மத குரு
மத குரு
அந்த ஊர் மக்கள் வணங்குவது அந்த மத குரு வை தான்.
ஒவ்வொரு குடும்பமும் அவரது அனுமதியும் ஆசியும் வாங்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் ஒருத்தன் மட்டும் அவரை மதிப்பது இல்லை.
தன்னுடைய உழைப்பை நம்பி வாழும் அவன்,அவர் என்ன கடவுளா என்று கேள்வி கேட்பான்.
அந்த மத குரு அவனை கண்டால் சற்று ஒதுங்கி தான் இருப்பார்.
நேரில் இருந்தால்,கேள்வி கேட்டு அவரை மடக்குவான்.
அவர் சொல்லும் சமாதானம் மற்றவர்கள் கேட்டு கொள்வார்கள்
ஆனால் அவன் அதற்கு செவி சாய்க்க மாட்டான்.
அவனுக்கு கடவுள் நம்பிக்கை
உண்டு.ஆனால் கடவுள் வேஷஅம் போடும் மனிதனை நம்ப மாட்டான்.
அதை மக்களுக்கு எடுத்து சொல்வான்,ஆனால் அவன் பேச்சை யாரும் கேட்பது இல்லை.
ஒருத்தர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது மக்கள் அவரிடம் உயிரை காப்பாற்ற சொல்லி அது அவரால் முடியவில்லை.
அப்போது தான் அவர் கடவுள் இல்லை என்று மக்களுக்கு புரிந்தது.
