மகிழ்ச்சி
மகிழ்ச்சி
அதிகாலை நேரம்.யாரோ சொன்னார்கள் நாள் முழுவதும்
மகிழ்ச்சியாக இருக்க,மூளைக்கு ஓய்வு கொடுக்க கூடாது என்று.அதை நினைத்த படி எழுந்தான் தீரன்.
தீரன் ஒரு பொறியியல் பட்ட தாரி.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் அவனை கொத்தி கொண்டு போக காத்து இருந்தன.அவ்வளவு திறமைசாலி.
ஆனால் அவனுக்கோ ஏதாவது ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விருப்பம்.திரு அப்துல்கலாம்,அந்த கனவை அவனிடம் விதைத்து இருந்தார்.
அவன் படித்து இருந்ததும் விண்வெளி பற்றி தான்.அதனால் தான் ஏவுகணை சோதனை செய்ய அவனுடைய அறிவு தேவை பட்டது.
உள்நாட்டில்,அல்லது வெளிநாட்டில் வேலை செய்வது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.
அதுவரை தான் படித்த கல்லூரியில் பேராசிரியர் உதவியுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தான்.
அன்று அவனுக்கு மகிழ்ச்சியை தரும் நாளாக அமைந்து இருந்தது.
காரணம்,அவனுடைய ஆராய்ச்சி
மத்திய அரசால் ஏற்க பட்டு அதை மேலும் விரிவு படுத்த நிதி ஒதுக்க பட்டு இருந்தது.உடனே தலைநகர் வந்து,பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை செயலக அதிகாரியை சந்திக்க அவனுக்கு தகவல் வந்து இருந்தது.
வீட்டிற்க்கு சென்று பெற்றோரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு,அடுத்த இரு தினங்களில் தலைநகர் செல்ல,ஏற்பாடுகளை செய்ய துவங்கினான்.
