Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

முகம் மூடி

முகம் மூடி

1 min
356


நிவேதா அன்று தன் கல்லூரி வகுப்புக்கு வரும்போது அவளது நண்பர்களின் பார்வைகள் அவளை விசித்தரமாக உற்று நோக்கியது.

அவளுக்கு பிடிக்காத கலரில் ஒரு டிரஸ்,ஹேர் ஸ்டைல் என வித்தியாசங்கள் தெரிந்தது.

நிவேதாவுடைய பேச்சு அவள் நண்பர்களான ஆர்ததி,சுபிக்ஷா ஆகியோரை சற்று குழப்பியது,நேற்று மாலை வரை ஹாஸ்டலில் நார்மலாக இருந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என கேள்விகள் அவர்கள் தலையில் ஓடியது.

நிவேதா அன்று அனைவரிடமும் பேச முயற்ச்சித்தாள்,அவளை பிடிக்காத ஆட்களின் பேச்சின் நடுவே வலுக்கட்டாயமாக நுழைந்து பேசினாள்.

அன்று அவள் ஹாஸ்டல் நடந்து செல்லும் போது அவள் மனதில் பல வகையான எண்ண ஓட்டங்கள் வெளிபட்டது.

"நீ மாறுனது சரி தான்,ஆனா அது உனக்காக இல்லை,யாரையோ இம்பரஸ் பண்ண நீ வலுகட்டாயமா உனக்கு பிடிக்காத விஷயங்களை திணிச்சுக்குற,என்ன ஆச்சு?" 

இந்த எண்ணத்துக்கு பதில் அவள் மனதில் ஒரு படமாக விரிந்தது.

நிவேதா அவள் வகுப்பு மாணவன் கெவினிடம் தன் மனதை கொடுத்திருந்தாள்.

அவனுக்கு பிடித்த விஷயங்கள் தனக்கு பிடிக்காது என்றாலும் அவனுக்காக அதை தன் மனதில்,செயலில் திணித்து செய்ய முடிவெடுத்தாள்.

இதனால் அவள் பலவாறான கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளானள்.

இதில் மிகப்பெரிய வலி அவள் காதலிக்கும் கெவின் கூட மற்றவர்களுடன் சேர்ந்து அவளை கேலி,கிண்டல் செய்தது அவள் மனதை மிகவும் வறுத்தியது.

ஹாஸ்டல் வந்த நிவேதா தனது இயல்பான நிலைக்கு திரும்பினாள்,தலைமுடி படிய சீவனாள்,தனக்கு பிடிதத ஆடைக்கு மாறினாள்,தன்னுடைய பாணியில். ஹாஸ்டல் தோழிகளிடம் பேசினாள்.

அவள் மனதில் இப்பொழுது தோன்றியது "இவ்வளவு என் முகத்துல இருந்தது ஒரு மாய மூகமூடி,அத நல்ல வேளை தூக்கி எறிஞ்சிட்டேன்" என்பதுதான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract