முழுமை
முழுமை
அந்த கட்டிடம் வான் உயரத்தில் கட்டி முடிக்க பட்டது.அதன் திறப்பு விழா கோலாகலமாக துவங்கியது.அதன் பழுப்பு நிற தோற்றம் கம்பீரமாக தோன்றியது.
இருந்தாலும் ஏதோ ஒன்று முழுமை பெறாமல் இருந்தது விலை உயர்ந்த சிற்பிகள் பல சிலைகளை நிறுவி இருந்தார்கள்.
ஆனாலும் அதன் உரிமையாளர் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தார்.திறப்பு விழா வில் எடுத்த புகை படங்கள் சுவரை அலங்கரித்து கொண்டு இருந்தது.
பல் முக்கிய பிரபலங்களின் படங்கள் போட்டி போட்டு சுவரை நிறைத்து கொண்டு இருந்தது
சுவரின் நடுவே ஒரு பெரிய வெற்று இடம் இருந்தது அதில் எந்த அலங்கார பொருளும் இல்லாதது ஒரு குறையாக தெரிந்தது உரிமையாளர், தன் செயலரை அழைத்து,இந்த கட்டிட திறப்பாளர் யார் என்று கேட்க,அந்த கட்டிடத்தில் வேலை செய்த கொத்தனார் என்றார் அந்த புகை படத்தை பெரிய அளவில்
அந்த வெற்று இடத்தில் மாட்ட சொன்னார்.அவர் தயங்கிய படி,இவ்வளவு பிரபலங்கள் படத்தின் நடுவே,அந்த படம் பொருத்தமாக இருக்குமா என்று கேட்க,உரிமையாளர்,அந்த கொத்தனார் எப்போதும் கொத்தனார் ஆக இருப்பார்.இந்த பிரபலங்கள்,ஆட்சியும்,காட்சியும் மாறும் போது இங்கு இருக்க மாட்டார்கள் .கொத்தனார் படம் இந்த கட்டிடத்திற்கு முழுமையை தரும்.
உடனே செய் என்று கட்டளை இட்டார்
