மழைக்காலம்
மழைக்காலம்
பிருந்தா நிறை மாத கர்ப்பிணி.
முதல் பிரசவம் கூட.அப்பா அம்மா நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்
கிறார்கள்.பசு மாடு வைத்து பால் கறந்து கொடுத்து அன்றாட வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதனால் மகள் பிருந்தா வை அடிக்கடி வந்து பார்க்க முடியாது,
இருக்கிற கொஞ்ச நிலத்தில் பாதியை விற்று மகளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
தவறாமல் பண்டிகைக்கு அழைத்து விடுவார்கள்.மற்ற நேரங்களில் போனில் பேசிக்கொள்வார்கள்.
கிராமத்தில் பிரசவம் பார்க்க சரியான மருத்துவமனை இல்லாததால்,பிருந்தா இப்போது இருக்கும் சென்னையில் பிரசவம் பார்க்க முடிவு செய்து விட்டார்கள்.
வளைகாப்பு முடிந்ததும் மீண்டும் அவளை சென்னையில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
கணவன் ராஜேஷ் பிரபல மருந்து கம்பனியின் விற்பனை பிரதிநிதி.
தினமும் சென்னை பட்டணத்தின்
ஒரு பகுதியை சுற்றி வர வேண்டும்.
குறிப்பாக அவனுக்கு மாலை நேரத்தில் வேலை அதிகமாக இருக்கும்.இது தான் அவனுடைய அன்றாட பணி.
பிருந்தா,காலையில் கணவனை அனுப்பி விட்டு டாக்டர் சொல்லி கொடுத்த,உடற்பயிற்சிகளை
செய்து முடித்து விட்டு ஒரு டம்ளர் ஜுஸ் தயார் செய்து எடுத்துக்
கொண்டு,சோஃபாவில் அமர்ந்து
தொலைக்காட்சியை உயிர் கொடுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தாள்.ஏதோ ஒரு தொடர் ஓடிக்கொண்டு இருந்தது.நடுவில்
Breaking news ஆந்திரா வில் மையம் கொண்டு இருந்த புயல் இப்போது சென்னை பக்கம் திரும்பி விட்டது.
மாலை ஐந்து மணி முதல் புயல் கரையை கடக்கும். கடும் மழையும்
சூறாவளி காற்றும் வீசும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்.இரவு பத்து மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று திரும்ப திரும்ப தொலைகாட்சி சொல்லிக்
கொண்டு இருந்தது .
செய்தியை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே,காற்று சற்று வேகமாக வீச தொடங்கியது.
மழை துளியும் தூற தொடங்கி விட்டது.
சென்னையில் மழை பெய்ய தொடங்கி விட்டால் எல்லாமே ஸ்தம்பித்து விடும்.போக்குவரத்து முற்றிலும் நின்று விடும்.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி விடும்.
செய்தியை தொடர்ந்து, நிவாரண முகாம் செயல்படும்,நீர் தேங்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாம் செல்ல அறிவுறுத்தினார்கள்.
பிருந்தா வசிக்கும் வீடு தாழ்வான பகுதியில் இருந்ததால். அவளுமே
முகாமுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் துணைக்கு யாருமில்லை.
கணவனை கூப்பிட்டு தகவல் சொல்ல,அவன் போன இடத்தில் மழையின் பாதிப்பு இல்லை.
மாத கடைசி,விற்பனை இலக்கை எட்டியாக வேண்டும்.இருந்தாலும் மாலை ஐந்து மணிக்குள் வந்து விடுகிறேன் என்று சொல்லி,
அவளை முகாமுக்கு சென்று தங்க சொல்லி விட்டான்.
மாலை அவனும் முகாமிற்கு வந்து விடுவதாக சொன்னான்.அவளும்
வரும் வழியில் மளிகை கடை திறந்து இருந்தால் கொஞ்சம் ரொட்டி,பால்,தீப்பெட்டி,மெழுகு
வர்த்தி போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கி வர சொல்லி இருந்தாள்.
பிருந்தாவுக்கு டாக்டர் இன்னும் பத்து நாட்களில் வலி வரலாம்.எப்போது வேண்டு
மானாலும் மருத்துவமனை வர தயாராக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.மருத்துவமனை சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.ஆனால் மெட்ரோ ரயில்
பணிக்காக,சாலை அடைப்பட்டு இருப்பதால் சுற்றி தான் போக வேண்டும்.
இவளுக்கு இந்த நேரத்தில் என்ன செய்வது என்று குழப்பம். தானே ஒரு முடிவு எடுத்து,ஒரு ஆட்டோ பிடித்து நேராக எப்போதும் பரிசோதனைக்கு செல்லும் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தாள்.தன்னுடைய நிலைமையை விளக்கி,புயல் அடித்து ஓயும் வரை அங்கு தங்கி இருக்க அனுமதி கேட்டாள்.
அவளை பார்க்கும் டாக்டரும் நிலைமையை புரிந்து கொண்டு
ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார்கள்.இந்த நிலையில் உங்களை தனியாக தங்க வைக்க நிர்வாகம் ஒத்துக்கொள்ளாது.
உடனே உங்கள் கணவரை இங்கு வர சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
கணவன் பிரபல மருந்து நிறுவனத்தில் பிரதிநிதி என்று பெயரை சொல்ல,மருத்துவமனை நிர்வாகம் சற்று செவி சாய்த்து.
தங்க அனுமதி கொடுத்தார்கள்.
பிருந்தா உடனே ராஜேசையை
அழைத்து ஒரு எச்சரிக்கை காரணம் எப்போதும் வழக்கமாக பார்க்கும் டாக்டரின் மருத்துவமனைக்கு வந்து இருப்பதாகவும்,இரண்டு நாளைக்கு இங்கேயே தங்கி விடலாம்,அதற்குள் பிரசவ வலி வந்தாலும் வரலாம்,முகாமுக்கு போனால், வலி வந்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது,ஆகையால் நீங்களும் நேராக மருத்துவ மனை வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டாள்.
அப்போதே மழையும் காற்றும் தொடங்கி விட்டது.நேரம் ஆக ஆக
மழை வலுக்க தொடங்கி விட்டது.
சக்கைபோடு போட்டுக்கொண்டு இருந்தது மழை.போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து விட்டதாக மருத்துவமனையில் பேசிக்
கொண்டார்கள்.ஆம்புலன்ஸ் கூட
மழை வெள்ளத்தில் மாட்டிக்
கொண்டதாக பேசிக்கொண்டு
இருந்தார்கள்.
பிருந்தா தொடர்ந்து ராஜேஷிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
அவனும் பல இடங்களில் சாலை துண்டித்து இருப்பதாகவும்,
எப்படியும் வந்து சேர்ந்து விடுவேன் என்று கூறிக்கொண்டு,இனி மேல் கூப்பிட வேண்டாம்,போனில் சார்ஜ் குறைந்து விட்டது.அவசரத்திற்கு பேச மட்டும் தான் முடியும் என்று சொல்லி விட்டான்.
இரவு மணி பத்து, பிருந்தா
லேசாக வலி வருவது போல உணர்ந்தாள். நர்சுக்கு சொல்ல அவரும் வந்து டிரிப் போடலாம்
வலி வருகிறதா பார்க்கலாம்
என்று சொல்லி விட்டு,கணவனை உடனே வர சொல்லுமா என்று கூறி விட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்று விட்டாள்.
பிருந்தா குறுஞ்செய்தி அனுப்பினாள்,ஆனால் அது அவனுக்கு போய் சேர்ந்த மாதிரி தெரியவில்லை.சரியென்று அவன் நம்பரை கூப்பிட,அவனும் எடுத்து விவரத்தை கேட்டு விட்டு,எங்கும்
நகர முடியாத அளவிற்கு வெள்ளம் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.மின்சாரமும் இல்லை
ஒரு வேளை இப்போது வர முடியாவிட்டால்,விடிந்ததும் வந்து விடுகிறேன்.நான் டாக்டரம்மா கூட பேசிக்கிறேன் என்று கூறி விட்டு
போனை துண்டித்து விட்டான்.
அவன் ஒதுங்கி இருந்த கட்டிடம் சற்று பழையது.கூட நின்று கொண்டு இருந்தவர்கள்,இங்கு நிற்க வேண்டாம், வேறு பாதுகாப்பான இடம் தேடுவோம் என்று கூட இருந்தவர்கள் சொல்ல
சரி என்று பைக்கை தள்ளிக்
கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு நகர்ந்தான்.வெள்ளம் வடிந்தால் போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்தாலும்,அவனுடைய வண்டியில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருந்தது.
மருத்துவமனை வரை செல்ல போதுமான பெட்ரோல் இல்லை.
அவனுக்கு இருந்த குழப்பத்தில்
சாக்கடை பார்த்து வா தம்பி என்று முன்னாடி சென்றவர் சொல்ல,அவனுக்கு இருந்த குழப்பத்தில் சரியாக கேட்கவில்லை. சரிய போன வண்டியை தாங்கி பிடிக்க,முயன்ற போது ஒரு கால் சாக்கடைக்குள் நழுவியது.நிற்க முடியாமல் தடுமாறி சாக்கடைக்குள் விழுந்தான்.சாக்கடை நீர் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாற
அவனை இழுத்து கொண்டு சாக்கடை நீர் வேகம் எடுத்தது.
அந்த வேகத்தில் குட்டிக்கரணம் அடித்தான்.காலை ஊன்றி எழுந்து நிற்க முயற்சி செய்ய,கால் எட்டவில்லை.தலை நீருக்குள் மூழ்கியது.மேலே வர காலை உதறினான்.முடியவில்லை
வாய்க்குள் நீர் புகுந்தது.நீரை குடித்துக்கொண்டே நிலை தடுமாற
சாக்கடை நீர் அவனை சுமந்து கொண்டு வேகம் எடுத்தது.அவனும் நினைவை இழந்தான்.
பிருந்தா வலி பொறுக்காமல் துடிக்க,பனிக்குடம் உடைந்து பிரசவ வலி தொடங்கி விட்டது.அவசரமாக
லேபர் அறைக்கு கொண்டு சென்றார்கள்.அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பொழுது விடிந்தது.வந்து விட்டானா என்று என்று நர்சை கேட்க,இன்னும் மழை நிற்கவில்லை மா என்று மட்டும் சொன்னாள்.
ராஜேஷ் உடல் சாலை ஓரம் ஒதுங்கி இருந்தது.கழுத்தில் மாட்டி இருந்த அடையாள அட்டை
அவனை இன்னார் என்று அடையாளம் காட்டியது.
அதிகாரிகள் அவன் வீட்டை தேடி சென்றனர்.வீடு பூட்டி இருந்தது.
அக்கம்பக்கத்தில் விசாரிக்க யாரும் அங்கு இல்லை.எல்லோரும் முகாமுக்கு சென்று விட்டனர்.
ஒன்றும் தெரியவில்லை.யாருக்கு செய்தி சொல்வது.இவனுடைய உறவினர் யார்,நண்பர் யார் என்று தெரியாமல் உடலை பிணவறையில் வைத்து விட்டு,அதிகாரிகள் அவன் வேலை பார்த்த நிறுவனத்திற்கு போன் செய்து தகவல் சொல்லி விட்டு மற்ற வேலையை கவனிக்க சென்று விட்டனர்.
குழந்தை பிறந்த நேரத்தில் அவன் உயிரும் பிரிந்து இருக்கிறது.
மழை நின்ற பிறகு,குழந்தை பிறந்த செய்தி கேட்டு பிருந்தாவின் பெற்றோர் மருத்துவ மனைக்கு ஓடி வந்தார்கள்.மாப்பிள்ளையை பற்றி கேட்க அவளும் வருவார் என்று சொல்லி விட்டு மயக்கம் ஆனாள்.
ராஜேஷ் வேலை பார்த்த மருந்து
கம்பனி இவனை அடையாளம் கண்டு செய்தித்தாளில் அவனுடைய படம் போட்டு இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.
அதை பார்த்து ஒரு நர்ஸ்,இது உங்க கணவரா என்று பிருந்தா விடம் காண்பித்து கேட்க,அதை பார்த்த அவளுக்கு மீண்டும் மயக்கம் வந்து விட்டது.
தகவல் அறிந்த பிருந்தா பெற்றோர்
அரசாங்க மருத்துவமனை சென்று அடையாளம் சொல்லி அவன் பிணத்தை வாங்கி வந்து அடக்கம் செய்தார்கள்.
அவன் நினைவாக அவனுடைய பெயரை குழந்தைக்கு சூட்டி
சென்னையே வேண்டாம் என்று பெற்றோருடன் கிராமத்திற்கு சென்று வாழ்ந்து பார்க்கலாம் என்று பெற்றோருடன் புறப்பட்டாள்.
பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளியில் வேலை தேடிக்கொண்டு
மாலை நேரங்களில் tution எடுத்து தன் மகனை காப்பாற்றி வருகிறாள்.
இப்போதும் மழை புயல் என்றால் அவளுக்கு நடுக்கம் வந்து விடுகிறது.
முற்றும்.
