstract Drama Romance

முத்துமாலை

முத்துமாலை

2 mins
456


அமைச்சரின் மகள் வளர்மதி தனது வீட்டில் இருந்தபடி படித்து வந்தாள்.


அவளது அப்பாவே அவளுக்கு ஆசானாக இருந்தார்.


ஒரு நாள் வளர்மதி கோயில் விழாவுக்கு சென்ற நேரம்,அங்கு ஒரு புல்லாங்குழல் இசையை கேட்டு மனம் உருகி போகிறாள்.


ஆனால் அந்த கலைஞனை காணாது அவள் கண்கள் தேடின.


விழாவிற்கு அவள் அடுத்தடுத்த நாட்கள் வந்தாலும் அவளால் அந்த இசை கலைஞனை கண்டுபிடிக்க இயலவில்லை.


ஒருவழியாக தன் ஆட்களை அனுப்பி அந்த கலைஞனை கண்டுபிடிக்கிறாள்.


ஆனால் அங்கு இருந்தது ஒரு பதினொறு வயது சிறுவன்.


நீயா? இவ்வளவு நாட்கள் இங்கு வாசித்து கொண்டிருந்தாய் என வளர்மதி சற்று அதட்டி கேட்க அந்த சிறுவன் பயந்து போய் இல்லை தேவி,இல்லை என் அண்ணன் இத்தனை நாட்கள் வாசித்தார் அவர் இன்று முக்கிய வேலையாக என்னை இங்கு விட்டு விட்டு வெளியூர் சென்றுள்ளார்.


ஏன்? என்று வளர்மதி கேட்க எங்களை சிறு வயதில் தத்தெடுத்து வளர்த்து இசை கலை கற்றுக்கொடுத்த குருவிற்கு வைத்தியம் செய்ய பொருள் சேர்க்கிறோம் என கூறினான்.


வளர்மதி தனது முத்துமாலை ஒன்றையும் சிறிது பொற்காசுகளையும் தந்து சிறுவனிடம் பொற்காசுகளை வைத்தியத்திற்கும்,முத்துமாலை எடுத்து கொண்டு அவனது அண்ணனை தன்னை வந்து சந்திக்கும்படி கூறினாள்.


இரு வாரங்கள் சென்றன,அவள் மனதை கொள்ளை கொண்ட அந்த இசை கலைஞன்‌ முத்து மாலையுடன் அங்கு வரவில்லை மாறாக அவர்கள் வீட்டு தடாகத்தில் வளர்ந்து வந்த அன்னப்பறவை ஒன்று இந்த முத்துமாலையை கொண்டு வந்து வளர்மதி முன் நின்றது.


 

வளர்மதி அதிர்ந்து போய் அந்த அன்னப்பறவையிடம் அதன் மொழியில் முத்துமாலையை எங்கு இருந்து கொண்டு வந்தாய்? என கேட்டாள்.


அந்த அன்னப்பறவை மெல்ல பறக்க ஆரம்பிக்க அதன் பின்னே ஓடினாள் வளர்மதி.


அந்த பறவை அவர்கள் நாட்டின் நடுவே இருந்த காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தால் ஒரு வாலிபன் ரத்தம் சொட்ட காயங்களுடன் கிடந்தான்.


வளர்மதி அவனை அமர வைத்து அவனை மெல்ல தோளில் தாங்கியபடி தன் வீட்டின் ரகசிய வழியாக அழைத்து வந்து முதலுதவி செய்தாள்.


அந்த வாலிபன் பேச கூட முடியாமல் சிரமப்பட்டான்,ஆதலால்,அவன் சரியாகும் வரை காதலை பற்றி பேசாமல் அவனுக்கு தேவையான உதவிகளை செய்தாள்.


நன்றாக தேறிய வாலிபனிடம், அவன் இசையில் மயங்கியது, அவனது நன்றி மறக்காத தன்மை கேட்டு அவனது முகம் கூட பார்க்காமல் தான் காதல் கொண்டது என பேச அந்த வாலிபர் அதிர்ந்து போய் மெத்தையில் இருந்து நகர்ந்து நின்று "தேவி,என்ன பேசுகிறீர்கள்,தங்களுடைய இந்த உன்னத காதலுக்கு சொந்தக்காரன் நான் இல்லை,அந்த வாலிபன் நிச்சயம் தங்களை தேடி வந்து கொண்டிருப்பான்" என கூறினான்.


வளர்மதி அதிர்ந்து போய் தாங்கள் என கேட்க,"நான் ஒரு திருடன் தேவி,தாங்கள் காதலித்த நபரை தாக்கி அந்த முத்துமாலையை திருடி வந்தேன்,வழியில் சில காட்டு மிருகத்திடம் சிக்கி சாகும் தருவாயில் கிடந்தேன்.


நீங்கள் எனக்கு உயிர் அளித்து உள்ளீர்கள்" என கூறினான் திருடன்.


உனக்கு நல்ல மனது என வளர்மதி கூறி,"நீ நினைத்திருந்தால் என்னிடம் ஆம் நான் தான் இசை கலைஞன் என கூறி உன் முகத்தை என் காதலன் முகமாக மாற்றி இருக்கலாம்" என கூறினாள்.


திருடன் உடனே "அன்பை ஏமாற்றி பெறவும்,திருடவும் இயலும் ஆனால் அது அதை ஏமாற்றி அல்லது திருடி பெறுபவருக்கு முழு மகிழ்ச்சியை தராது" என கூறி,எனக்கு விடை கொடுங்கள் அம்மா என கேட்க வளர்மதி போய் வாருங்கள் என கூறினாள்.


திருடன் அவளை கை கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து செல்ல வளர்மதி ரகசிய வழியை காட்ட அவனை பின் தொடர்ந்தாள்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract